SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

Explained: பிசிசிஐ-யுடன் கைகோர்த்த ChatGPT... ரூ. 130 கோடி டீலின் பின்னணி என்ன?

ChatGPT, Campa, SBI Life உடனான பிசிசிஐ-யின் ரூ. 130 கோடிக்கும் அதிகமான புதிய ஒப்பந்தம், இந்திய கிரிக்கெட்டின் வர்த்தக மதிப்பு மற்றும் Sponsorship சந்தையும் தொடர்ந்து உயர்ந்து வருவதை வெளிப்படுத்துகிறது.

Written By R Balaji
Published: Sep 09, 2026, 18:40 IST | Updated: Sep 09, 2026, 18:41 IST
Join

கிரிக்கெட்டை நாம் வெறும் ஒரு விளையாட்டாகவோ, ஒரு போட்டியாகவோ எடுத்துக்கொண்டு கடந்து சென்று விட முடியாது. அதன் பின்னால் மிகப்பெரிய வணிக உலகமே இயங்கி வருகிறது. வீரர்களின் சம்பளம், போட்டிகளின் ஒளிபரப்பு உரிமை, விளம்பரங்கள், ஸ்பான்சர்ஷிப் என கிரிக்கெட்டை சுற்றி பல்லாயிரம் கோடி ரூபாய் புழங்குகிறது. அதிலும் இந்திய கிரிக்கெட்டின் வர்த்தக மதிப்பு எந்த அளவுக்கு பெரியது என்பதை நாம் கற்பனை செய்துகூட பார்க்க முடியாத அளவுக்கு அதன் சந்தை விரிவடைந்துள்ளது.

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட்டை சுற்றியுள்ள வணிக உலகில் தற்போது பேசுபொருளாக மாறி இருப்பது பிசிசிஐ மேற்கொண்டுள்ள புதிய ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தம்தான். ChatGPT, Campa மற்றும் SBI Life ஆகிய மூன்று நிறுவனங்களை இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளுக்கான Associate Partners ஆக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்த மூன்று நிறுவனங்களுடனான ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு ரூ. 130 கோடிக்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த எண்ணிக்கை மட்டும் முக்கியமல்ல. முந்தைய ஒப்பந்தத்துடன் ஒப்பிடும்போது இந்த டீல் எவ்வளவு பெரியது? பிசிசிஐக்கு இதன் மூலம் கிடைப்பது என்ன? ChatGPT போன்ற ஒரு AI நிறுவனம் இந்திய கிரிக்கெட்டுடன் கைகோர்ப்பதன் பின்னணி என்ன? என்பதை புரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

ரூ. 130 கோடி ஒப்பந்தம்

இந்த 130 கோடி ரூபாய் என்பது ChatGPT நிறுவனத்திற்கு மட்டும் பிசிசிஐ வழங்கவில்லை. ChatGPT, Campa மற்றும் SBI Life ஆகிய மூன்று நிறுவனங்களுடனான Associate Partnership ஒப்பந்தங்களின் மொத்த மதிப்புதான் ரூ. 130 கோடி ஆகும்.

இந்த ஒப்பந்தம் இரண்டு கிரிக்கெட் சீசன்களுக்கு பொருந்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது, இந்திய அணி சொந்த மண்ணில் விளையாடும் போட்டிகளில் இந்த மூன்று நிறுவனங்களும் பிசிசிஐயுடன் அதிகாரப்பூர்வமாக இணைந்து செயல்பட உள்ளன. இந்த Partnership 2028 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பிருந்த Commercial Cycle-ஐ ஒப்பிடும்போது, இந்த முறை பிசிசிஐ தனது Associate Partnership மூலம் இன்னும் அதிக மதிப்பை பெற்றிருக்கிறது.

முந்தய ஒப்பந்தத்தை விட எவ்வளவு அதிகம்?

