SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

பயிற்சியாளரை கழட்டிவிட்ட CSK... அதிரடி மாற்றம் - 15 வருட உறவு முறிந்தது

ஐபிஎல் 2027 தொடருக்கு முன்பாக சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் குழுவில் அதிரடி மாற்றங்கள் நடைபெறும் நிலையில், 15 ஆண்டுகளுக்கும் மேலான தொடர்புக்குப் பிறகு மைக் ஹஸ்ஸி விலகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Written By R Balaji
Published: Oct 10, 2026, 01:03 PM IST | Updated: Oct 10, 2026, 01:08 PM IST
Join

ஐபிஎல் 2027 தொடருக்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் குழுவில் அடுத்தடுத்து மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீ கான் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட நிலையில், தற்போது சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி அணியில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம், சிஎஸ்கே அணியுடனான அவரது நீண்ட கால பயணம் முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

சிஎஸ்கேவில் இருந்து மைக் ஹஸ்ஸி விலகல்

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான மைக் ஹஸ்ஸி, சிஎஸ்கே அணிக்காக வீரராகவும் பயிற்சியாளராகவும் நீண்ட காலம் பணியாற்றியுள்ளார். அவரது தலைமுறையை சேர்ந்த வீரர்களில் முக்கியமானவராக திகழ்ந்த அவர், சிஎஸ்கே இரண்டு முறை ஐபிஎல் கோப்பையை வென்றபோது வீரராகவும், மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்றபோது பயிற்சியாளர் குழுவிலும் இடம்பெற்றிருந்தார்.

இந்த நிலையில், ஹஸ்ஸியுடனான ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் முடிவை சிஎஸ்கே நிர்வாகம் அவரிடம் தெரிவித்துள்ளதாக கிரிக்பஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இருப்பினும் ஐபிஎல் 2027 தொடரில் அவர் மற்றொரு அணியின் பயிற்சியாளர் குழுவில் இணைய வாய்ப்புள்ளதாகவும் தகவல் தெரிவிக்கிறது. இதற்காக சில அணிகளுடன் ஹஸ்ஸி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

பயிற்சியாளர் குழுவில் அடுத்தடுத்து மாற்றங்கள்

சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் குழுவில் ஏற்கனவே பல முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 18 ஆண்டுகளாக அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ஸ்டீபன் ஃபிளெமிங் அந்த பொறுப்பில் இருந்து விலகியதகவும், பந்துவீச்சு பயிற்சியாளர் எரிக் சைமன்ஸுடனான தொடர்பும் முடிவுக்கு வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஜேம்ஸ் ஃபாஸ்டரின் எதிர்காலமும் இன்னும் உறுதியாகவில்லை என்று கூறப்படுகிறது. தலைமை பயிற்சியாளராக ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் சிஎஸ்கே வேகப்பந்து வீச்சாளர் மொஹித் சர்மா அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மைக் ஹஸ்ஸி விலகியதாக வெளியாகி உள்ள தகவலை தொடர்ந்து சிஎஸ்கே அணியின் அடுத்த பேட்டிங் பயிற்சியாளர் யார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

பயிற்சியாளர் மாற்றங்களில் தோனியின் பங்கு?

சிஎஸ்கே அணியின் முக்கிய முடிவுகளில் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி முக்கிய பங்கு வகித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பயிற்சியாளர் குழுவில் மேற்கொள்ளப்படும் மாற்றங்களிலும் அவரது பங்களிப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

சிஎஸ்கே அணியுடனான மைக் ஹஸ்ஸியின் தொடர்பு 15 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்துள்ளது. தொடக்ககால ஐபிஎல் போட்டிகளில் அணியின் பேட்டிங் வரிசையில் முக்கிய வீரராக விளங்கிய அவர், 2013 ஐபிஎல் தொடரில் மட்டும் 733 ரன்கள் குவித்து தனது திறமையை நிரூபித்தார்.

இந்த நிலையில், ஹஸ்ஸி அணியிலிருந்து விலகியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் சிஎஸ்கே ரசிகர்களிடையே கவனத்தை பெற்றுள்ளது. ஐபிஎல் 2027 தொடருக்கு முன்பாக அணியின் பயிற்சியாளர் குழுவில் மேலும் என்னென்ன மாற்றங்கள் ஏற்படப்போகின்றன என்பதே தற்போது எதிர்பார்ப்பாக உள்ளது. 
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

ZEENEWS TRENDING STORIES