SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

இனி அக்சர் பட்டேல் கிடையாது... 5 ஆண்டுகளுக்கு பின் முக்கிய வீரர் கம்பேக்...!

Indian Cricket Team : இந்திய அணி வரும் செப்டம்பர் மாதம் 13ஆம் தேதியில் இருந்து அடுத்தாண்டு ஐபிஎல் தொடர் வரை தொடர்ச்சியாக மூன்று பார்மட் போட்டிகளிலும் விளையாட இருக்கிறது. அந்த வகையில், முக்கிய வீரர்கள் காயத்தில் இருந்து மீண்டு பிட்னஸ் பெற்றிருக்கிறார்கள். 5 ஆண்டகளுக்கு பிறகு இந்திய அணியில் குர்னால் பாண்டியாவுக்கு வாய்ப்பு என தகவல்கள் கசிந்துள்ளன.

Written By Sudharsan G
Published: Sep 01, 2026, 07:32 IST | Updated: Sep 01, 2026, 07:44 IST
Image Credit: RCB Star Krunal Pandya | Image Source : X
Join

Indian Cricket Team : இந்திய கிரிக்கெட் அணி தற்போது போட்டிகள் இன்றி ஓய்வு மோடில் உள்ளது. இருப்பினும், பிசிசிஐ ஒப்பந்தத்தில் உள்ள பலரும் பெங்களூரு பிசிசிஐ சிறப்பு மையத்தில் பயற்சி மேற்கொண்டு வருகிறது. ஒருபக்கம் அங்கு துலீப் டிராபி போட்டிகளும் நடைபெற்று வரும் அதிலும் சில முக்கிய வீரர்கள் விளையாடி வருகிறார்கள்.

அடுத்து இந்திய அணி வரும் செப்டம்பர் 13ஆம் தேதி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20ஐ தொடரில் விளையாடுகிறது. இந்திய ஆடவர் அணி மற்றும் மகளிர் அணி இரண்டு ஆசிய விளையாட்டு போட்டிகளில் விளையாடுகின்றனர். 2022 ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட்டில் இந்தியா தங்கப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் அடுத்தடுத்த போட்டிகள்

இந்திய ஆடவர் அணியை பொறுத்தவரை செப்டம்பர் 28ஆம் தேதி முதல் ஆசிய விளையாட்டு போட்டிகள் தொடங்குகிறது. அக்டோபர் 3ஆம் தேதி அன்று ஆடவர் அணிக்கு இறுதிப்போட்டியாகும். இந்திய ஆடவர் அணி நேரடியாக காலிறுதிக்கு தகுதிபெற்றுவிட்டது. எனவே செப்டம்பர் 28 காலிறுதிப் போட்டி, அதை வென்றால் அக்டோபர் 1 அரையிறுதியாகும்.

இதற்கிடையே செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் மேற்கு இந்திய தீவுகள் அணி உடன் உள்ளூரில் 3 ஓடிஐ மற்றும் 5 டி20ஐ போட்டிகளில் விளையாட உள்ளது. அடுத்து அக்டோபர் நவம்பர், மாதங்களில் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்று 3 டி20ஐ, 5 ஓடிஐ போட்டிகளை விளையாட இருக்கிறது. எனவே, அடுத்த இரண்டரை மாதங்களுக்கு இந்திய அணி வொயிட் பால் கிரிக்கெட்டில் அதிக கவனம் செலுத்தும். நவம்பர் இறுதியில் நியூசிலாந்து அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் திட்டமிடப்பட்டுள்ளன.

கம்பேக் கொடுக்கும் 3 முக்கிய வீரர்கள்

இந்தச் சூழலில் டி20ஐ கிரிக்கெட்டில் முக்கிய வீரர்கள் கம்பேக் கொடுக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர்கள் ஹர்திக் பாண்டியா, நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் உடற்தகுதி பெற்றிருக்கும் நிலையில் அவர்கள் டி20ஐ அணியில் மீண்டும் களமிறங்குகிறார்கள் என தகவல் கிடைத்திருப்பதாகTimes of India செய்தி வெளியிட்டுள்ளது.