கடந்த முறை பிசிசிஐயின் Associate Partners ஆக SBI Life, Campa மற்றும் Atomberg ஆகிய நிறுவனங்கள் இருந்தன. அந்த ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு சுமார் ரூ. 90 கோடி என்ற அளவில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது புதிய Cycle-ல் மூன்று நிறுவனங்களுடனான ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ. 130 கோடியை தாண்டியுள்ளது. முந்தைய Cycle-ஐ விட இது சுமார் 44% அதிகம்.

அதாவது இந்திய கிரிக்கெட்டின் சொந்த மண்ணிலான போட்டிகளை சுற்றியுள்ள விளம்பர மற்றும் Brand Value தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பதற்கான ஒரு முக்கிய சிக்னலாகவே இந்த ஒப்பந்தத்தை பார்க்க முடிகிறது.

Associate Partner என்றால் என்ன?

ஒரு நிறுவனம் இந்திய அணியுடன் இணைந்துள்ளது என்றாலே அது இந்திய அணியின் பிரதான Jersey Sponsor என்று அர்த்தம் கிடையாது. பிசிசிஐ-யின் Sponsorship Structure-ல் வெவ்வேறு பிரிவுகளும், ஒவ்வொன்றுக்கும் தனித்தனி Commercial Rights-களும் உள்ளன.

Associate Partner என்பதன் மூலம், இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளை சுற்றியுள்ள Brand Visibility மற்றும் Promotional Opportunities-ஐ அந்த நிறுவனங்கள் பெறுகின்றன. இதன் மூலம் கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களை நேரடியாக சென்றடைய முடியும். இதனால் ஒரு நிறுவனத்திற்கு இது வெறும் விளம்பர இடத்தை வாங்குவது மட்டுமல்ல. இந்திய கிரிக்கெட்டின் ரசிகர் பலத்துடன் தங்களது Brand-ஐ இணைக்கும் நீண்டகால Marketing Strategy ஆகவும் பார்க்கப்படுகிறது.

ChatGPT ஏன் இந்திய கிரிக்கெட்டுடன் இணைந்தது?

கிரிக்கெட் குளர்பானம், இன்சூரன்ஸ் போன்ற வழக்கமான விளம்பர துறைகளில் இருந்து ஒரு படி விலகி, தற்போது AI துறையை சேர்ந்த ஒரு நிறுவனம் இந்திய கிரிக்கெட்டின் Commercial Ecosystem-ல் இணைந்துள்ளது. இந்தியா மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றாக மாறி வரும் நிலையில், ChatGPTக்கு கிரிக்கெட் மூலம் இன்னும் அதிகமான மக்களை சென்றடைவதற்கான வாய்ப்பை இந்த Partnership வழங்குகிறது.

இந்தியாவில் கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் என்பதால், ஒரு புதிய தொழில்நுட்ப Brandக்கு தனது பெயரை பொதுமக்களிடம் கொண்டு செல்ல இது முக்கியமான Platformஆக அமையும். அதே நேரத்தில், கிரிக்கெட் ரசிகர்களிடையே AI பயன்பாடு குறித்த ஆர்வத்தையும் இந்த Partnership அதிகரிக்கக்கூடும். போட்டிகள், வீரர்கள், புள்ளிவிவரங்கள் உள்ளிட்டவற்றை புரிந்துக்கொள்ள AI கருவிகளை பயன்படுத்தும் புதிய தலைமுறை ரசிகர்களுடன் ChatGPT போன்ற ஒரு brand எளிதாக Connect ஆகும் வாய்ப்பு உள்ளது.

பிசிசிஐ-க்கு இந்த ஒப்பந்தம் ஏன் முக்கியம்?

பிசிசிஐயை பொறுத்தவரையில், இந்த ஒப்பந்தம் என்பது வெறும் கூடுதல் வருவாய் கிடைக்கும் ஒரு Sponsorship Deal மட்டுமல்ல. இந்திய அணி சொந்த மண்ணில் விளையாடும் போட்டிகளின் Commercial Value தொடர்ந்து உஅயர்ந்து வருவதையும் இது வெளிப்படுத்துகிறது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மட்டுமின்றி, இந்திய அணியின் ஒவ்வொரு போட்டியும் தற்பொது மிகப்பெரிய Brand Platform ஆக மாறி உள்ளது.

