• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /ஆன்மீகம்
  • /சுக்கிரன் பெயர்ச்சி: 5 ராசிகளுக்கு லாபம், மகிழ்ச்சி, அதிர்ஷ்டம்.. நல்ல காலம் ஆரம்பம்

சுக்கிரன் பெயர்ச்சி: 5 ராசிகளுக்கு லாபம், மகிழ்ச்சி, அதிர்ஷ்டம்.. நல்ல காலம் ஆரம்பம்

Sukran Peyarchi Palangal: சுக்கிரன் பணம், புகழ், வசீகரம், ஆடம்பர வாழ்க்கை, செல்வம், சொகுசு, சுகபோகங்கள், மகிழ்ச்சி, செழிப்பு ஆகியவற்றுக்கு காரணி கிரகமாக கருதப்படுகிறார். சுக்கிரன் பெயர்ச்சி அனைத்து ராசிகளிலும் இந்த காரணிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

Written BySripriya Sambathkumar
Published: Aug 11, 2026, 01:30 PM IST|Updated: Aug 11, 2026, 01:37 PM IST
joinshare
சுக்கிரன் பெயர்ச்சி: 5 ராசிகளுக்கு லாபம், மகிழ்ச்சி, அதிர்ஷ்டம்.. நல்ல காலம் ஆரம்பம்
Image Credit: Sukran Peyarchi Palangal (Representative Photo)

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambathkumar

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
பம்புசெட் வாங்க ரூ.21,000 வரை மானியம்: விவசாயிகளுக்கு அரசின் பம்பர் அறிவிப்பு

பம்புசெட் வாங்க ரூ.21,000 வரை மானியம்: விவசாயிகளுக்கு அரசின் பம்பர் அறிவிப்பு

2

மதுராந்தகம் இடைத்தேர்தல்: அதிமுக 3வது இடத்திற்கு போனது எப்படி? பாமக ஒரு காரணமா?

3

Madurantakam By-Election: மரகதம் குமரவேல் முன்னிலை.. தவெக எழுச்சிக்கு பாமக, விசிக வாக்குகள் காரணமா?

4

ISRO வேலைவாய்ப்பு: மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

5

ரேஷன் கார்டு இருக்கா? இந்த வசதி இருப்பதை மறக்காதீங்க.. ONORC மூலம் கிடைக்கும் முக்கிய நன்மை

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Sukran Peyarchi Palangal: வாழ்வில் நாம் பெறும் சுக போகங்களுக்கு காரணி கிரகமாக கருதப்படும் சுக்கிரன் செப்டம்பர் 2-ஆம் தேதி துலாம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் சில ராசிகளின் வாழ்வில் மிகப்பெரிய அளவில் நன்மைகள் நடக்கவுள்ளன. இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.

சுக்கிரன் பணம், புகழ், வசீகரம், ஆடம்பர வாழ்க்கை, செல்வம், சொகுசு, சுகபோகங்கள், மகிழ்ச்சி, செழிப்பு ஆகியவற்றுக்கு காரணி கிரகமாக கருதப்படுகிறார். சுக்கிரன் பெயர்ச்சி அனைத்து ராசிகளிலும் இந்த காரணிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

சுக்கிரன் பெயர்ச்சி

சுக்கிரன் செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி துலாம் ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். நவம்பர் 6-ஆம் தேதி வரை அவர் இந்த ராசியில் தங்குவார். துலாம் ராசியில் சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிக ஆதாயங்கள் ஏற்படும். சுக்கிரனின் சஞ்சாரம் இந்த ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாக அமையும். சமூகத்தில் இவர்களது மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்

சுக்கிரன் பெயர்ச்சியால் அட்டகாசமான நன்மைகளை அடையவுள்ள ராசிகள்

ராசிகள்பலன்கள்
மேஷம்வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் அதிகரிக்கும்
மிதுனம்நிதி நிலை மேம்படும்
துலாம்குழந்தைகள் மூலம் நன்மை கிடைக்கும்
தனுசுவருமானம் அதிகரிக்கும்
கும்பம்ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும்

மேஷம் (Aries): வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் அதிகரிக்கும்

மேஷ ராசியில் பிறந்தவர்கள் சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கத்தால் கணிசமான நன்மைகளைப் பெறுவார்கள். மேஷ ராசிக்காரர்கள் தொழிலில் லாபத்தைக் காண்பார்கள். வேலை தேடிக்கொண்டிருக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மேலும் குடும்ப வாழ்க்கைக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். அவர்களின் திருமண வாழ்க்கையில் இணக்கம் நிலவும். நிலுவையில் உள்ள பணிகள் நிறைவடையும். நிதி நிலை மேம்படும். வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் அதிகரிக்கும்.

மிதுனம் (Gemini): நிதி நிலை மேம்படும்

சுக்கிரன் பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும். இந்தப் பெயர்ச்சியால் அவர்கள் தங்கள் வேலையில் வெற்றியை அடைவார்கள். அவர்களின் நிதி நிலை மேம்படும். மாணவர்களுக்கும் இது ஒரு நல்ல காலமாக அமையும்; அவர்கள் தங்கள் படிப்பில் நேர்மறையான முடிவுகளைக் காண்பார்கள். படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே இணக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.

துலாம் (Libra): குழந்தைகள் மூலம் நன்மை கிடைக்கும்

சுக்கிரன் துலாம் ராசியில்தான் பெயர்ச்சி ஆகிறார். இந்தப் பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாக அமைந்து, சாதகமான கிரக அமைப்பை உருவாக்கும். இதன் தாக்கம் நிதி ஆதாயம், தொழில் முன்னேற்றம் மற்றும் அறிவு வளர்ச்சிக்கு வாய்ப்புகளைக் கொண்டுவரும். பணிபுரியும் இடத்தில் ஆதாயமான நன்மைகள் ஏற்படும். குழந்தைகள் மூலம் நன்மை கிடைக்கும். வீட்டில் மகிழ்ச்சியும், அமைதியும் இருக்கும். நிதி நிலைமை மேம்படும்.

தனுசு (Sagittarius): வருமானம் அதிகரிக்கும்

சுக்கிரன் பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கும். அலுவலத்தில் ஊதிய உயர்வு அல்லது பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. முடிக்கப்படாத பணிகள் இந்த காலத்தில் வெற்றிகரமாக நிறைவடையும். குடும்ப வாழ்க்கைக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். இந்தப் பெயர்ச்சி தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு நிம்மதி உணர்வைத் தரும். வாழ்வில் திருப்தி ஏற்படும். நீண்ட நாட்களாக இருந்த சிக்கல்கள் இப்போது எளிதாக தீரும்.

கும்பம் (Aquarius): ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும்

துலாம் ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். இவர்களுக்கு அதிர்ஷ்டம் கைகூடி வரும். சுக்கிரன் அருளால்  கும்ப ராசிக்காரர்கள் இந்த காலத்தில் செல்வம் மற்றும் செழிப்பை அடைவார்கள். அலுவலக பணிகளில் உள்ள சம்பளம் பெறும் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. தொழில் செய்பவர்களுக்கும் இக்காலம் சாதகமாக இருக்கும். இவர்களுக்கு லாபம் அதிகரிக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

Add Zee News as a Preferred Source
TAGS:
Rasipalan