• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /விளையாட்டு
  • /வைபவ் சூர்யவன்ஷிக்கு 3வது இடம் சரிவராது; சஞ்சுவை களமிறக்குங்க: கம்பீருக்கு அஸ்வின் அட்வைஸ்!

வைபவ் சூர்யவன்ஷிக்கு 3வது இடம் சரிவராது; சஞ்சுவை களமிறக்குங்க: கம்பீருக்கு அஸ்வின் அட்வைஸ்!

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு 3வது இடத்தில் பேட்டிங் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது குறித்து முன்னாள் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இந்த இடத்தில் விளையாடுவது வைபவுக்கு இயல்பானதாக இல்லை என்றும் அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சனை 3 வது இடத்தில் களமிறங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Written ByR Balaji
Published: Oct 25, 2026, 11:20 AM IST|Updated: Oct 25, 2026, 11:26 AM IST
joinshare
வைபவ் சூர்யவன்ஷிக்கு 3வது இடம் சரிவராது; சஞ்சுவை களமிறக்குங்க: கம்பீருக்கு அஸ்வின் அட்வைஸ்!

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
SSR கூட்டம்: அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் புதுச்சேரி தலைமைத் தேர்தல் அதிகாரி சந்திப்பு

SSR கூட்டம்: அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் புதுச்சேரி தலைமைத் தேர்தல் அதிகாரி சந்திப்பு

2

வைபவ் சூர்யவன்ஷிக்கு 3வது இடம் சரிவராது; சஞ்சுவை களமிறக்குங்க: கம்பீருக்கு அஸ்வின் அட்வைஸ்!

3

8வது ஊதியக் குழு: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி கணக்கீட்டு முறை மாறுமா? டிஏ மர்ஜர் சாத்தியமா?

4

பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு காலமானார்!

5

அகவிலைப்படி உயர்வு: அரசு ஊழியர்களுக்கு அக்டோபர் 28 வருகிறதா அறிவிப்பு? முக்கிய அப்டேட்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடரில் விளையாடுவதற்காக காத்திருந்த வைபவ் காரணமாக இஷான் கிஷன் விலகியதால், அவருக்கு பதிலாக வைபவ் 3வது இடத்தில் களமிறக்கப்பட்டார். இருப்பினும் தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா ஆகியோர் தொடர்ந்து விளையாடினர்.

இந்த சூழலில் 6வது ஓவரில் பேட்டிங் செய்ய வந்த வைபவ், தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறினார். 8 பந்துகளை சந்தித்த அவர், 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இதுகுறித்து போட்டிக்கு பிறகு பேசிய அஸ்வின், வைபவின் ஆட்டம் இந்த போட்டியில் ஏமாற்றம் அளித்ததாக குறிப்பிட்டார்.

வைபவுக்கு அனுபவ வீரரின் ஆலோசனை தேவை

இளம் வீரரான வைபவின் திறமையை குறைத்து மதிப்பிட முடியாது என்று தெரிவித்த அஸ்வின், அவருக்கு வழங்கப்பட்ட பேட்டிங் வரிசைதான் சிக்கலாக இருந்திருக்கலாம் என்று கூறினார். வழக்கமாக அதிரடியாக விளையாடும் வைபவ், இந்தப் போட்டியில் பந்தைச் சரியாக கணித்து விளையாட முடியாமல் சிரமப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், இதுபோன்ற சூழல்களில் அனுபவம் வாய்ந்த வீரர் ஒருவர் அவருடன் இணைந்து விளையாடுவது அவசியம் என்றும் அஸ்வின் தெரிவித்தார். பதற்றமடையாமல் நிதானமாக விளையாடவும், பந்தை கவனித்து பார்த்து உடலுக்கு அருகில் வைத்து ஆடவும் அவருக்கு ஆலோசனை வழங்கியிருக்க வேண்டும் என்றும் அஸ்வின் கூறினார். அதேபோல், 6வது ஓவரிலேயே களமிறங்குவது வைபவின் வழக்கமான ஆட்டத்திற்கு பொருத்தமாக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

3வது இடத்தில் சஞ்சு சாம்சன் விளையாட வேண்டும்

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தலைமையிலான நிர்வாகத்திற்கும் அஸ்வின் முக்கிய ஆலோசனை ஒன்றை வழங்கியுள்ளார்.

வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் ஆகிய மூவரையும் ஒரே அணியில் விளையாட வைக்க விரும்பினால், பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். அதன்படி, தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் வைபவ் சூர்யவன்ஷி களமிறங்குவதுடன், சஞ்சு சாம்சன் 3வது இடத்தில் விளையாடலாம் என தெரிவித்துள்ளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியபோது சஞ்சு சாம்சன் 3வது இடத்தில் களமிறங்கியதையும் அஸ்வின் சுட்டிக்காட்டினார். அதனால் தற்போதைய அணியில் வைபவ் 3வது இடத்தில் விளையாட வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் தனது கருத்தை முன்வைத்தார்.

இந்திய அணியின் மிடில் ஆர்டர்

வைபவின் பேட்டிங் குறித்து கருத்து தெரிவித்த அஸ்வின், இந்திய அணியின் மிடில் ஆர்டர் வீரர்களின் செயல்பாடுகளையும் பாராட்டினார். நியூசிலாந்து அணி நிர்ணயித்த 180 ரன்கள் இலக்கைத் தாண்டுவதற்கு திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, ரமன்தீப் சிங் ஆகியோரின் ஆட்டம் முக்கியப் பங்கு வகித்தது.

இந்திய அணியின் 6, 7, 8வது இடங்களில் களமிறங்கும் வீரர்கள் அதிரடியாக ரன்களை குவிக்கும் திறன் கொண்டவர்கள் என்றும், எதிரணிகளுக்கு அவர்கள் சவாலாக இருப்பார்கள் என்றும் அஸ்வின் தெரிவித்தார்.

குறிப்பாக, வேகப்பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பாக விளையாடும் ரமன்தீப் சிங், சுழற்பந்து வீச்சையும் அதிரடியாக எதிர்கொள்வது பாராட்டுக்குரியது என்று அவர் கூறினார். மிட்செல் சான்ட்னர் போன்ற தரமான சுழற்பந்து வீச்சாளருக்கு எதிராகவும் அதிரடியாக ரன்கள் குவிக்கும் திறன் ஒரு பேட்ஸ்மேனின் தரத்தை வெளிப்படுத்துவதாக அஸ்வின் குறிப்பிட்டார்.

திலக் வர்மாவின் நிதானமான அணுகுமுறையையும் பாராட்டிய அவர், நிதிஷ் குமார் ரெட்டியின் ஆட்டத்திறன் குறித்துத் தொடர்ந்து கவனிக்க வேண்டியிருந்தாலும், இந்திய அணியின் மிடில் ஆர்டர் மற்றும் லோயர் மிடில் ஆர்டரில் போதுமான அதிரடி பலம் இருப்பதாக தெரிவித்தார்.
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Cricket