• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /விளையாட்டு
  • /இந்தியாவின் டாப் 5 புகழ்பெற்ற மைதானங்கள்... கிரிக்கெட் முதல் ஹாக்கி வரை

இந்தியாவின் டாப் 5 புகழ்பெற்ற மைதானங்கள்... கிரிக்கெட் முதல் ஹாக்கி வரை

Famous Stadiums In India : இந்தியாவில் கிரிக்கெட், கால்பந்து உள்ளிட்டவை மக்களிடம் அதிகம் வரவேற்பு பெற்றிருக்கின்றன. அந்த வகையில், இந்தியாவில் புகழ்பெற்ற டாப் 5 மைதானங்கள் குறித்து இங்கு விரிவாக காணலாம்.

Reported BySudharsan G
Published: Aug 08, 2026, 15:03 IST|Updated: Aug 08, 2026, 15:33 IST
joinshare
இந்தியாவின் டாப் 5 புகழ்பெற்ற மைதானங்கள்... கிரிக்கெட் முதல் ஹாக்கி வரை
Image Credit: Narendra Modi Stadium, Chepauk Stadium

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
வேலை தேடுபவரா? சென்னையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்.. எங்கு? யாரெல்லாம் கலந்து கொள்ளலாம்?

வேலை தேடுபவரா? சென்னையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்.. எங்கு? யாரெல்லாம் கலந்து கொள்ளலாம்?

2

தவெக எம்எல்ஏ வீட்டைச் சுற்றி வளைத்த சிறப்புப் படை: கள்ளக்குறிச்சியில் உச்சக்கட்ட பரபரப்பு!

3

Explainer: LPG விலை முதல் கிரெடிட் கார்ட், ஆயுள் சான்றிதழ் வரை.... டிசம்பர் 1 முதல் முக்கிய மாற்றங்கள்

4

பவுலர் ஸ்டம்பை குறிவைத்து வீசலாம்.. பேட்டர் இல்லாமலேயே விக்கெட்! என்ன இந்த Free Ball Rule?

5

நவம்பர் 26.. அரசியல் சாசனத்தை எரித்த பெரியார்.. காரணம் என்ன? நாட்டையே உலுக்கிய வரலாறு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Famous Top 5 Stadiums In India : இந்தியாவில் விளையாட்டுக்கு முன்பை விட தற்போது அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மாணவர்கள் விளையாட்டில் பங்கேற்பது அதிகரித்திருக்கிறது. விளையாட்டின் மூலம் ஒருவரின் வாழ்க்கை மட்டுமல்ல, ஒரு குடும்பத்தின் வாழ்க்கை மட்டுமல்ல, ஒரு சமூகத்தின் போக்கே மாறிவிடக்கூடும்.

இந்தியாவை பொருத்தவரை கிரிக்கெட் அதிகம் பிரபலமாக இருந்தாலும், கால்பந்து, ஹாக்கி, தடகளம், டென்னிஸ், குத்துச்சண்டை, பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ், செஸ், மல்யுத்தம், பளு தூக்குதல், ஈட்டி எறிதல் என பல விளையாட்டுகளிலும் இந்தியர்கள் தற்போது சாதித்து வருகிறார்கள்.

விளையாட்டுக்கு மிக முக்கியமானது மைதானம்தான். அந்த வகையில், இந்தியாவின் டாப் 5 புகழ்பெற்ற மைதானங்களையும், அதன் சிறப்பம்சத்தையும் இங்கு காணலாம்.

வ.எண் மைதானம்மாநிலம்
1.   நரேந்திர மோடி மைதானம்குஜராத்
2. ஈடன் கார்டன்ஸ் மைதானம் மேற்கு வங்கம்
3. சால்ட் லேக் பார்க் மேற்கு வங்கம்
4. எம்.ஏ. சிதம்பரம் மைதானம் தமிழ்நாடு
5. கலிங்கா மைதானம் ஒடிசா

டாப் 5 புகழ்பெற்ற இந்திய மைதானங்கள்

  1. நரேந்திர மோடி மைதானம்

  • குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் இந்த மைதானம் உள்ளது.
  • உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் இதுதான்.
  • சுமார் 1 லட்சத்து 32 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து கிரிக்கெட் பார்க்கலாம்.
  • நவீன உள்கட்டமைப்பு, உலகத்தரமான ஆடுகளங்கள், எல்இடி விளக்குகள் மற்றும் சிறப்பான வசதிகளை கொண்டது.
  • 2022, 2023, 2025, 2026 என நான்கு ஐபிஎல் இறுதிப்போட்டிகள் இங்குதான் நடைபெற்றுள்ளன. 2023 ஐசிசி உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியும் இங்குதான் நடைபெற்றது.