TOI செய்தியின்படி, ஹர்திக் பாண்டியா, நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் பிசிசிஐ சிறப்பு மையத்தில் வெறித்தனமாக பயிற்சி மேற்கொண்டு வரும் சூழலில், தங்களின் சொந்த வேலைக்காக மட்டுமே பிரேக் எடுக்கிறார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல், வாஷிங்டன் சுந்தரும் தற்போடு டி20ஐ போட்டிகளுக்கு தயாராகி வருகிறார். ஆப்கானிஸ்தான் தொடரில் இருந்து அடுத்தாண்டு ஐபிஎல் தொடங்கும் வரை இந்திய அணிக்கு தொடர்ச்சியாக மூன்று பார்மட்டிலும் போட்டிகள் நடைபெற இருப்பதால், இந்த மூன்று வீரர்களும் உடற்தகுதியை பெற்றிருப்பது இந்திய அணிக்கு மகிழ்ச்சிகரமான செய்தியாகும்.

டி20ஐ கிரிக்கெட்டில் வாஷிங்டன்...

வாஷிங்டன் சுந்தர் இந்த வாரத்தில் சிறப்பு மையத்திற்கு சென்று தனது உடற்தகுதியை நிரூபிப்பார் என கூறப்படுகிறது. இதன்மூலம், மீண்டும் டி20ஐ அணியில் இடம்பிடித்து ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் அவர் களமிறக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறப்படுகின்றன.

கடந்த சில வாரங்களாக அவரது வேலைப்பளூ அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆப்கானிஸ்தான் உடனான 3 டி20ஐ போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரெடியாகும் பும்ரா...

அதேபோல் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவும் பெங்களூருவில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அடுத்தடுத்து 2027 உலகக் கோப்பை தொடரே இந்திய அணியின் டார்கெட்டாக உள்ளது.  எனவே பும்ரா அவரது காயத்திற்கு பிறகு டெஸ்ட் மற்றும் ஓடிஐ போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்துவார் என கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20ஐ போட்டிகளில் விளையாடுவது பின்னரே தெரியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் ஆசிய விளையாட்டு போட்டிகளில் விளையாட அதிக வாய்ப்புள்ளது.

5 ஆண்டுகளுக்கு பின் குர்னால் பாண்டியா

இவை அனைத்தையும் விட முக்கிய செய்தியாக குர்னால் பாண்டியா மீண்டும் இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்க இருக்கிறார். குர்னால் பாண்டியா கடைசியா 2021இல் இந்திய அணிக்கு விளையாடிய நிலையில், 5 ஆண்டுகளுக்கு பின் கம்பேக் கொடுக்கிறார் என தகவல்கள் தெரிவிப்பதாக TOI செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த சில சீசன்களாக ஐபிஎல் தொடரில் குர்னால் பாண்டியா சிறப்பாக செயலாற்றி வருகிறார். இடதுகை ஆல்-ரவுண்டராக அக்சர் பட்டேல் இங்கிலாந்து - அயர்லாந்து சுற்றுப்பயணத்தில் கடுமையாக சொதப்பினார். எனவே அவர் இடத்தில் குர்னால் பாண்டியாவை கொண்டுவர பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

குர்னால் பாண்டியா இதுவரை...

குர்னால் பாண்டியா இதுவரை 5 ஓடிஐ போட்டிகளில் 130 ரன்களையும், 2 விக்கெட்டையும் எடுத்துள்ளார். 19 டி20ஐ போட்டிகளில் விளையாடி 124 ரன்களையும், 15 விக்கெட்டையும் எடுத்துள்ளார். 2018ஆம் ஆண்டில் டி20ஐ போட்டியில் அறிமுகமான குர்னால் பாண்டியா பின்னர் இந்திய அணியில் இடம்பிடிக்கவில்லை.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

ZEENEWS TRENDING STORIES