SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

விஜயதசமி 2026 : குழந்தைகளை ‘அ..ஆ’ எழுத வைக்கலாம்! நல்ல நேரம் எது? இதோ முழு விவரம்..

விஜயதசமி விழா, நாளை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், பலர் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது, அவர்களை எழுத வைப்பது உள்ளிட்டவற்றை செய்வர். அதற்கான நல்ல நேரம் எது? எப்போது எழுத வைக்கலாம்? என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

Written By Yuvashree M
Published: Oct 19, 2026, 05:33 PM IST | Updated: Oct 19, 2026, 05:41 PM IST
Join

குழந்தைகளை இவ்வாறு விஜயதசமி அன்று எழுத வைக்கும் நிகழ்வை, ‘வித்யாரம்பம்’ என்று குறிப்பிடுவர். ‘வித்யாம்பரம்’ என்பது குழந்தைகளுக்கு முதன்முதலாக எழுத்தறிவை அறிமுகப்படுத்தும் புனிதமான நிகழ்வாக அறியப்படுகிறது. விஜயதசமி அன்று குழந்தையின் விரலைப் பிடித்து அரிசியில் முதல் எழுத்தை எழுதச் செய்வது பல குடும்பங்களில் வழக்கமாக உள்ளது.

‘அ’ எழுத வைக்கும் முறை..

தமிழ்நாட்டில் குழந்தைக்கு முதன்முதலாக “அ” என்ற எழுத்தை எழுதக் கற்றுக்கொடுப்பதும், சில மரபுகளில் “ஓம்” என எழுதச் செய்வதும் வழக்கமாகக் காணப்படுகிறது.

வித்யாரம்பம் செய்வது எப்படி?

நவராத்திரியின் ஒன்பதாவது நாளான மகாநவமி அல்லது ஆயுத பூஜை நாளில் தொழில் கருவிகள், வாகனங்கள், புத்தகங்கள், இயந்திரங்கள் போன்றவற்றை வழிபடும் வழக்கம் உள்ளது. மறுநாளான விஜயதசமியில் அவற்றை மீண்டும் பயன்படுத்தி, நல்ல முயற்சிகளைத் தொடங்குகின்றனர். இதன் உட்பொருள், நமது உழைப்பிற்குத் துணையாக இருக்கும் கருவிகளுக்கு நன்றி செலுத்துவதும், நமது தொழிலை நேர்மையாகவும் திறமையாகவும் மேற்கொள்வதுமாகும்.

விஜயதசமி வழிபாடு:

மாணவர்கள் புத்தகங்களை வழிபடுகிறார்கள்; இசைக் கலைஞர்கள் இசைக்கருவிகளை வழிபடுகிறார்கள்; தொழிலாளர்கள் தங்கள் பணிக்கருவிகளை வழிபடுகிறார்கள்; விவசாயிகள் விவசாய உபகரணங்களை வழிபடுகிறார்கள்.

இவ்வாறு ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வாதாரத்திற்கு உதவும் பொருட்களை மதித்து, உழைப்பின் மேன்மையை உணர்ந்து வழிபடுகின்றனர்.

விஜயதசமி வழிபாடு என்பது தீபம் ஏற்றுவதிலும் மந்திரம் சொல்வதிலும் மட்டும் முடிந்துவிடுவதில்லை. நமது வாழ்க்கையிலும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்வதே இந்த நாளின் உண்மையான நோக்கமாகும்.

நல்ல நேரம் எது?

விஜயதசமி நாளில் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க, உகந்த நேர எதுவென்றால், காலை 10.45 மணி முதல், 11.45 மணி அரை ஆகும். அதே சமயத்தில் மதிய 1.35 மணி முதல் 2.55 மணி அரை ஆகும். மாலை 4.35 மணி முதல் மாலை 5.35 மணி வரை செய்யலாம். இந்த நாளில் எழுத தவறியவர்கள், அடுத்த நாளில் தேவையான நேரத்தில் இதை செய்யலாம்.

விஜயதசமி அன்று என்ன செய்யலாம்?

விஜயதசமி நமக்கு உணர்த்தும் மிக முக்கியமான செய்தி, வெற்றி என்பது பிறரை வீழ்த்துவதில் இல்லை; நமக்குள் இருக்கும் தீய எண்ணங்களை வெல்வதில்தான் உள்ளது என்பதாகும்.

அறியாமையை அறிவால் வெல்ல வேண்டும். வெறுப்பை அன்பால் வெல்ல வேண்டும். கோபத்தைப் பொறுமையால் வெல்ல வேண்டும். சோம்பலை உழைப்பால் வெல்ல வேண்டும். அகங்காரத்தை அடக்கத்தால் வெல்ல வேண்டும் என்பதை எடுத்துக்காட்டுகிறது இந்த விஜயதசமி பூஜை.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.

ZEENEWS TRENDING STORIES