SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ராசி பரிவர்த்தன யோகம்: இந்த 3 ராசிகளுக்கு டிசம்பர் 16 வரை ஜாக்பாட்.. பணவரவு, தொழில் வளர்ச்சி

Rasi Palan Tamil: சூரியன் மற்றும் செவ்வாய் கிரகங்களின் பரிவர்த்தனையால் உருவாகியுள்ள 'ராசி பரிவர்த்தன யோகம்' காரணமாக டிசம்பர் 16 வரை 3 ராசிக்காரர்களுக்கு தொழில் வளர்ச்சி, புதிய வருமான வாய்ப்புகள் மற்றும் பொருளாதார முன்னேற்றம் கிடைக்கவுள்ளது.

Written By R Balaji
Published: Nov 19, 2026, 12:43 IST | Updated: Nov 19, 2026, 12:49 IST
Join

ஜோதிடத்தில் நவகிரகங்களின் தலைவராக கருதப்படும் சூரிய பகவான், நவம்பர் 16 ஆம் தேதி விருச்சிக ராசிக்கு இடம்பெயர்ந்தார். இதன் மூலம் சூரியன் பலவீனமான நிலையில் இருந்து மீண்டதாக ஜோதிட ரீதியாக கூறப்படுகிறது. இந்த பெயர்ச்சி மற்றொரு முக்கியாமான கிரக மாற்றத்துடனும் தொடர்புடையது. விருச்சிக ராசியின் அதிபதியான செவ்வாய், சூரியனின் ஆட்சி வீடான சிம்ம ராசியில் சஞ்சரிக்கிறார். அதேபோல், சூரியன் செல்வாயின் வீடான விருச்சிகத்தில் இருப்பதால், இரு கிரகங்களும் தங்களது ராசிகளை பரிமாறிக்கொண்டுள்ளன. இதனை ’ராசி பரிவர்த்தன யோகம்’ என கூறுகிறார்கள்.

இந்த கிரக பரிமாற்றம் டிசம்பர் 16 வரை நீடிக்கும். சூரியன், செவ்வாய் ஆகிய இரு கிரகங்களின் இந்த அமைப்பு குறிப்பிட சில ராசிகளுக்கு சாதகமான பலன்களை வழங்கக்கூடும். குறிப்பாக பொருளாதாரத்தில் முன்னேற்றம், புதிய வருமான வாய்ப்புகள், பணியிடத்தில் அங்கீகாரம், தொழில் மற்றும் வியாபாரத்தில் வளர்ச்சி என பல நல்ல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அப்படி இந்த யோகத்தால் பலன் பெறக்கூடிய மூன்று ராசிகள் என்னென்ன என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

மேஷம் (Aries Zodiac Signs)

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த கிரக பரிமாற்றம் பல்வேறு வகைகளில் சாதகமாக அமையக்கூடும். குறிப்பாக, எதிர்பாராத பணவரவு கிடைப்பதற்கும் வருமானத்தை பெருக்குவதற்கான புதிய வாய்ப்புகள் உருவாவதற்கும் வாய்ப்புள்ளது. நீண்ட நாட்களாக தொடர்ந்து பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் சூழல் உருவாகக்கூடும். புதிய பொறுப்புகள் மற்றும் பணிகள் மூலம் சமூகத்திலும் பணியிடத்திலும் நற்பெயர் கிடைக்கக்கூடும்.

நீண்ட காலமாக நிறைவேறாமல் இருந்த சில ஆசைகள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. குடும்ப வாழ்க்கையை பொறுத்தவரை, கணவன், மனைவி இடையே நெருக்கமும் புரிதலும் அதிகரிக்கலாம். உடல் மற்றும் மனநலனிலும் நல்ல மாற்றங்கள் ஏற்படக்கூடும். குறிப்பாக, வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள மேஷ ராசியினர் எதிர்பார்த்ததைவிட அதிக லாபத்தைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

கடகம் (Cancer Zodiac Signs)

கடக ராசிக்காரர்களின் வாழ்க்கையில் இந்த காலகட்டம் புதிய முன்னேற்றங்களுக்கான தொடக்கமாக அமையலாம். வருமானம் அதிகரிப்பதற்கான வழிகள் உருவாகுவதுடன், வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கக்கூடும். ஏற்கனவே பணியில் இருப்பவர்களின் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வாய்ப்புள்ளது. தொழில் மற்றும் சமூக வாழ்க்கையில் செல்வாக்கு அதிகரிப்பதுடன், மதிப்பும் மரியாதையும் உயரலாம். பணியிடத்தில் முக்கியமான பொறுப்புகள் கிடைக்கக்கூடும். தங்களது திறமையையும் உழைப்பையும் வெளிப்படுத்தி உயர் பதவிகளை அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகக்கூடும்.

வியாபாரம் செய்பவர்கள் புதிய வாய்ப்புகளை பயன்படுத்தி தொழிலை விரிவுபடுத்தலாம். இதன் மூலம் வருமானமும் புகழும் அதிகரிக்கக்கூடும். ஒட்டுமொத்தமாக, தொழில் வளர்ச்சி, சமூக அங்கீகாரம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி எனப் பல சாதகமான மாற்றங்களை இந்தக் காலகட்டத்தில் எதிர்பார்க்கலாம்.

மகரம் (Capricorn Zodiac Signs)

மகர ராசிக்காரர்களுக்கு சூரியன் - செவ்வாய் கிரகங்களின் பரிவர்த்தனை யோகம் நிதி மற்றும் தொழில் சார்ந்த விஷயங்களில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தக்கூடும். வருமானத்தை அதிகரிப்பதற்கான புதிய வழிகள் திறக்கப்படலாம். வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு தொழில் நடவடிக்கைகள் வேகமெடுப்பதுடன், லாபமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. சமூகத்தில் செல்வாக்கு மிக்க நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன், அவர்களுடனான தொடர்புகள் எதிர்கால வளர்ச்சிக்கு ஒஅயணுள்ளதாக அமையலாம்.

முதலீடுகள் மூலம் வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் உருவாகலாம். பணியில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு அல்லது பதவி உயர்வு கிடைக்கக்கூடும். புதிய தொழில் தொடங்க திட்டமிடுபவர்கள் அதற்கான முயற்சிகளை முன்னெடுக்க சாதகமான சூழல் அமையலாம். ஏற்கெனவே தொடங்கியுள்ள புதிய முயற்சிகளும் வெற்றியை நோக்கி நகர வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்தில் சுறுசுறுப்புடனும் நம்பிக்கையுடனும் செயல்படுவது அவர்களின் முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கும்.

பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

ZEENEWS TRENDING STORIES