SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

நூர் அகமதுவை கேட்கும் RR.. பதிலுக்கு ரூ. 7.20 கோடி வீரர்! CSK முடிவு என்ன?

CSK Trade Latest Update: சிஎஸ்கே வீரர் நூர் அகமதுவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேட்டதாகவும் பதிலுக்கு ரூ. 7.20 கோடிக்கு வீரரை ஒருவரை கொடுக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Reported By R Balaji Written By R Balaji
Published: Aug 16, 2026, 03:09 PM IST | Updated: Aug 16, 2026, 03:18 PM IST
Join

2027 ஐபிஎல் தொடருக்கான டிரேட் பேச்சுவார்த்தை தற்போதில் இருந்தே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. கிட்டத்தட்ட அனைத்து அணிகளும் வீரர்களுக்கான பேச்சுவார்த்தையில் குதித்துள்ளது. அணிக்கு தேவைப்படும் வீரர்களை வைத்துக்கொண்டு தேவையில்லாத வீரர்களை டிரேட் டீல் மூலம் வெளியேற்ற முயற்சித்து வருகின்றனர்.

குறிப்பாக, ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர் மற்றும் சாய் கிஷோர் போன்ற முக்கிய இந்திய வீரர்களை தங்களது கூடாரத்திற்குள் கொண்டுவர சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் காய் நகர்த்தி வருகிறது. இந்நிலையில், இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் சிஎஸ்கே அணியில் விளையாட தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

சிஎஸ்கே மீது ரவி பிஷ்னோய் ஆர்வம்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள ரவி பிஷ்னோய், தன்னை வேறு அணிக்கு டிரேட் செய்யுமாறு நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார். குறிப்பாக, சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானது என்பதால், சிஎஸ்கே அணியில் இணைந்து தனது முழு திறமையையும் வெளிப்படுத்த விரும்புவதாக அவர் வெளிப்படையாக கூறியுள்ளார்.

கடந்த 2026 சீசனில் ரூ. 7.20 கோடிக்கு வாங்கப்பட்ட பிஷ்னோய், தொடக்க 4 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஆனால், அடுத்த 4 போட்டிகளில் 2 விக்கெட்டுகள் மட்டுமே எடுக்க முடிந்ததால் பிளேயிங் லெவனில் இருந்து ஓரங்கட்டப்பட்டார்.

நூர் அகமதுவுக்கு நோ – ராகுல் சஹாருக்கு ஓகே

ரவி பிஷ்னோயின் விருப்பத்தை தொடர்ந்து, ராஜஸ்தான் நிர்வாகம் சிஎஸ்கேவை அணுகியது. பிஷ்னோயை வாங்க வேண்டுமென்றால், அதற்கு ஈடாக ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமதுவை தர வேண்டும் என நிபந்தனை விதித்தது. ஆனால், நூர் அகமது அணியின் மேட்ச் வின்னராக இருப்பதால் அவரை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது என சிஎஸ்கே மறுத்துவிட்டது. மாறாக, மாற்று வீரராக ராகுல் சஹாரை பரிமாற்றம் செய்துகொள்ளலாம் என சிஎஸ்கே ஆஃபர் கொடுத்துள்ளது.

ராகுல் சஹார் vs ரவி பிஷ்னோய்

ரூ. 5.20 கோடிக்கு வாங்கப்பட்ட ராகுல் சஹார், கடந்த சீசனில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே களமிறங்கி 11.50 எகானமியில் 1 விக்கெட் எடுத்தார். எனவே, அவரை விடுவித்துவிட்டு, லெக்-ஸ்பின்னரான பிஷ்னோயை கொண்டுவருவது சேப்பாக்கம் ஆடுகளத்திற்கு பெரும் பலம் சேர்க்கும்.

மறுபுறம் ரவி பிஷ்னோய் மற்றும் ராகுல் சஹார் இருவரும் ஒரே மாதிரியான லெக்-ஸ்பின் டெக்னிக்கை கொண்டவர்கள் என்பதால், சஹாரை ஏற்பதில் ராஜஸ்தானுக்கு பெரிய பின்னடைவாக இருக்காது.
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

ZEENEWS TRENDING STORIES