• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /ஆன்மீகம்
  • /சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு ராஜவாழ்க்கை.. தொழில், வேலையில் வெற்றி

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு ராஜவாழ்க்கை.. தொழில், வேலையில் வெற்றி

Shukra Nakshatra Peyarchi: சுக்கிரன் பகவான் அக்டோபர் 24ஆம் தேதி சித்திரை நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடைய உள்ளார். இதனால், 4 ராசிகளுக்கு பண ஆதாயம், செல்வம் கிடைக்கும். எனவே, அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

Written ByUmabarkavi K
Published: Oct 21, 2026, 09:09 AM IST|Updated: Oct 21, 2026, 09:24 AM IST
joinshare
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு ராஜவாழ்க்கை..  தொழில், வேலையில் வெற்றி

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
பைனான்ஸ் வித் ஹரிஷ் தற்கொலை: சைபர் புல்லியிங் காரணமா? நடந்தது என்ன?

பைனான்ஸ் வித் ஹரிஷ் தற்கொலை: சைபர் புல்லியிங் காரணமா? நடந்தது என்ன?

2

தமிழ்நாடு முழுவதும் அதி கனமழை: சென்னைக்கு Flash Flood அபாயம்? IMD எச்சரிக்கை

3

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு ராஜவாழ்க்கை.. தொழில், வேலையில் வெற்றி

4

8வது ஊதியக் குழு: பணிக்கொடை வரம்பில் ஏற்றம்? அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அப்டேட்

5

செஞ்சி சிறுமி எங்கே? 10 நாளாகியும் துப்பு கிடைக்கல.. போலீஸ் படையை திணற விடும் மர்மம்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Shukra Nakshatra Peyarchi: ஜோதிடத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாக சுக்கிரன் அறியப்படுகிறார். சுக்கிரன் 30 நாட்களுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைவார். அதே நேரத்தில் குறிப்பிட்ட நாட்களின் இடைவெளியில் தங்கள் நட்சத்திரத்தையும் சுக்கிரன் மாற்றி வருகிறார். சுக்கிரன் நிலை 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், சுக்கிரன் அக்டோபர் 24ஆம் தேதி நட்சத்திர பெயர்ச்சி அடைகிறார். சுக்கிரன் அக்டோபர் 24ஆம் தேதி சித்திரை நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைகிறார். டிசம்பர் 5ஆம் தேதி வரை சித்திரை நட்சத்திரத்தில் சுக்கிரன் நிலைத்திருப்பார். இதனால், 4 ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டம் பெருகும். எனவே, அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

மிதுனம் (Gemini Zodiac Sign)

சுக்கிரன் பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்கள் செல்வம், அதிர்ஷ்டத்தை கொடுக்கும். சுப பலன்களை மிதுன ராசிக்காரர்கள் பெறுவார்கள். இந்த பெயர்ச்சி அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும். உங்கள் நிதி நிலைமை மேம்படும். பண ஆதாயங்களுக்கான வாய்ப்பு உள்ளது. நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியில்  முடியும். இந்த காலக்கட்டத்தில் வியாபாரம் செழிக்கும். முதலீடுகள் மூலம் கணிசமான நிதி ஆதாயங்களை பெறுவீர்கள். 

உறவுகள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். எதிர்பாலினத்தவரால் ஆதாயம் அடைவீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். பழக்க வழக்கங்களில் சில மாற்றம் உண்டாகும். சமூகப் பணிகளில் அங்கீகாரம் கிடைக்கும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். புதிய துறை சார்ந்த அறிமுகம் கிடைக்கும். கணவன்-மனைவியிடையே நெருக்கம் அதிகரிக்கும். திறமைகள் மூலம் மதிப்புகள் உயரும்.

மேலும் படிக்க: அக்டோபர் 28ல் சுக்கிரன் உதயம்: இந்த 3 ராசிகளுக்கு ஜாக்பாட்!

மகரம் (Capricorn Zodiac Sign)

சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்களுக்கு மிகவும் சுபமாக அமையும். உங்கள் தொழிலில் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள காதல் அடுத்த கட்டமான திருமணத்திற்கு செல்ல வாய்ப்புள்ளது. வேலையில் பதவி உயர்வுகள் கிடைக்க உள்ளது. வெளிநாட்டில் வேலை தேடும் உங்கள் கனவு நனவாகலாம். இந்த காலக்கட்டத்தில் நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறும். திடீர் நிதி ஆதாயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. 

வியாபார பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். வெளிவட்டத்தில் கௌரவம் மேம்படும். கமிஷன் துறைகளில் ஆதாயம் அடைவீர்கள். கலகலப்பான பேச்சுக்கள் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். பழக்கவழக்கங்களில் சிறுசிறு மாற்றங்கள் உருவாகும். மனதை உருத்திய சில கவலைகள் விலகும். பொருளாதார தொடர்பான சிக்கல்கள் குறையும். பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள்.

மேலும் படிக்க: அக்டோபர் 28ல் சுக்கிரன் உதயம்: இந்த 3 ராசிகளுக்கு ஜாக்பாட்!

கும்பம் (Libra Zodiac Sign)

சுக்கிரன் பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்கள் சுப பலன்களை பெறுவார்கள். திடீர் பண ஆதாயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் நிதி நிலைமை கணிசமாக வலுப்பெறம். ஏதேனும் ஒரு முயற்சியில் குறிப்பிடத்தக்க வெற்றி பெறுவதற்கான வாய்ப்புள்ளது.  உறவினர்கள் வழியில் நல்ல செய்திகளை கேட்பீர்கள். வெளிநாட்டில் வேலை கிடைப்பதற்கான சாதகமான அறிகுறிகள் உள்ளன. உங்கள் பழைய கடன் தீரக்கூடும். 

மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் மாற்றங்கள் உருவாகும். புது விதமான துறைகள் மீது ஆர்வம் உண்டாகும். இழுபறியிலிருந்த வழக்கு ஓர் முடிவுக்கு வரும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உடல் ஆரோக்கிய விஷயங்களில் கவனம் வேண்டும். முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். சிறு தூர பயணம் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். விளையாட்டு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும்.

துலாம் (Aquarius Zodiac Sign)

சுக்கிரன் பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களுக்கு நன்மை உண்டாகும். நீங்கள் நல்ல செய்திகளைக் கேட்கலாம். உங்கள் நிதி நிலைமை மேம்பட வாய்ப்புள்ளது. நினைத்த காரியங்கள் நிறைவேறும். பணியில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். வருமான உயர வாய்ப்புள்ளது. பங்குச்சந்தை முதலீடுகளில் இருந்து எதிர்பாராத லாபத்தை பார்ப்பீர்கள். கூட்டுத் தொழிலில் முன்னேற்றம் இருக்கும். தொலைதூர பயணம் மேற்கொள்வீர்கள். 

வீடு, நிலம், வாகனம், நகை வாங்கும் யோகம் சிறப்பாக உள்ளது. வியாபாரத்தில் நல்ல லாபத்தைக் காணலாம். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். வெளிவட்டத்தில் மதிப்புகள் உயரும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பயணம் தொடர்பான முயற்சிகள் கைகூடும்.

மேலும் படிக்க: சனி பகவானுக்கு பிடித்த ராசிகள் இவைதான்: அதிகம் படுத்தாமல் அருள் மழை பொழிவார் சனி

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Peyarchi