SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

சுக்கிரன் பெயர்ச்சி: புத்தாண்டின் தொடக்கத்திலேயே பட்டையை கிளப்பப்போகும் 5 ராசிகள் இவைதான்

Sukran Peyarchi Palangal: ஜனவரி 1ம் தேதி சுக்கிரன் இந்த ராசியில் பிரவேசித்து 29ம் தேதி வரை இங்கேயே இருப்பார். ஆண்டின் முதல் நாளிலேயே நடக்கும் சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகமான நன்மைகள் நடக்கும். இவர்கள் வாழ்வில் இது ஒரு பொற்காலமாய் ஜொலிக்கும்.

Written By Sripriya Sambathkumar
Published: Nov 18, 2026, 13:22 IST | Updated: Nov 18, 2026, 14:10 IST
Image Credit: Venus Transit on January 1
Join

Venus Transit: இன்னும் சில நாட்களில் 2027 ஆம் ஆண்டு தொடங்கவுள்ளது. இந்த ஆண்டு ஜோதிட ரீதியாக மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். குறிப்பாக, 2027 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே சுக்கிரன் பெயர்ச்சி ஆகவுள்ளார். இது இந்த ஆண்டிற்கு சிறப்பான ஆரம்பத்தை அளிக்கவுள்ளது.

ஜனவரி 1 சுக்கிரன் பெயர்ச்சி

புத்தாண்டு தொடங்கும் போதே செல்வம், அன்பு மற்றும் மகிழ்ச்சியின் காரணி கிரகமான சுக்கிரன் தனது ராசியை மாற்றி செவ்வாயின் விருச்சிக ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். ஜனவரி 1ம் தேதி சுக்கிரன் இந்த ராசியில் பிரவேசித்து 29ம் தேதி வரை இங்கேயே இருப்பார். ஆண்டின் முதல் நாளிலேயே நடக்கும் சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகமான நன்மைகள் நடக்கும். இவர்கள் வாழ்வில் இது ஒரு பொற்காலமாய் ஜொலிக்கும்.

புத்தாண்டின் தொடக்கம் அற்புதமாக அமையவுள்ள ராசிகள்

சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கத்தால் 5 ராசிக்காரர்கள் அற்புதமான நன்மைகளை பெறுவார்கள். செவ்வாய் மற்றும் சுக்கிரன் இடையேயான உறவு நடுநிலையாக கருதப்படுகிறது. அவர்களுக்குள் பகையோ, நட்போ இல்லை. அத்தகைய சூழ்நிலையில், சுக்கிரன் பெயர்ச்சியால் பலன்களைப் பெறும் ஐந்து ராசிக்காரர்கள் தங்கள் நிதி நிலைமை மற்றும் உறவுகளில் முன்னேற்றம் காணலாம். இந்த பெயர்ச்சி வணிக வகுப்பினருக்கும் நல்ல லாபத்தைக் கொண்டுவரும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இங்கே காணலாம்.

மேலும் படிக்க | செவ்வாய் - கேது சேர்க்கை.. 3 ராசிகளுக்கு நேரம் சரியில்லை! இந்த விஷயங்களில் எச்சரிக்கை தேவை

ரிஷபம் (Taurus):

விருச்சிக ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். உறவுகளிலும் முன்னேற்றம் ஏற்படும். சில வேலைகளில் இதுவரை இருந்த குழப்பங்களுக்கு இனி வரும் காலத்தில் நிவாரணம் கிடைக்கும். வாழ்வில் நல்ல மாற்றம் காணப்படும். வேலை தேடிக்கொண்டிருக்கும் ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நீங்கள் சில புதிய வேலை தொடர்பான பொறுப்புகளைப் பெறலாம். கூட்டுத் தொழிலில் வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கும்.

சிம்மம் (Leo):

சுக்கிரன் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு புத்தாண்டு தொடக்கத்தில் நல்ல பலன்களை அளிக்கும். வாழ்வில் வசதிகள் பெருகும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள அனைத்து பணிகளும் வெற்றிகரமாக நிறைவடையும். குடும்பச் சூழல் முன்பை விட சிறப்பாக இருக்கும். வேலை மாற விரும்புபவர்கள் புதிய நம்பிக்கையைப் பெறலாம். உங்களின் கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் பயண வாய்ப்புகளும் உள்ளன.

மேலும் படிக்க | குரு பெயர்ச்சி: 2027ல் இந்த 4 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்.. செல்வம், பொன் குவியும்

துலாம் (Libra):

துலாம் ராசிக்காரர்களும் 2027ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடக்கவிருக்கும் இந்த சுக்கிரன் பெயர்ச்சியால் பலன் அடைவார்கள். இதன் தாக்கத்தால் வாழ்வில் அதிக நம்பிக்கை அதிகரிக்கும். வேலையின் மூலம் ஒரு புதிய அடையாளம் உருவாகும். உங்களது கருத்துக்களை மற்றவர்களுக்கு எளிதாக எடுத்துரைப்பீர்கள். குழந்தைகளால் நன்மை உண்டாகும். படைப்பாற்றல் சார்ந்த துறையில் உள்ளவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் உள்ள பழைய தவறான புரிதல்கள் தீர்க்கப்படலாம். அத்தகைய சூழ்நிலையில், உறவு முன்பை விட வலுவாக இருக்கும்.

விருச்சிகம் (Scorpio):

சுக்கிரன் பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்கார்ரகள் பல நன்மைகளைப் பெறுவது நிச்சயம். நீங்கள் சொந்தமாக சில வேலைகளைத் தொடங்க விரும்பினால், சரியான திசையைப் பெறுவது எளிதாக இருக்கும். நிலுவையில் உள்ள பணமும் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்படும். அனுபவம் வாய்ந்த நபரின் ஆலோசனை மற்றும் உங்கள் புரிதலுடன் பணம் தொடர்பான நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் இனிமையாக பொழுதைக் கழிப்பீர்கள்

மகரம் (Capricorn):

சுக்கிரன் பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு அனுகூலமான நன்மைகளை அளிக்கும். நிதி நிலைமையின் அடிப்படையில் மகர ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் சஞ்சாரம் சிறப்பாக இருக்கும். பழைய அறிமுகம் மூலம் புதிய வாய்ப்பு கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படும். வேலையில் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. குழந்தைகளால் மகிழ்ச்சி கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ராகு, கேது பெயர்ச்சி: 4 ராசிகளின் தலைவிதி மாறும்... டிசம்பர் 5 முதல் கோடீஸ்வர யோகம்
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.
Read More

ZEENEWS TRENDING STORIES