• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /ஆன்மீகம்
  • /கண் திருஷ்டியால் பாதிக்கப்படும் 5 ராசிகள்! நீங்க லிஸ்ட்ல இருக்கீங்களா?

கண் திருஷ்டியால் பாதிக்கப்படும் 5 ராசிகள்! நீங்க லிஸ்ட்ல இருக்கீங்களா?

மத நம்பிக்கைகளில், கண் திருஷ்டி என்பது மிகவும் ஆபத்தானதாக பார்க்கப்படுகிறது. இது, ரொம்ப இயற்கையாகவே சில ராசிகளை பாதிக்குமாம். அவை என்னென்ன ராசிகள் தெரியுமா? இதோ முழு விவரம்!

Written ByYuvashree MEdited ByYuvashree M
Published: Aug 08, 2026, 06:39 PM IST|Updated: Aug 08, 2026, 06:55 PM IST
joinshare
கண் திருஷ்டியால் பாதிக்கப்படும் 5 ராசிகள்! நீங்க லிஸ்ட்ல இருக்கீங்களா?
Image Credit: X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
பம்புசெட் வாங்க ரூ.21,000 வரை மானியம்: விவசாயிகளுக்கு அரசின் பம்பர் அறிவிப்பு

பம்புசெட் வாங்க ரூ.21,000 வரை மானியம்: விவசாயிகளுக்கு அரசின் பம்பர் அறிவிப்பு

2

மதுராந்தகம் இடைத்தேர்தல்: அதிமுக 3வது இடத்திற்கு போனது எப்படி? பாமக ஒரு காரணமா?

3

Madurantakam By-Election: மரகதம் குமரவேல் முன்னிலை.. தவெக எழுச்சிக்கு பாமக, விசிக வாக்குகள் காரணமா?

4

ISRO வேலைவாய்ப்பு: மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

5

ரேஷன் கார்டு இருக்கா? இந்த வசதி இருப்பதை மறக்காதீங்க.. ONORC மூலம் கிடைக்கும் முக்கிய நன்மை

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

பொதுவாகவே இந்து மதத்தில் சில விஷயங்கள் மீது அதீத நம்பிக்கைகள் இருக்கும். அதிலும் குறிப்பாக எது செய்தாலும் கண் பட்டுவிடும் என்று தீய கண் மீதும் அதீத நம்பிக்கை இருக்கும். இதன்படி, ஒரு நபரின் நெகடிவான ஆற்றல் அல்லது பொறாமை மற்றொருவருக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை விளக்க, பயன்படுத்தப்படும் ஒரு சொல் இதுவாகும்.

கண் திருஷ்டி..

லாரிகள், குட்டி யானைகள், என ஒரு சில வண்டிகளில் எலுமிச்சையுடன் பச்சைமிளகாயை ஒரு நூலில் கட்டி வண்டிக்கு முன் தொங்க விட்டிருப்பதை பார்த்திருப்போம். இவற்றை, கண் திருஷ்டிக்காகத்தான் கட்டுகிறார்கள். இந்த கண் திருஷ்டி, வண்டிகளை மட்டுமல்ல ஒரு சில குறிப்பிட்ட ராசிகளை நேரடியாகவே தாக்குமாம்.

இப்படி கண்படும் வேளையில், அந்த ராசிக்காரர்களுக்கு உடல்நலக்குறைவு, துரதிர்ஷ்டம், விபத்து ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறதாம். தீய கண்களால் பாதிக்கப்படுவதாக கூறப்படும் 5 ராசிகள் எவை என்பதை இங்கு பார்ப்போம்.  

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்கள் எப்போதும் விளையாட்டுத்தனமானவர்களாகவும், சமூகத்துடன் தொடர்பு கொண்டவர்களாகவும் இருப்பர். இவர்களுடைய ஆற்றல், பிறரின் தீய கண் பாதிப்புகளுக்கு இவர்களை ஆளாக்கக்கூடும். இதிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள, அவர்கள் மஞ்சளை உபயோகில்லாம். இது, கவனச்சிதறல்களை தடுத்து நிறுத்துவதோடு, சோர்விலிருந்தும் நம்மை பாதுகாத்துக்கொள்ள உதவுமாம்.

கடகம்:

கடக ராசியை சேர்ந்தவர்கள், மனிதர்கள் மீது அக்கறையுள்ளவர்களாகவும், பிறரை புரிந்துகொள்ளும் திறன் மிக்கவர்களாகவும் இருப்பார்களாம். இவர்கள், தங்களை சுற்றியிருக்கும் விஷயங்கள் சிறப்பாக இல்லையென்றால் அதை உணர்வார்களாம். இவர்களின் இந்த கருணையான எண்ணம், பிறரது பொறாமையை தூண்டும் என கூறப்படுகிறது. இவர்கள் தீய கண்களில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள, அடர் நீல நிறம் பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்கள், இயல்பாகவே தைரியமானவர்களாக இருப்பார்களாம். இவர்களின் தன்னம்பிக்கை கொண்ட குணம், பிறரிடம் பொறாமையை ஏற்படுத்தக்கூடுமாம். இவர்கள், ஆரஞ்சு நிற கண் வாசியம் இட்டுக்கொண்டால் அவை மனநிலை அதிகரித்து, அந்த தீய கண்களுக்கு எதிராக அவர்களை பாதுகாக்குமாம்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்கள், மிகவும் இனிமையானவர்களாக இருக்கின்றனர். இவர்களின் சமநிலை மற்றும் நல்லிணக்கம் கொண்ட மனநிலை பலரது கண்ணடிக்கு ஆளாகிறது. இவர்களை தீய கண்களில் இருந்து தடுக்க, இளஞ்சிவப்பு ஆடை அணிவது நல்லது.

மீனம்:

மீன ராசிக்காரர்கள், அனைவர் மீதும் அதிக அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கலாம். இவர்களில் பல பேர் ஆன்மீகவாதிகளாகவும் அறியப்படுகிறார்கள். இவர்களின் இந்த குணாதிசயம் சில தீய கண்களை ஈர்க்கலாம். எனவே, இதிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள, அடர் பச்சை நிறத்தை அணியலாம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

Add Zee News as a Preferred Source
TAGS:
Rasipalan