SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

புவனேஷ்வர் குமார் இந்திய அணி கம்பேக்.. RCB-க்கு ஏற்பட்ட சிக்கல்? Explained

4 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணிக்கு திரும்பிய புவனேஷ்வர் குமாரால், 2028 ஐபிஎல் மெகா ஏலத்தில் ஆர்சிபியின் Retention கணக்கு மாறும் சூழல் உருவாகியுள்ளது.

Written By R Balaji
Published: Oct 08, 2026, 05:07 PM IST | Updated: Oct 08, 2026, 05:12 PM IST
Join

இந்திய கிரிக்கெட் அணிக்கு புவனேஷ்வர் குமார் மீண்டும் திரும்பியிருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய டி20 அணியில் இடம்பிடித்துள்ள புவனேஷ்வர் குமார், நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாட உள்ளார். ஆனால் புவனேஷ்வரின் இந்த கம்பேக் அவரது ஐபிஎல் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிர்காலத்தில் ஒரு சிக்கலை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது. குறிப்பாக 2028 ஐபிஎல் மெகா ஏலத்தை கணக்கில் எடுத்தால், புவனேஷ்வரின் சர்வதேச கம்பேக் RCB-யின் Retention பாதிக்க வாய்ப்புள்ளது.

அப்படி என்ன சிக்கல்? புவனேஷ்வர் இந்திய அணிக்கு திரும்பியதற்கும், RCBக்கும் என்ன தொடர்பு? என்பதை இங்கு விரிவாக பார்க்கலாம்.

4 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியில் புவனேஷ்வர் குமார்

36 வயதான புவனேஷ்வர் குமார் கடைசியாக 2022 நவம்பர் 22 ஆம் தேதி நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணிக்காக விளையாடினார். அதன் பிறகு இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்த நிலையில், உள்ளூர் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் மீண்டும் தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்தார். குறிப்பாக ஆர்சிபி அணிக்காக அவர் கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். இதன் பலனாக நியூசிலாந்து சுற்று பயணத்துக்கான இந்திய டி20 அணியின் புவனேஷ்வர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் புவனேஷ்வர் குமாரை ஆர்சிபி அணி ரூ. 10.75 கோடிக்கு வாங்கியது. அதன்பிறகு அவர் அணியின் முக்கிய பந்துவீச்சாளராக மாறினார். குறிப்பாக புதிய பந்தில் விக்கெட் வீழ்த்தும் திறன் மற்றும் பவர்பிளே ஓவர்களில் அவரது அனுபவம் ஆர்சிபிக்கு பலமாக அமைந்தது.

2026 சீசனிலும் அவரது செயல்பாடு சிறப்பாக இருந்தது. கடந்த இரண்டு சீசன்களில் ஆர்சிபி அணிக்காக அவர் 45 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் ஆர்சிபி தொடர்ச்சியான இரண்டு ஐபிஎல் கோப்பையை வெல்லவும் அவர் முக்கிய பங்களிப்பு அளித்தார்.

இந்திய அணி கம்பேக்கால் ஆர்சிபி-க்கு வந்த சிக்கல்

இந்த நிலையில்தான், புவனேஷ்வர் குமாரின் சர்வதேச கம்பேக், ஆர்சிபி அணிக்கு பிரச்சனையாக மாறி உள்ளது. இந்த பிரச்சனையை புரிந்துக்கொள்ள ஐபிஎல்லில் இருக்கும் Uncapped Player விதியை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.

தற்போதைய ஐபிஎல் விதிகளின்படி கடந்த 5 காலண்டர் ஆண்டுகளில் இந்திய அணிக்காக சர்வதேச போட்டியில் விளையாடாமல் இருக்கும் வீரர், மேலும், பிசிசிஐ மத்திய ஒப்பந்தத்தில் இல்லாதவர், குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் Uncapped Player ஆக கருதப்படுகிறார்.

புவனேஷ்வர் குமார் கடைசியாக 2022 ஆம் ஆண்டில்தான் இந்திய அணிக்காக விளையாடியிருந்தார். அதன்பிறகு தொடர்ந்து இந்திய அணியில் இடம் கிடைக்காமல் இருந்திருந்தால் அவர் Uncapped Player ஆக கருதப்பட்டிருப்பார். ஆனால் தற்போது இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்திருப்பது அவரை அந்த இடத்தில் இருந்து விலக்கி உள்ளது.

