SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ருதுராஜ், சஞ்சு சாம்சன் நீக்கம்? CSK அதிரடி முடிவு.. அப்போ கேப்டன் யார்?

Chennai Super Kings Latest News: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து மற்றொரு அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகி உள்ளது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரையுமே நீக்க தோனி முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Written By R Balaji
Published: Sep 08, 2026, 07:21 IST | Updated: Sep 08, 2026, 07:26 IST
Join

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த மூன்று ஐபிஎல் சீசன்களாகவே கடுமையான தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது. கடைசியாக 2023 ஆம் ஆண்டில் சாம்பியன் பட்டத்தை வென்ற நிலையில், அதன்பின்னர் பிளே ஆஃப் சுற்றுக்கு கூட முன்னேற முடியவில்லை. இதனை சரி செய்யவே 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு அணியில் மாற்ற செய்ய நினைத்து சஞ்சு சாம்சனை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் இருந்து வாங்கி பதிலுக்கு ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரனை விட்டுக்கொடுத்தனர்.

ஆனால் சஞ்சு சாம்சன் அணிக்குள் வந்ததால் டாப் ஆர்டர் கூடுதல் பலம் பெற்றதே தவிர வேறு எந்த பலனும் இல்லை. அவர்களால் ஜடேஜா சென்ற இடத்தை ஈடுகட்ட முடியவில்லை. இந்திய வீரர் பிரசாந்த் வீரை வைத்து ஜடேஜா இடத்தை பூர்த்தி செய்துவிடலாம் என நினைத்து ரூ. 14 கோடி செலவு செய்து அவரை வாங்கினர். ஆனால் அது சுத்தமாக எடுபடவில்லை. இந்த சூழலில், மீண்டும் அணியை கட்டமைக்கும் பணியில் சிஎஸ்கே அணி இறங்கி உள்ளது.

சிஎஸ்கே அணியில் ஜடேஜா இடம் மட்டுமல்லாமல் கேப்டன்சி பிரச்சனையும் தலைத்தூக்கி உள்ளது. தோனியின் தலைமையில் கோப்பையை வென்ற அணி ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் பிளே ஆஃப்பிற்கு கூட முன்னேற முடியவில்லை. சரி ருதுராஜ் கேப்டன்சியில்தான் சொதப்புகிறார் என்று பார்த்தால் பேட்டிங்கிலும் சொதப்பி வருகிறார். 2026 சீசனில் வெறும் 123 ஸ்ட்ரைக் ரேட்டில் மட்டுமே ஆடிய அவர், தனக்கு இன்னும் ஒரு வாய்ப்பினை கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளார். மறுபக்கம் சஞ்சு சாம்சன் தனக்குதான் கேப்டன் பதவியை தர வேண்டும் என சிஎஸ்கே நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளார்.

ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன் நீக்கம்?  

இப்படி கேப்டன்சி பிரச்சனை மேலோங்கி உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இது குறித்த ஆலோசனை மேற்கொண்டுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் எம்.எஸ். தோனியும் கலந்துக்கொண்டு பேசி உள்ளார். ”நமது அணியில் எப்போதும் கேப்டன்சி பிரச்சனை மட்டும் இருக்க கூடாது. இதை நான் எப்போதும் விரும்ப மாட்டேன். பிரச்சன்னை செய்பவர்களை அணியைவிட்டு நீக்க வேண்டும். அப்போதுதான் மற்ற வீரர்களுக்கு ஒரு பயம் இருக்கும். இல்லையென்றால் அவர்களுக்கு பயம் இருக்காது” என சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் தோனி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஹேரி ப்ரூக்கை வாங்க திட்டம்

இந்த நிலையில், ருதுராஜ் மற்றும் சஞ்சு சாம்சனை அணியை விட்டு வெளியேற்ற சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், வரும் மினி ஏலத்தில் இங்லாந்து வீரர் ஹேரி ப்ரூக் ரூ. 25 கோடிக்கு வாங்க தயாராக இருக்குமாறும் தோனி சிஎஸ்கே நிர்வாகத்திற்கு அறிவுறுத்தி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அப்போ சிஎஸ்கே கேப்டன் யார்?

2028 ஐபிஎல் சீசனுக்கு ஆயுஷ் மாத்ரேவை கேப்டனாக நியமித்து அடுத்த 10 ஆண்டுகளுக்கான கேப்டன்சி பிரச்சனையை சரி செய்யவும் நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் ஆயுஷ் மாத்ரே மற்றும் ஹேரி ப்ரூக்கை ஓப்பனராக விளையாட வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கேப்டன்சி அனுபவத்துடன் இருக்கும் ஆயுஷ் மாத்ரே

19 வயதாகும் ஆயுஷ் மாத்ரே ஏற்கனவே கேப்டன் அனுபவத்தை கொண்டுள்ளார். அவர் 19 வயதுக்கு உட்பட்டோருக்காக இந்திய அணியை வழிநடத்தி இருக்கிறார். 18 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட அவர் 15 போட்டிகளில் இந்தியாவுக்கு வெற்றியை பெற்றுத் தந்துள்ளார். மேலும், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் கோப்பையை வென்றுகொடுத்துள்ளார். இதனாலேயே கேப்டன்சி பொறுப்பை ஆயுஷ் மாத்ரேவிடம் கொடுக்க சிஎஸ்கே நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

ருதுராஜ் கெயக்வாட்டுக்கு பின்னடைவு

2028 ஐபிஎல் தொடருக்கு முன்பாக ருதுராஜை அணியில் இருந்து வெளியேற்ற சிஎஸ்கே முடிவு செய்துள்ளது. கேப்டன்சியில் சொதப்பிய அவர் மற்ற அணிகளையும் வழிநடத்த முடியாத சூழலில் உள்ளார். இது அவருக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மேலும், வரும் 2027 ஐபிஎல்லில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு மற்ற அணிகளின் கவனத்தை பெறும் கட்டாயத்திலும் ருதுராஜ் கெயக்வாட் இருக்கிறார். 
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

ZEENEWS TRENDING STORIES