அகில் ஹோசனை வெளியேற்ற CSK திட்டம்.. பதிலுக்கு இந்த அதிரடி வீரர்! பக்கா பிளான்
CSK Latest News: டிரேட் மூலம் அகில் ஹோசனை வேறு அணிக்கு கொடுத்துவிட்டு ஆல்-ரவுண்டரை எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2027 ஐபிஎல்லுக்கு இன்னும் பல மாதங்கள் இருந்தாலும், தற்போதே அணிகளுக்கு இடையில் டிரேட் பேச்சுவார்த்தை சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக ஹர்திக் பாண்டியாவுக்காக அனைத்து அணிகளும் அடித்துக்கொள்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக்கிற்கு மாற்றாக அணியின் எதிர்காலத்தை மனதில் வைத்து இளம் வீரர்களை கேட்கிறது. இதனால் இந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வராமல் இழுபறியில் இருந்து வருகிறது.
உதாரணத்திற்கு ஹர்திக் பாண்டியாவுக்காக சிஎஸ்கே அணி மும்பை அணியை தொடர்பு கொண்டபோது, மாற்று வீரராக ஆயூஷ் மாத்ரேவை கேட்டனர். இந்த டீல் ஒத்துவராததால் சிஎஸ்கே இந்த பேச்சுவார்த்தையை அப்படியே நிறுத்தியது. ஹர்திக் பாண்டியாவை தொடர்ந்து இன்னும் சில முன்னணி வீரர்கள் டிரேடிங் மூலம் அணிகளை மாற்ற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும் எந்த ஒரு பேச்சுவார்த்தையும் இறுதி கட்டத்தை எட்டவில்லை. ரிஷப் பண்ட், குல்தீப் யாதவ் டிரேட் மட்டும் முடிவடைந்துள்ளது.
டேவிட் மில்லரை வாங்க திட்டம்
இந்த நிலையில்தான், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அகில் ஹோசனை டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் கொடுத்துவிட்டு அந்த அணியில் இருக்கும் டேவிட் மில்லரை வாங்கலாம் என்று திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது டெல்லி அணியில் மீண்டும் ரிஷப் பண்ட் இணைந்திருப்பதால், அவருக்கு கேப்டன் பதவியை கொடுக்கலாம் என அந்த அணி நிர்வாகம் யோசிக்கிறதாம். இது தற்போது கேப்டனாக இருக்கும் அக்சர் படேலுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாகவும் இதனால் அவர் அணியை விட்டு வெளியேற முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
அக்சர் படேல் வெளியேறும் பட்சத்தில் ஒரு ஸ்பின்னர் இடம் காலியாகும். இதுவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சாதகமான சூழலாக அமைந்திருக்கிறது. அதாவது, அக்சர் படேல் இடத்திற்கு அகில் ஹோசனை கொடுத்துவிட்டு தனது அணிக்கு தேவைப்படும் பினிஷர் ரோலை பூர்த்தி செய்ய டேவிட் மில்லரை கேட்கலாம் என முடிவு செய்திருக்கிறது சிஎஸ்கே.
2028 மெகா ஏலம் வரை மில்லர்?
ஐபிஎல் 2027 சீசன் முடிந்த பிறகு, 2028 சீசனுக்கு முன்னதாக மெகா ஏலம் நடைபெறும் என கூறப்படுகிறது. எனவே, அதுவரை டேவிட் மில்லரை அணியில் வைத்திருந்து அவரது அனுபவத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது சிஎஸ்கே நிர்வாகத்தின் கணக்காக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2028 மெகா ஏலத்தின்போது தரமான பினிஷர் ஒருவரை புதிதாக வாங்கிக்கொண்டு டேவிட் மில்லை கழற்டிவிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
3 வீரர்களுக்கு குறி
அதேநேரத்தில், சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இடத்தை நிரப்புவதற்காக மூன்று வீரர்களை சிஎஸ்கே நிர்வாகம் குறிவைத்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருக்கும் வாஷிங்டன் சுந்தர் அல்லது சாய் கிஷோரை டிரேடிங் மூலம் வாங்குவது சிஎஸ்கேவின் முதல் திட்டமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த இருவரில் ஒருவரை வாங்க முடியாத பட்சத்தில், டெல்லி கேபிடல்ஸ் அணியைவிட்டு வெளியேற விரும்புவதாக கூறப்படும் அக்சர் படேலை டிரேடிங் மூலம் வாங்கவும் சிஎஸ்கே நிர்வாகம் பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும், அக்சர் படேலை விட இளம் வீரர் ஒருவரை அணிக்குள் கொண்டு வந்தால் நீண்ட காலத்திற்கு அவரை பயன்படுத்தி கொள்ள முடியும் என சிஎஸ்கே நிர்வாகத்தில் சிலர் கருதுவதாக கூறப்படுகிறது. இதனால், அக்சர் படேலுக்காக தனியாக டிரேடிங் பேச்சுவார்த்தை நடத்த வேண்டாம் என்ற நிலைப்பாடும் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.