குறிப்பாக இரண்டு சீசன்களுக்கு ரூ. 130 கோடிக்கும் அதிகமான மதிப்பில் மூன்று நிறுவனங்கள் Associate Partners ஆக இணைந்திருப்பது இந்திய கிரிக்கெட்டின் ரசிகர் பலமும் விளம்பர சந்தையில் அதற்குள்ள தாக்கமும் எவ்வளவு பெரியது என்பதை காட்டுகிறது. ஒரு போட்டியை தொலைக்காட்சியில் பார்ப்பவர்களுடன் மட்டும் இந்த சந்தை முடிவடைவதில்லை. டிஜிட்டல் தளங்கள், சமூக வலைதளங்கள், மொபைல் பயன்பாடுகள் மற்றும் OTT தளங்கள் என இந்திய கிரிக்கெட்டை சுற்றியுள்ள பார்வையாளர்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் ஏன் நிறுவனங்களுக்கு இவ்வளவு முக்கியம்?

இந்தியாவில் கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டை தாண்டி மிகப்பெரிய Pop Culture ஆகவே மாறியுள்ளது. இந்திய அணி விளையாடும் போட்டிகளுக்கு கிடைக்கும் பார்வையாளர்கள் எண்ணிக்கை, குறிப்பாக முக்கியமான தொடர்கள் மற்றும் பெரிய அணிகளுக்கு எதிரான போட்டிகளில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிறுவனங்களை கிரிக்கெட் பக்கம் ஈர்க்கிறது.

இதனால் வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் நுகர்வோர் பொருட்கள் நிறுவனங்கள் மட்டுமின்றி , தற்போது Tecnology மற்றும் AI நிறுவனங்களும் கிரிக்கெட்டின் மூலம் தங்களது Brand-ஐ மக்களிடம் கொண்டு செல்ல விரும்புகின்றன. ChatGPT-யின் இணைப்பு இந்த மாற்றத்தின் முக்கிய உதாரணமாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் கிரிக்கெட்டின் Commercial Ecosystem-ல் பாரம்பரிய விளம்பர நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல், புதிய தலைமுறை Technology Brandsக்கும் மிகப்பெரிய இடம் உருவாகி வருவது தெளிவாகிறது.

இந்திய கிரிக்கெட்டின் பார்வையாளர்கள் தொலைக்காட்சியில் இருந்து டிஜிட்டல் தளங்களுக்கு வேகமாக நகர்ந்து வரும் நிலையில், எதிர்காலத்தில் Sponsorship Deals-ன் மதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக ரசிகர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளக்கூடிய Digital Activation, AI, Data மற்றும் Interactive Content போன்ற துறைகள் கிரிக்கெட் Sponsorship-ல் முக்கிய பங்கு வகிக்கலாம்.

அதனால், தற்போது வெளியாகியுள்ள ரூ.130 கோடிக்கும் அதிகமான இந்த Associate Partnership Deal-ஐ ஒரு தனிப்பட்ட Sponsorship ஒப்பந்தமாக மட்டும் பார்க்க முடியாது. இந்திய கிரிக்கெட்டின் Brand Value தொடர்ந்து உயர்ந்து கொண்டிருப்பதற்கான மற்றொரு முக்கியமான அடையாளமாகவே இதை பார்க்க வேண்டும்.

ஒரு பக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வீரர்கள் ரன்களையும் விக்கெட்டுகளையும் சேர்த்துக் கொண்டிருக்க, மறுபக்கம் அந்த கிரிக்கெட்டை சுற்றியுள்ள வணிக உலகம் கோடிகளை சேர்த்துக் கொண்டிருக்கிறது.
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

ZEENEWS TRENDING STORIES