Uncapped வீரர்களை குறைந்த தொகைக்கு Retain செய்யும் வாய்ப்பு இருப்பதால், புவனேஷ்வரை ஆர்சிபி அணி தற்போதைய ரூ. 10.75 கோடி ஒப்பந்தத்தை விட மிகவும் குறைந்த தொகையில் தக்கவைத்திருக்க முடியும். தற்போதைய விதிகள் தொடர்ந்திருந்தால், Uncapped Player-க்கான Retention தொகை ரூ.4 கோடியாக இருந்தது. அதாவது, புவனேஷ்வர் Uncapped வீரராக மாறியிருந்தால், RCB-க்கு அவரை சுமார் ரூ.4 கோடி மதிப்பில் தக்கவைக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கலாம்.

இதனால் ஆர்சிபிக்கு மிகப்பெரிய நிதி பலன் கிடைத்திருக்கும். அதே நேரத்தில், அணியின் முக்கிய பந்துவீச்சாளரை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளவும் முடிந்திருக்கும்.

ஆனால் தற்போது புவனேஷ்வர் குமார் மீண்டும் இந்திய அணிக்காக விளையாட உள்ளதால், அவரை Uncapped வீரராக கருத முடியாது. அதன் காரணமாக அவரை Uncapped வீரருக்கான தொகையில் தக்கவைக்க முடியாது. அவரை அணியில் தொடர்ந்து விளையாட வைக்க ஆர்சிபி அணி அதிகம் செலவிட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

2028 மெகா ஏலத்தில் என்ன நடக்கும்?

புவனேஷ்வர் குமார் இந்திய அணிக்கு திரும்பியிருப்பதால், 2028 ஐபிஎல் மெகா ஏலத்தில் அவரை தக்கவைப்பது ஆர்சிபி அணிக்கு சற்று சவாலாக மாறலாம். அவர் Uncapped வீரராக இருந்திருந்தால், குறைந்த தொகையில் அவரை அணியில் தக்கவைத்து கொள்ளும் வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால் தற்போது அந்த வாய்ப்பு பெரிதும் குறைந்துள்ளது.

இதன் காரணமாக, புவனேஷ்வரை அணியில் தொடர்ந்து வைத்திருக்க ஆர்சிபி அதிக தொகையை ஒதுக்க வேண்டிய நிலை ஏற்படலாம். அதே நேரத்தில், மெகா ஏலத்தில் தக்கவைக்கப்படும் மற்ற வீரர்களுக்கான தொகையையும் அணி நிர்வாகம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.

இருப்பினும் 2028 ஐபிஎல் மெகா ஏலத்துக்கான விதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. தற்போது நடைமுறையில் உள்ள 2025-27 விதிகளின் அடிப்படையில்தான் புவனேஷ்வர் குமார் Uncapped வீரராக இருந்தால் ரூ. 4 கோடிக்கு தக்கவைக்கும் கணக்கு வரும். எனவே, 2028லும் இதே விதி தொடரும் என்று இப்போதே உறுதியாக கூற முடியாது. ஆனால் தற்போதைய விதிகள் தொடரும் பட்சத்தில், புவனேஷ்வர் இந்திய அணிக்கு திரும்பியது ஆர்சிபியின் Retention திட்டத்தில் நிச்சயம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.

ஒருபுறம் பார்த்தால், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியில் இடம்பிடித்திருப்பது புவனேஷ்வருக்கு மிகப்பெரிய கம்பேக். ஆனால் மறுபுறம், இந்த கம்பேக் காரணமாக அவரை குறைந்த தொகையில் தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற ஆர்சிபியின் வாய்ப்பு மாறியுள்ளது. இதனால் 2028 மெகா ஏலத்தில் புவனேஷ்வரை ஆர்சிபி எப்படி தக்கவைக்கப் போகிறது என்பது கவனிக்க வேண்டிய விஷயமாக இருக்கும்.
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

ZEENEWS TRENDING STORIES