IPL 2027 ஏலத்திற்கு முன்... CSK, MI, RCB யார் யாரை தக்கவைக்க அதிக வாய்ப்பு இருக்கு?
IPL Retention: ஐபிஎல் 2027 மினி ஏலத்திற்கு முன் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் எந்தெந்த வீரர்களை தக்கவைக்க அதிக வாய்ப்புள்ளது என்பதை இங்கு விரிவாக காணலாம்.
Published: Aug 08, 2026, 07:46 PM IST
| Updated: Aug 08, 2026, 08:04 PM IST
IPL 2027 Mini Auction, CSK, MI Player Retention : ஐபிஎல் 2026 தொடர் நிறைவடைந்து மூன்று மாதங்களே ஆகின்றன. இன்னும் மூன்று, நான்கு மாதங்களில் ஐபிஎல் 2027 மினி ஏலம் நடைபெறும். அந்த வகையில் மினி ஏலத்திற்கு முன் 10 அணிகளின் எந்தெந்த வீரர்களை தக்கவைக்கும், யார் யாரை விடுவிக்கும் என்பது தெரியவரும்.
அதற்கு முன்பாக, ஐபிஎல் வீரர்கள் டிரேடிங்கும் நடந்து வருகிறது. ரிஷப் பண்ட் - குல்தீப் யாதவ் டிரேட் நடந்து முடிந்துவிட்ட நிலையில், ஹர்திக் பாண்டியா டிரேட் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்தச் சூழலில், ஐபிஎல் கிரிக்கெட்டில் முன்னணி அணிகளாக கருதப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் ஐபிஎல் 2027 மினி ஏலத்திற்கு முன்னர் எந்தெந்த வீரர்களை தக்கவைக்கும் என்பதை இங்கு விரிவாக காணலாம்.
சென்னை சூப்பர் கிங்ஸ்
- ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக தொடர்வார் எனலாம். தோனியின் முடிவை பொருத்து அவரும் தக்கவைக்கப்பட வாய்ப்புள்ளது.
- சஞ்சு சாம்சன், ஆயுஷ் மாத்ரே, உர்வில் பட்டேல் போன்ற டாப் ஆர்டர் வீரர்கள் நிச்சயம் தக்கவைக்கப்படுவார்கள்.
- ஜேமி ஓவர்டன், அகேல் ஹொசைன் போன்ற வெளிநாட்டு ஆல்-ரவுண்டர்கள் நிச்சயம் தக்கவைக்கப்படுவார்கள்.
- நூர் அகமது பிரதான ஸ்பின்னர் என்பதால் அவரும் தக்கவைக்கப்படுவார். மேட் ஹென்றி, நேதன் எல்லிஸ் உள்ளிட்ட வெளிநாட்டு பௌலர்கள் நிச்சயம் தக்கவைக்கப்படுவார்கள்.
- சர்ஃபராஸ் கான், கார்த்திக் சர்மா, அன்சுல் கம்போஜ், ஷ்ரேயாஸ் கோபால், குர்ஜப்னீத் சிங், ராமகிருஷ்ண கோஷ், முகேஷ் சௌத்ரி, ஆகாஷ் மத்வால் உள்ளிட்டோர் தக்கவைக்கப்படுவார்கள்.
- சிவம் தூபே, டெவால்ட் பிரெவிஸ், கலீல் அகமது ஆகியோர் டிரேடிங் பேச்சுவார்த்தையில் உள்ளனர். ஹர்திக் பாண்டியா போன்ற வீரர் கிடைப்பார் என்றால் இவர்கள் விடுவிக்கப்படலாம். இல்லையெனில் இவர்களும் தக்கவைக்கப்படவே அதிக வாய்ப்புள்ளது.
மும்பை இந்தியன்ஸ்
- ரோஹித் சர்மா மற்றொரு சீசனை விளையாடுவார் என தெரிகிறது. ஜஸ்பிரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா ஆகியோர் மீண்டும் தக்கவைக்கப்படுவார்கள்.
- ஷர்துல் தாக்கூர், தீபக் சஹார் உள்ளிட்ட சீனியர் இந்திய வீரர்களும்; நமன் திர், ராபின் மின்ஸ், அஸ்வானி குமார், மயங்க் மார்க்கண்டே, மஹிபால் லோம்ரோர், அதர்வா அன்கோலேகர் உள்ளிட்ட இளம் இந்திய வீரர்களும் தக்கவைக்கப்படுவார்கள்.
- குவின்டன் டி காக், ரியான், ஷெர்ப்பேன் ரூதர்போர்ட், வில் ஜாக்ஸ, ரியான் ரிக்கல்டன், மிட்செல் சான்ட்னர், அல்லா கசன்பர், கார்பின் பாஷ் உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்கள் நிச்சயம் தக்கவைக்கப்படுவார்கள்.
- ஹர்திக் பாண்டியா டிரேட் பேச்சுவார்த்தையில் உள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
- கடந்த இரண்டு முறையும் சாம்பியன் பட்டத்தை வென்ற அணி என்பதால் பெரியளவில் மாற்றம் இருக்காது.
- விராட் கோலி மீண்டும் ஒரு சீசனில் விளையாடுவார். ரஜத் பட்டிதார் கேப்டன்ஸியை தொடர்வார் என தெரிகிறது.
- புவனேஷ்வர் குமார், தேவ்தத் படிக்கல், வெங்கடேஷ் ஐயர், குர்னால் பாண்டியா, ஜித்தேஷ் சர்மா, ரஷிக் தர், சுயாஷ் சர்மா, ஸ்வப்னில் சிங் உள்ளிட்ட இந்திய வீரர்கள் தக்கவைக்கப்படுவார்கள்.
- விஹான் மல்ஹோத்ரா, மங்கேஷ் யாதவ், அபிநந்தன் சிங், கனிஷ்க் சௌகான் உள்ளிட்ட இளம் வீரர்கள் தக்கவைக்கப்படலாம்.
- பில் சால்ட், ஜேக்கப் பெத்தல், டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், ஜோஷ் ஹேசில்வுட், நுவான் துஷாரா, ஜேக்கப் டஃபி, ஜார்டன் காக்ஸ் என அனைத்து வெளிநாட்டு வீரர்களும் தக்கவைக்கப்படுவார்கள்.
- யாஷ் தயாள் மீதான வழக்கை பொருத்து அவர் தக்கவைக்கப்படுவாரா விடுவிக்கப்படுவாரா என்பது தெரியவரும். கடந்தாண்டு அவர் விடுவிக்கப்படவில்லை என்றாலும் ஐபிஎல் தொடரின் போது அணியுடன் பயணிக்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.