2.  ஈடன் கார்டன்ஸ்

  • மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தா நகரில் இந்த மைதானம் உள்ளது. இங்கு 68 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை காணலாம்.
  • இந்திய கிரிக்கெட்டின் 'மெக்கா' என்றழைக்கப்படுகிறது. அந்தளவிற்கு பழமையான மைதானம் இது.
  • 1864ஆம் ஆண்டு இந்த மைதானம் கட்டப்பட்டது என்றாலும்; இங்கு முதல்முறையாக டெஸ்ட் போட்டி என்பது 1934ஆம் ஆண்டில்தான் நடைபெற்றது.
  • 1987 ஐசிசி உலகக் கோப்பை, 1996 ஐசிசி உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி ஆகியவை இங்கு நடைபெற்ற முக்கிய போட்டிகளில் ஒன்று.
  • இங்கு உணர்ச்சிப்பூர்வமான ரசிகர்கள் அதிகம். உதாரணத்திற்கு 1999ஆம் ஆண்டில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான ஆசிய டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் சச்சினின் சர்ச்சை ரன்-அவுட் காரணமாக பார்வையாளர்கள் கடுமையாக முற்றுகையிட்டதால், பார்வையாளர்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டார்கள். காலியான அரங்குகளுடன் பாகிஸ்தான் அப்போட்டியை வென்றது.

3. சால்ட் லேக் அரங்கம்

  • இது மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தா நகரில் உள்ளது. இதை விவேகானந்த யுப பாரதி க்ரீராங்கன் என்றும் அழைக்கிறார்கள்.
  • இதுதசான் இந்தியாவின் மிகப்பெரிய கால்பந்து மைதானமாகும். இங்கு கால்பந்து மட்டுமின்றி பலநோக்கு அரங்கம் ஆகும்.
  • 1984ஆம் ஆண்டு முதல் இங்கு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 85 ஆயிரம் பேர் இங்கு அமர்ந்து போட்டியை பார்க்கலாம்.
  • 2017ஆம் ஆண்டு U-17 கால்பந்து உலகக் கோப்பை இறுதிப்போட்டி இங்கு நடைபெற்றது. புகழ்பெற்ற கொல்கத்தா டிராபி கால்பந்து போட்டிகள் இங்கு நடைபெற்று வருகின்றன.
  • மெஸ்ஸி, டியாகோ மரடோனா உள்ளிட்ட பலரும் இந்த மைதானத்திற்கு வருகை தந்துள்ளனர்.

4. எம்.ஏ. சிதம்பரம் மைதானம்

  • சென்னை சேப்பாக்கம் பகுதியில் இந்த மைதானம் உள்ளது.
  • 1916ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தியாவின் 2வது பழமையான மைதானம் இது.
  • இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றின் முதல் வெற்றி இங்குதான் பதிவானது.
  • 38 ஆயிரம் பேர் இந்த மைதானத்தில் அமர்ந்து போட்டியை கண்டு ரசிக்கலாம்.

5. கலிங்கா அரங்கம்

  • ஒடிசா மாநிலத்தின் புவனேஷ்வர் நகரில் இந்த மைதானம் அமைந்துள்ளது.
  • இந்தியாவின் 'ஹாக்கி தலைநகரம்' என்று புகழ்பெற்ற சர்வதேச விளையாட்டு வளாகம்.
  • உலகத்தரம் வாய்ந்த செயற்கை புல்வெளி மைதானங்களை கொண்டது.
  • 2018 மற்றும் 2023 ஆடவர் ஹாக்கி உலகக்கோப்பை போட்டிகள் இங்கு நடைபெற்றது.
  • ஹாக்கி மட்டுமின்றி தடகளம், நீச்சல், கால்பந்து போட்டிகளுக்கான சர்வதேச மையமாகவும் இது திகழ்கிறது.
  • இவற்றை போல்,  மும்பை வான்கடே மைதானம், டெல்லி ஜவஹர்லால் நேரு அரங்கம் உள்ளிட்டவையும் புகழ்பெற்ற பட்டியலில் இருக்கிறது.
Add Zee News as a Preferred Source
TAGS:
Cricket