SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

சுக்கிரன் பெயர்ச்சி: புத்தாண்டு வரை 4 ராசிகளுக்கு நல்ல காலம்.. பணம், புகழ் கொட்டும்

Shukra Peyarchi: சுக்கிரன் நவம்பர் 22ம் தேதியான இன்று தனது ராசியை மாற்ற உள்ளார். மேஷம், துலாம் உட்பட 4 ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டத்தை கொடுக்கும். எனவே, அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

Written By Umabarkavi K
Published: Nov 22, 2026, 08:30 IST | Updated: Nov 22, 2026, 08:39 IST
Join

Shukra Peyarchi: ஜோதிடத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாக சுக்கிரன் அறியப்படுகிறார். சுக்கிரனின் பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சுக்கிரன் 30 நாட்களுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அந்த வகையில், சுக்கிரன் இன்று பெயர்ச்சி அடைய உள்ளார். சுக்கிரன் நவம்பர் 22 ஆம் தேதியான இன்று மாலை 5.38 மணிக்கு துலாம் ராசியில் பெயர்ச்சி அடைய உள்ளார். 2027 ஜனவரி ஒன்றாம் தேதி வரை துலாம் ராசியில் சுக்கிரன் பயணிப்பார். சுக்கிரனின் இந்த பெயர்ச்சி சில ராசிகளுக்கு நேர்மையான ஆற்றலை கொடுக்கும். அவை என்னென்ன ராசிகள் என்று குறித்து பார்ப்போம்.

சிம்மம் (Leo Zodiac Sign)

சுக்கிரன் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு 40 நாட்களுக்கு நிம்மதியைத் தரும்.  நண்பர்கள் பற்றிய புரிதல்கள் ஏற்படும். மனதளவில் இருந்த சோர்வுகள் குறையும். தன வரவுகளில் ஏற்ற இறக்கம் உண்டாகும். உயர் பொறுப்புகள் மூலம் மதிப்புகள் உயரும். சில அனுபவங்கள் மூலம் புதிய பாதைகள் புலப்படும். ஆன்மீகப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் அமையும்.

விலகி சென்றவர்கள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். வேலையாட்களிடம் அனுசரித்து செல்லவும். கணவன் மனைவியிடையே விட்டுக்கொடுத்துச் செல்லவும். எதிர்பாராத சில விரயங்கள் உண்டாகும். கால்நடை பணிகளில் கவனம் வேண்டும். மனதில் நேர்மறை எண்ணங்களுடன் செயல்படவும். அலுவலகத்தில் அலைச்சல்கள் மேம்படும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் குறையும். எதிர்பார்த்த சில வரவுகள் சாதகமாகும். இழுபறியான வேலைகளை முடிப்பீர்கள்.

விருச்சிகம் (Scorpio Zodiac Sign)

துலாம் ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி அடைவது விருச்சிக ராசிக்காரர்களுக்கு நிதி நிலைமை மாறும். நினைத்த காரியங்கள் நடைபெறும். செயல்களில் இருந்த தடைகள் விலகும். வித்தியாசமான பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும்.

சுபகாரியப் பேச்சுவார்த்தைகள் கைகூடி வரும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். எதிர்காலம் சார்ந்த சில பணிகளை மேற்கொள்வீர்கள். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். பயனற்ற செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் அமையும். வியாபாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். புதுவிதமான இலக்குகள் பிறக்கும்.

துலாம் (Libra Zodiac Sign)

சுக்கிரன் துலாம் ராசியில் பெயர்ச்சி அடைவது வாழ்வில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். மனதளவில் தெளிவுகள் ஏற்படும். குடும்பத்தில் ஆதரவு உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் மதிப்புகள் உயரும். வியாபாரத்தில் ஏற்பட்ட சரிவை சரிசெய்வதற்கான சூழல்கள் உருவாகும். தவறிய சில பொருள்கள் கிடைக்கும்.

சேமிப்பு சார்ந்த எண்ணங்கள் மேம்படும். வாக்குறுதிகள் அளிப்பதில் கவனம் வேண்டும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். கல்வி பணிகளில் மேன்மை உண்டாகும். தாய்மாமன் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உருவாகும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.

தனுசு (Sagittarius Zodiac Sign)

சுக்கிரன் தனுசு ராசியின் 11வது வீட்டில் பெயர்ச்சி அடைகிறார். இது உங்கள் குடும்பத்தில் சுப காரியங்களை கொடுக்கும். வெளியூரிலிருந்து சாதகமான செய்திகள் கிடைக்கும். உறவினர்கள் வழியில் ஆதாயம் ஏற்படும். தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். பயனற்ற செலவுகளை குறைப்பீர்கள். திடீர் பயணங்கள் ஏற்படும். குடும்பத்தில் சிறுசிறு விவாதங்கள் தோன்றி மறையும். புதுவிதமான உணவுகளில் ஆர்வம் ஏற்படும்.

புதிய முயற்சிகளில் பொறுமையுடன் செயல்படவும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும். உத்தியோகத்தில் சாதகமற்ற சூழல்கள் அமையும். வியாபாரத்தில் நயமான பேச்சுகள் மதிப்பை மேம்படுத்தும். எதையும் சமாளிக்கும் மனவலிமை உருவாகும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கலைப் பணிகளில் திறமைகள் வெளிப்படும்.

(பொறுப்பு துறப்பு: இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

ZEENEWS TRENDING STORIES