• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /விளையாட்டு
  • /CSK: நேதன் எல்லிஸுக்கு மாற்று இவர்தான்.. ரூ. 10 கோடி வரை செலவிட முடிவு!

CSK: நேதன் எல்லிஸுக்கு மாற்று இவர்தான்.. ரூ. 10 கோடி வரை செலவிட முடிவு!

ஐபிஎல் 2027 ஏலத்தில் நேதன் எல்லிஸுக்கு மாற்றாக வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மானை ரூ.10 கோடி வரை செலவிட்டு வாங்க சிஎஸ்கே திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Written ByR Balaji
Published: Nov 12, 2026, 02:27 PM IST|Updated: Nov 12, 2026, 02:31 PM IST
joinshare
CSK: நேதன் எல்லிஸுக்கு மாற்று இவர்தான்.. ரூ. 10 கோடி வரை செலவிட முடிவு!

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
ரூ.600 கோடி மதிப்பிலான பங்குகள்... திரும்பப் பெற Zee Entertainment நிறுவனம் முடிவு

ரூ.600 கோடி மதிப்பிலான பங்குகள்... திரும்பப் பெற Zee Entertainment நிறுவனம் முடிவு

2

Explained : தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் வரப்போகுதா? மழை பொய்த்தால் இதுதான் நிலை..

3

CM விஜய்யின் சிறப்பு வட்டி தள்ளுபடி... வீடு, மனை ஒதுக்கீடுதாரர்களுக்கு ஜாக்பாட்

4

செஞ்சியில் மீண்டும் அதிர்ச்சி! 7 வயது சிறுமியை கடத்த முயற்சி.. தப்பித்தது எப்படி? இருவர் கைது

5

என்விடியா CEO விவகாரத்தில் கிளம்பும் பூதம்: இரண்டாவது கள்ள உறவு, மகன்-மகளின் சம்பளம்... பறிபோகும் பதவி?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

2027 ஐபிஎல் தொடருக்கான அணிகள் மாற்றம் மற்றும் வீரர்கள் பரிமாற்ற நடவடிக்கைகள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன. அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முக்கிய டெத் ஓவர் பந்து வீச்சாளரான நேதன் எல்லிஸை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு டிரேடிங் செய்தது விவாதத்தை ஏற்படுத்தியது. இதனால் சிஎஸ்கே அணியில் டெத் ஓவர் பந்துவீச்சுக்கு மாற்று வீரர் தேவைப்படும் சூழல் உருவானது.

இந்த நிலையில், எல்லிஸுக்கு மாற்றாக வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மானை அணியில் இணைக்க சிஎஸ்கே நிர்வாகம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரை வாங்குவதில் தோனியும் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது.

மீண்டும் ஐபிஎல் ஏலத்தில் முஸ்தபிசுர்!

ஐபிஎல் 2026 தொடருக்கான மினி ஏலத்தில் முஸ்தபிசுர் ரஹ்மானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.9.20 கோடிக்கு வாங்கியது. ஆனால், வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை தொடர்ந்து இந்தியாவில் எதிர்ப்புகள் எழுந்தன. இதையடுத்து, ஐபிஎல் தொடரில் வங்கதேச வீரர்களை அனுமதிக்கக் கூடாது என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.

இந்தச் சூழலில், பிசிசிஐயின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து முஸ்தபிசுர் ரஹ்மானை கேகேஆர் அணி விடுவித்தது. இதற்கிடையே, 2026 டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க இந்தியாவுக்கு வர மறுத்த வங்கதேச அணி தொடரிலிருந்து விலகியது. இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டது.

தற்போது வங்கதேசத்தில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், இந்தியாவுடனான உறவில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, ஐபிஎல் 2027 மினி ஏலத்தில் வங்கதேச வீரர்கள் பங்கேற்க பிசிசிஐ அனுமதி அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஏலத்தில் பங்கேற்கும் 7 வங்கதேச வீரர்கள்!

ஐபிஎல் 2027 மினி ஏலத்தில் முஸ்தபிசுர் ரஹ்மான் உட்பட மொத்தம் 7 வங்கதேச வீரர்கள் இடம்பெற உள்ளதாகக் கூறப்படுகிறது.

  • முஸ்தபிசுர் ரஹ்மான்
  • நஹித் ராணா
  • ரிஷாத் ஹோசைன்
  • ஹசன் முகமது
  • தவ்ஹித் ஹிரிடாய்
  • டஸ்கின் அகமது
  • சொரிபுல் இஸ்லாம் ஆகியோர் இடம் பிடித்துள்ளனராம்.  

முஸ்தபிசுருக்காக ரூ.10 கோடி வரை செலவிடுமா சிஎஸ்கே?

கடந்த ஐபிஎல் மினி ஏலத்தின்போதே முஸ்தபிசுர் ரஹ்மானை வாங்குவதற்கு சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையே போட்டி நிலவியது. இறுதியில் அதிக தொகையை செலுத்தி கேகேஆர் அவரை தட்டி சென்றது.

தற்போது மீண்டும் ஏலத்தில் பங்கேற்க உள்ளதால், முஸ்தபிசுர் ரஹ்மானை வாங்க சிஎஸ்கே தீவிரம் காட்டலாம் என கூறப்படுகிறது. அவருக்காக ரூ.10 கோடி வரை செலவிடவும் அணி நிர்வாகம் தயாராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காகவே நேதன் எல்லிஸை டிரேடிங் செய்திருக்கலாம் என்ற ஊகங்களும் எழுந்துள்ளன.

சென்னையில் சிறப்பாக செயல்பட்ட முஸ்தபிசுர்!

முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியபோது முஸ்தபிசுர் ரஹ்மான் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியிருந்தார். 9 போட்டிகளில் களமிறங்கி 14 விக்கெட்களைக் கைப்பற்றினார். குறிப்பாக, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 6 போட்டிகளில் 7.75 எகானமி ரேட்டில் பந்துவீசி 11 விக்கெட்களை வீழ்த்தினார்.

காயம் காரணமாக அவரை அணியிலிருந்து விடுவிக்க வேண்டிய சூழல் சிஎஸ்கேவுக்கு ஏற்பட்டது. தற்போது நல்ல ஃபார்மில் இருப்பதாக கருதப்படும் முஸ்தபிசுர், மீண்டும் அணிக்கு திரும்பினால் டெத் ஓவர்களில் சிஎஸ்கேவுக்கு வலுசேர்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது 31 வயதாகும் முஸ்தபிசுர் ரஹ்மானால் இன்னும் சில ஆண்டுகள் சிறப்பாக விளையாட முடியும் என்ற நம்பிக்கையும் சிஎஸ்கேவின் ஆர்வத்துக்கு காரணமாக கூறப்படுகிறது. இருப்பினும், 2027 ஏலத்தில் அவரை வாங்குவதற்கு சிஎஸ்கே எவ்வளவு தொகை செலவிடும் என்பது ஏலத்தின்போதுதான் தெரியவரும்.
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Chennai Super Kings