ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகத்தின் பெயர்ச்சியும், மற்ற கிரகங்களுடன் ஏற்படும் சேர்க்கையும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்த வகையில், சந்திரன் மற்றும் சனி பகவான் ஒரே ராசியில் இணைவதால் விஷ யோகம் உருவாகி உள்ளது. இந்த யோகத்தின் காரணமாக சில ராசிக்காரர்கள் பணம், தொழில் மற்றும் உறவுகள் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.
மனநிலை மற்றும் உணர்வுகளை குறிக்கும் கிரகமாக சந்திரன் ஜோதிடத்தில் பார்க்கப்படுகிறார். இவர் பொதுவாக இரண்டரை நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுகிறார். அதன்படி, அக்டோபர் 23 ஆம் தேதி சந்திரன் மீன ராசிக்குள் நுழைந்தார். அங்கு ஏற்கனவே சனி பகவான் சஞ்சரித்து வருவதால், இரு கிரகங்களின் சேர்க்கையால் விஷ யோகம் ஏற்பட்டுள்ளது.
இந்த யோகம் ஒருவரின் சிந்தனை முடிவெடுக்கும் திறன், பணவரவு மற்றும் பணியிட சூழலில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். எனவே முக்கிய முடிவுகளை அவசரமாக எடுப்பதை தவிர்த்து, பொறுமையுடன் செயல்படுவது நல்லது. அந்த வகையில், மேஷம், மிதுனம், கடகம், சிம்மம் மற்றும் கும்பம் ஆகிய 5 ராசிக்காரர்கள் அடுத்த இரண்டு நாட்களில் கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.
மேஷ ராசியின் 12 ஆம் வீட்டில் சனி - சந்திரன் சேர்க்கை அமைகிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்களின் செலவுகளை திட்டமிட்டு மேற்கொள்வது அவசியம். எதிர்பாராத செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. எனவே, வரவு செலவு கணக்கில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, தேவையற்ற கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் உடனடியாக அதிக லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்க்காமல், திட்டமிட்டு செயல்பட வேண்டும்.
மிதுன ராசியின் 10ஆம் வீட்டில் இந்த கிரக சேர்க்கை ஏற்படுவதால், பணியிடத்தில் சில சவால்களை சந்திக்க நேரிடலாம். எதிர்பார்த்த வெற்றியை அடைய கூடுதல் உழைப்பும் பொறுமையும் தேவைப்படலாம். வேலை தொடர்பான சிக்கல்கள் ஏற்பட்டாலும், கவனத்தை சிதறவிடாமல் இலக்கை நோக்கி செயல்படுவது முக்கியம். அதேபோல், செலவுகள் அதிகரிக்கக்கூடும் என்பதால் அத்தியாவசிய தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து பணத்தை செலவிடுவது நல்லது.
கடக ராசியின் 9ஆம் வீட்டில் சனி – சந்திரன் சேர்க்கை அமைவதாக கூறப்படுகிறது. இதனால் அடுத்த இரண்டு நாட்களில் பேசும் வார்த்தைகளிலும், மற்றவர்களுடன் பழகும் விதத்திலும் கூடுதல் கவனம் தேவைப்படலாம். பணியிடத்தில் சக ஊழியர்கள் அல்லது உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, உணர்ச்சிவசப்பட்டு பேசுவதை தவிர்த்து, எந்தவொரு முக்கிய முடிவையும் நிதானமாக எடுப்பது நல்லது. வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டாலும், அவசர நடவடிக்கைகளை தவிர்ப்பது அவசியம்.
சிம்ம ராசியின் 8ஆம் வீட்டில் சனி – சந்திரன் சேர்க்கை அமைவதால், இந்த ராசிக்காரர்கள் நிதி மற்றும் வேலை சார்ந்த விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குறிப்பாக, பெரிய தொகையை சார்ந்த முடிவுகளை எடுப்பதற்கு முன்பு அதன் சாதக, பாதகங்களை ஆராய்வது அவசியம். பணியிடத்தில் அவசரமாக செயல்படுவதையோ, முழுமையாக ஆலோசிக்காமல் முடிவெடுப்பதையோ தவிர்க்க வேண்டும். பொறுமையுடன் செயல்படுவது தேவையற்ற சிக்கல்களை தவிர்க்க உதவும்.
கும்ப ராசியின் 2ஆம் வீட்டில் இந்தக் கிரக சேர்க்கை அமைகிறது. இந்த வீடு பணம் மற்றும் குடும்பம் தொடர்பான விஷயங்களுடன் தொடர்புபடுத்தப்படுவதால், பணப் பரிவர்த்தனைகளில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பிறரை நம்பி அதிகப் பணத்தை கடனாக கொடுப்பதற்கு முன்பு நன்கு யோசிக்க வேண்டும். அதிக லாபம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் அவசரமாக முதலீடு செய்வதையும் தவிர்க்க வேண்டும். வருமானம், செலவு மற்றும் சேமிப்பு ஆகியவற்றைத் திட்டமிட்டு நிர்வகிப்பது நிதி சார்ந்த சிக்கல்களை குறைக்க உதவும்.
பொறுப்பு துறப்பு: இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.