• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /விளையாட்டு
  • /CSK-வில் இணையும் 22 வயது அதிரடி வீரர்? அடுத்த டிரேட் இதுதான்.. யாருனு பாருங்க!

CSK-வில் இணையும் 22 வயது அதிரடி வீரர்? அடுத்த டிரேட் இதுதான்.. யாருனு பாருங்க!

Chennai Super Kings Latest Trade News: சிஎஸ்கே அணி சமீபத்தில் ஹைதராபாத் அணியுடன் மேற்கொண்ட டிரேட் ஒப்பந்தம் ரசிகர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், தற்போது டெல்லி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் டிரேட் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Written ByR Balaji
Published: Nov 07, 2026, 02:28 PM IST|Updated: Nov 07, 2026, 02:32 PM IST
joinshare
CSK-வில் இணையும் 22 வயது அதிரடி வீரர்? அடுத்த டிரேட் இதுதான்.. யாருனு பாருங்க!

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
அடியாத்தி.. ரூ. 1 லட்சம் தீபாவளி போனஸா? ஊழியர்களை உறைய வைத்த ஜவுளிக்கடை ஓனர்!

அடியாத்தி.. ரூ. 1 லட்சம் தீபாவளி போனஸா? ஊழியர்களை உறைய வைத்த ஜவுளிக்கடை ஓனர்!

2

டெல்லியில் ரூ.15 கோடி சொகுசு வீடுகள் ஏலம் ரத்து.. NBCC நிறுவனத்துக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

3

CM Vijay Diwali Wish: “பாதுகாப்பாக கொண்டாடுங்கள்”.. தீபாவளி வாழ்த்து கூறிய முதல்வர் விஜய்!

4

சூரிய நட்சத்திர பெயர்ச்சி.. நவம்பர் 20 வரை இந்த 3 ராசிகளுக்கு பணமழை, ராஜயோகம்!

5

கோவை பெரியார் அறிவுலக சர்ச்சை.. அகல்விளக்கு பதிப்பாளர் மோகன் விளக்கம்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐபிஎல் தொடரின் அடுத்த சீசனுக்கான வீரர்கள் பரிமாற்றத்தில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. ஏற்கனவே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மேற்கொண்ட முதல் டிரேடிங் ஒப்பந்தம் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், தற்போது டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் புதிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல் ஒப்பந்தத்தில் வேகப்பந்து வீச்சாளர்களான நாதன் எல்லிஸ், கலீல் அகமது ஆகியோரை விட்டுக்கொடுத்து, லியாம் லிவிங்ஸ்டன் மற்றும் ஜாக் எட்வர்ட்ஸை சிஎஸ்கே அணி பெற்றது. இந்த முடிவு ரசிகர்களிடையே எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அணியின் பேட்டிங் வரிசையை வலுப்படுத்தும் நோக்கில் டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் சிஎஸ்கே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிஎஸ்கே ஜெர்ஷியில் ஷமிர் ரிஸ்வி!

சிஎஸ்கே மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே வீரர்கள் பரிமாற்றம் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில், டெல்லி அணியின் வீரர் ஷமிர் ரிஸ்வி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிஎஸ்கே ஜெர்ஷி அணிந்த புகைப்படத்தை முகப்பு படமாக வைத்துள்ளார்.

இதனால், அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. தற்போது நடைபெற்று வரும் டிரேடிங் பேச்சுவார்த்தை முழுமையாக வெற்றி பெறாவிட்டாலும், ரிஸ்வியை மட்டும் சிஎஸ்கே அணிக்கு கொண்டுவர வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லி கேபிடல்ஸுக்கு ஸ்பின்னர் தேவை!

டெல்லி கேபிடல்ஸ் அணியில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு மாற்றப்பட்ட நிலையில், அந்த இடத்தை நிரப்புவதற்கான வீரரை தேடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், சிஎஸ்கே அணியின் சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமதுவை டெல்லி அணி பெற விரும்புவதாக கூறப்படுகிறது. அவருடன் பேட்டிங் ஆல்ரவுண்டர் ஷிவம் துபேவும் பரிமாற்றத்தில் இடம்பெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

நூர் அகமது போன்ற திறமையான சுழற்பந்து வீச்சாளரை பெறுவதன் மூலம் டெல்லி அணியின் பந்துவீச்சு பிரிவை வலுப்படுத்த முடியும். எனவே, இந்த வீரர்கள் பரிமாற்றத்தை டெல்லி நிர்வாகம் நிராகரிப்பது கடினம் என கூறப்படுகிறது.

அக்சர் படேலை வெளியேற்ற டெல்லி திட்டமா?

டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட அக்சர் படேலுக்கும், அணியின் நிர்வாகத்திற்கும் கடந்த சீசனில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், அக்சர் படேலை அணியில் இருந்து வெளியேற்ற டெல்லி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியிடம் இருந்து ரிஷப் பந்தை ரூ.15 கோடிக்கு டிரேடிங் மூலம் டெல்லி பெற்றுள்ளது.

இந்த சூழலில், ஷிவம் துபே மற்றும் நூர் அகமதுவுக்கு மாற்றாக அக்சர் படேல் மற்றும் ஷமிர் ரிஸ்வியை சிஎஸ்கே பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், ஷமிர் ரிஸ்வியை விட அசுதோஷ் சர்மாவை வாங்குவதில் சிஎஸ்கே நிர்வாகம் அதிக ஆர்வம் காட்டலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாய் கிஷோரை வாங்கவும் சிஎஸ்கே முயற்சி!

இதற்கிடையே, குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து சாய் கிஷோரை வாங்குவதற்கான பேச்சுவார்த்தையிலும் சிஎஸ்கே நிர்வாகம் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

சாய் கிஷோருக்கு மாற்றாக உர்வில் படேலை வழங்க சிஎஸ்கே முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், உர்வில் படேலுக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட்டை வழங்கினால், சாய் கிஷோருடன் காகிசோ ரபாடாவையும் பரிமாற்றத்தில் சேர்க்க தயாராக இருப்பதாக குஜராத் டைட்டன்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், இரு அணிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அக்சர் படேல் மற்றும் சாய் கிஷோர் ஆகியோர் சிஎஸ்கே அணியில் இணைந்தால், அதன் சுழற்பந்து வீச்சு பிரிவு மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Add Zee News as a Preferred Source
TAGS:
Chennai Super Kings