வக்ர சனியின் ஆட்டம்.. டிசம்பர் வரை ஆபத்தான காலக்கட்டம்.. இந்த 5 ராசிகள் உஷார்!
Shani Vakra Peyarchi: வக்கிர சனியால் டிசம்பர் 11ஆம் தேதி வரை 5 ராசிக்காரர்கள் உஷாராக இருக்க வேண்டும். எதிர்மறையான ஆற்றல் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே, அவை எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்பது குறித்து பார்ப்போம்.
Shani Vakra Peyarchi: ஜோதிடத்தில் நீதிக்கடவுள் என்று அழைக்கப்படுகிறார் சனி பகவான். சனி பகவான் ஒவ்வொரு இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறையும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். சனியின் பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். சனி பகவான் தற்போது மீன ராசியில் இருக்கிறார். அதுவும் மீன ராசியில் வக்ர நிலையில் பெயர்ச்சி அடைந்து வருகிறது. மேலும், சனி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் இருக்கிறார். சனியின் வக்ர நிலை டிசம்பர் 11ஆம் தேதி வரை தொடரும். டிசம்பர் மாதம் 11ஆம் தேதி வரை சனி வக்ர நிலையில் இருப்பதால் சில ராசிக்காரர்கள் உஷாராக இருக்க வேண்டும். அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து பார்ப்போம்.
ரிஷபம் (Taurus Zodiac Sign)
சனியின் வக்ர நிலையால் ரிஷப ராசிக்காரர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்படலாம். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. பண விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக செயல்பட வேண்டும். வேலையில் பணிச்சுமை அதிகரிக்கக்கூடும். மேலதிகாரிகளிடம் பேசும்போது உங்கள் பேச்சில் கவனமாக இருங்கள். வியாபாரத்தில் அவசர முடிவுகளை எடுக்காதீர்கள். குடும்பத்திற்குள் சிறிய விஷயங்களுக்காக வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.
மிதுனம் (Gemini Zodiac Sign)
சனியின் வக்ர நிலையால் மிதுன ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் வேலையில் சற்று சவாலானதாக இருக்கலாம். வேலையில் பொறுப்புகள் அதிகரிக்கக்கூடும், மேலும் சில சிரமங்களும் ஏற்படலாம். பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். வேலை மாற்றம் குறித்த அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். தொழிலதிபர்கள் எந்தவொரு பெரிய ஒப்பந்தங்களையும் கவனமாகப் பரிசீலிக்க வேண்டும். மேலும், உங்கள் உடல் நலனில் கூடுதல் கவனம் தேவை. அடிக்கடி வெளியூர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. டிசம்பர் மாதத்திற்கு பிறகு, திருமணம் வரன் கைக்கூடும்.
துலாம் (Libra Zodiac Sign)
சனியின் வக்ர நிலையால் துலாம் ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். சொத்து தொர்பான விஷயங்களில் அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். பணி, தொழில் தொடர்பான விஷயங்களில் அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். பணியிட மாறுதலுக்கு இப்போது உகந்த நேரம் இல்லை. மற்றவர்களின் தூண்டுதலால் வேலையில் எந்தத் தவறான முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்கவும். நிதி விஷயங்களுக்காக ஒரு வரவு செலவுத் திட்டத்தைப் பராமரிக்கவும். செலவுகள் அதிகரிக்கும். முதலீடு செய்யும் பலமுறை யோசித்து செயல்பட வேண்டும்.
மகரம் (Capricorn Zodiac Sign)
சனியின் வக்ர நிலையால் மகர ராசிக்காரர்களுக்கு எதிர்மறையான ஆற்றல் உண்டாகும். தடங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. தொலைதூர பயணம் மேற்கொள்வீர்கள். எந்த வேலையையும் முடிக்காமல் விட்டுவிடாதீர்கள். வணிகர்கள் நிதிப் பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடுங்கள்.. கோபத்தை குறைக்க வேண்டும். வீண் செலவுகளை தவிர்ப்பது சிறந்தது. எந்த ஒரு காரியத்தையும் அவசரமாக செய்ய வேண்டாம். இருப்பினும், பழைய கடன்கள் அடையும். குடும்பத்திலும் சுப காரியங்கள் நடக்க உள்ளது.
கும்பம் (Aquarius Zodiac Sign)
சனி வக்ர நிலையால் கும்ப ராசிக்காரர்கள் பண விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்தக் காலகட்டத்தில் தேவையற்ற செலவுகள் அதிகரிக்கக்கூடும். கடன் கொடுப்பதற்கு முன் கவனமாக யோசியுங்கள். பணியில் இருப்பவர்கள் தங்கள் வேலையில் அலட்சியம் காட்டுவதைத் தவிர்க்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களுடன் உரையாடும்போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். தேவையற்ற விவாதங்களை தவிர்க்க வேண்டும். அவசரமான முடிவுகளை எடுப்பதை தவிர்க்க வேண்டும். பெற்றோர், உறவினரின் உடல்நலனில் கவனம் தேவை. தொலைதூர பயணம் மேற்கொள்வதை இந்த காலக்கட்டத்தில் தவிர்க்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை)