• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /செஞ்சி சிறுமி எங்கே? 10 நாளாகியும் துப்பு கிடைக்கல.. போலீஸ் படையை திணற விடும் மர்மம்!

செஞ்சி சிறுமி எங்கே? 10 நாளாகியும் துப்பு கிடைக்கல.. போலீஸ் படையை திணற விடும் மர்மம்!

Gingee Child Missing Case Update: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மாயமான 7 வயது சிறுமியை 10 நாட்களாகியும் போலீசார் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. 3 டிஎஸ்பிக்கள் தலைமையில் 9 தனிப்படைகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட போலீசார் தேடியும் எந்த தடயமும் கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர்.

Written ByUmabarkavi K
Published: Oct 21, 2026, 08:20 AM IST|Updated: Oct 21, 2026, 08:40 AM IST
joinshare
செஞ்சி சிறுமி எங்கே? 10 நாளாகியும் துப்பு கிடைக்கல.. போலீஸ் படையை திணற விடும் மர்மம்!

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு ராஜவாழ்க்கை..  தொழில், வேலையில் வெற்றி

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு ராஜவாழ்க்கை.. தொழில், வேலையில் வெற்றி

2

8வது ஊதியக் குழு: பணிக்கொடை வரம்பில் ஏற்றம்? அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அப்டேட்

3

செஞ்சி சிறுமி எங்கே? 10 நாளாகியும் துப்பு கிடைக்கல.. போலீஸ் படையை திணற விடும் மர்மம்!

4

தோனி கொடுத்த டிப்ஸ்... பந்துவீச்சில் உதவியது எப்படி? - சாய் கிஷோர் பகிர்ந்த சீக்ரெட்

5

தொடர் கனமழை: சென்னை உள்பட 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Gingee Child Missing Case Update: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமம் குளக்கரை தெருவில் வசித்து வருபவர் வடிவேலு. கூலி தொழிலாளியான இவருக்கு பவானி என்ற மனைவியும் 18 வயதில் ஒரு மகளும், 7 வயதில் ஒரு மகளும்  உள்ளனர். இதில், 7 வயது சிறுமி ஹேமாவதி அரசுப் பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த அக்டோபர் 11ஆம் தேதி  7 வயது சிறுமிக்கு பிறந்த நாள். 

செஞ்சியில் காணாமல் போன 7 வயது சிறுமி

இதனால், அன்றைய தினம் இரவில் வீட்டில் குடும்பத்தினர் கேக் வெட்டி பிறந்த நாள் விழாவை கொண்டாடினர். பிறகு வழக்கம்போல், பெற்றோருடன் சிறுமி தூங்கியுள்ளார். இதனை தொடர்ந்து, காலை எழுந்து பார்த்ததும் சிறுமி காணாமல் போனதை கண்டு, பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமி ஹேமாவதி கிடைக்காததால் தனது மகள் ஹேமாவதி காணவில்லை என தந்தை வடிவேல், சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதனையடுத்து விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மதிவாணன் தலைமையிலான போலீசார், சிறுமி மாயமான ஆலம்பூண்டி கிராமத்தைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலும் சிறுமியை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபடுகின்றனர். மோப்ப நாய், ட்ரோன் கேமரா உதவியுடம் சிறுமியை தீவிரமாக தேடுகின்றனர். 

600 செல்போன் எண்கள், 100க்கும் மேற்பட்ட போலீஸ் படை

அப்போதும் மாயமான சிறுமி குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் 3 டிஎஸ்பிக்கள் தலைமையில் 9 தனிப்படைகளை அமைத்து 100க்கும் மேற்பட்ட போலீசார், காணாமல் போன சிறுமியை தொடர்ந்து தேடி வருகின்றனர். பல்வேறு இடங்களிலும் போலீசார் தேடியும், சிறுமியின் பெற்றோர், உறவினர்கள், அக்கம், பக்கத்தினர் மற்றும் கிராம பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரிடம் தீவிர விசாரணை நடத்தியும் இதுவரை மாயமான சிறுமி குறித்து எந்தவிதமான சிறு தடயமும் கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர். 

சிறுமி காணாமல் போய் 10 நாட்கள் ஆகுகிறது. இறு வரை போலீசாருக்கு எந்த துப்பும் கிடைக்கிவில்லை. விசாரணையின் ஒரு பகுதியாக, சுமார் 600 கைபேசி எண்கள் பல்வேறு கோணங்களில் ஆராயப்பட்டு வருகின்றன. சிசிடிவி காட்சிகளும் பகுப்பாய்வு செய்யப்பட்டு வருகின்றன என்று போலீசார் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.

இதில் சிறுமியின் தாய் பவானி ஒரு சில தகவல்களை மறைப்பதாக போலீசாருக்கு சந்தேகம் வலுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மாயமான சிறுமியின் தாய் பவானியிடம் அறிவியல் ரீதியிலான உண்மை கண்டறியும் சோதனை  நடத்தப்பட்டதாக தெரிகிறது. சிறுமி காணாமல் போனது குறித்து அவரது தாய் கூறுகையில், " அன்று இரவு சுமார் 7 மணியளவில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினோம். 

தாய் மீது வலுக்கும் சந்தேகம்

பிறந்தநாளுக்காக வந்திருக்க உறவினர்களுடன் 9 மணிவரை பேசிக் கொண்டிருந்தோம். உறவினர்கள் இருக்கும்போதே மகள் உறங்கிவிட்டாள். அவர்கள் சென்ற பிறகு சுமார் 9.30 மணியளவில் தூங்க சென்றேன். என் அருகில் தான் மகள் உறங்கிக் கொண்டிருந்தார். என் குழந்தை என் கூட தான் இரவு தூங்கிக் கொண்டிருந்தாள். நான் 11 மணி வரை தூங்கவில்லை. 11 மணி வரை என் கணவர் தூங்க வரவில்லை. 

அதன்பிறகு, 12 மணியளவில் என் கணவர் வந்தார். வீட்டின் முன்பக்கம் கதவை தாழிடும் பக்கம் இல்லை.  அதன்பிறகு, காலையில் 5 மணிக்கு எழுந்து பார்க்கும்போது சிறுமி காணாவில்லை. ” எனக் கூறி இருக்கின்றனர். இருந்தாலும் சிறுமியின் தாய் மீது பெற்றோருக்கு சந்தேகம் நீடித்து வருகிறது. அவரை தொடர்ந்து போலீசார் கண்காணிப்பிலேயே வைத்துள்ளனர். 10 நாட்களாகியும் சிறுமி கிடைக்காததால், எதிர்க்கட்சி தொடர்ந்து தவெக அரசை கேள்வி எழுப்பி வருகின்றனர்.  

எதிர்க்கட்சியினர் கேள்வி

இது தொடர்பாக கனிமொழி எம்பி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, "செஞ்சியில் ஏழு வயதுச் சிறுமி காணாமல் போய் ஒன்பது நாட்களாகியும், குழந்தை குறித்த எந்தத் தகவலும் கிடைக்காததால் பெற்றோர் செய்வதறியாது தவித்துக் கொண்டிருக்கின்றனர். 

ஒன்பது நாட்களாகியும் குழந்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், காவல்துறையை வைத்துக்கொண்டு முதலமைச்சர் என்ன செய்துகொண்டிருக்கிறார்? பெண்களுக்கு அண்ணனாகவும் அரணாகவும் இருப்பேன் என்று வசனம் பேசிய முதலமைச்சர் விஜய் அவர்கள், இந்த குற்றச்சம்பவங்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? என கேள்வி எழுப்பி இருக்கிறார்.
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Crime