• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /விளையாட்டு
  • /சேப்பாக்கத்தில் பைனல்... இலவச அனுமதி... கிழக்கு vs தெற்கு - துலீப் டிராபி வரலாறும் பின்னணியும்... Explained

சேப்பாக்கத்தில் பைனல்... இலவச அனுமதி... கிழக்கு vs தெற்கு - துலீப் டிராபி வரலாறும் பின்னணியும்... Explained

Duleep Trophy : துலீப் டிராபி 2026-27 தொடரின் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் வரும் ஞாயிற்றுககிழமை (செப். 6) அன்று தொடங்குகிறது. இப்போட்டியை 5 நாட்களும் இலவசமாக காணலாம். துலீப் டிராபி தொடர் குறித்து முழு விவரங்களையும் இங்கு காணலாம்.

Written BySudharsan G
Published: Sep 04, 2026, 17:22 IST|Updated: Sep 05, 2026, 11:26 IST
joinshare
சேப்பாக்கத்தில் பைனல்... இலவச அனுமதி... கிழக்கு vs தெற்கு - துலீப் டிராபி வரலாறும் பின்னணியும்... Explained
Image Credit: Duleep Trophy | AI Generated Image - ChatGPT

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
தவெக எம்எல்ஏ வீட்டைச் சுற்றி வளைத்த சிறப்புப் படை: கள்ளக்குறிச்சியில் உச்சக்கட்ட பரபரப்பு!

தவெக எம்எல்ஏ வீட்டைச் சுற்றி வளைத்த சிறப்புப் படை: கள்ளக்குறிச்சியில் உச்சக்கட்ட பரபரப்பு!

2

Explainer: LPG விலை முதல் கிரெடிட் கார்ட், ஆயுள் சான்றிதழ் வரை.... டிசம்பர் 1 முதல் முக்கிய மாற்றங்கள்

3

பவுலர் ஸ்டம்பை குறிவைத்து வீசலாம்.. பேட்டர் இல்லாமலேயே விக்கெட்! என்ன இந்த Free Ball Rule?

4

நவம்பர் 26.. அரசியல் சாசனத்தை எரித்த பெரியார்.. காரணம் என்ன? நாட்டையே உலுக்கிய வரலாறு

5

TVK Education Awards: தவெக கல்வி விருது விழாவில் CM விஜய் உரையின் 10 முக்கிய அம்சங்கள்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Duleep Trophy : இஷான் கிஷன் தலைமையிலான கிழக்கு மண்டலம் அணியும், திலக் வர்மா தலைமையிலான தெற்கு மண்டலம் அணியும் துலீப் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் மோத இருக்கின்றன. 56 ஆண்டுகளுக்கு பின்னர் இரு அணிகளும் இறுதிப்போட்டியில் மோத இருப்பதால் பெரும் பரபரப்பு தொற்றியுள்ளது.

இஷான் கிஷன் மட்டுமின்றி துணை கேப்டனாக வைபவ் சூர்யவன்ஷி, சீனியர்களான முகமது ஷமி, முகேஷ் குமார், அபிமன்யூ ஈஸ்வரன் போன்றோர் கிழக்கு மண்டலம் அணியில் விளையாடுகிறார்கள். தெற்கு மண்டலம் அணியில் திலக் வர்மாவுடன் தேவதத் படிக்கல், முகமது சிராஜ், நாராயணன் ஜெகதீசன் உள்ளிட்டோர் விளையாடுகின்றனர்.

அந்த வகையில், துலீப் டிராபியின் வரலாறு, கடந்த வந்த பாதை, தற்போதைய பார்மட், தொடரின் நோக்கம், நடப்பு 2026-27 தொடர் ஆகியவை குறித்து விரிவாக இங்கு தெரிந்துகொள்ளலாம்.

துலீப டிரபி

துலீப் டிராபி வரலாறு, பெயர் காரணம்

ரஞ்சி டிராபி தொடருக்கு மேலான ஒரு உயர் மட்ட போட்டித்தொடராக துலீப் டிராபி தொடர் 1961-62 காலகட்டத்தில் தொடங்கப்பட்டது. இந்திய டெஸ்ட் அணிக்கு தேர்வாக இந்த போட்டித்தொடர் முக்கியமான ஒன்றாக இருக்கும்.

இந்தியாவின் பிறந்து இங்கிலாந்து அணிக்காக விளையாடிய கிரிக்கெட் ஜாம்பவான் குமார் ஸ்ரீ துலீப்சிங்ஜி பெயர் இத்தொடருக்கு சூட்டப்பட்டது. கே.எஸ். ரஞ்சித்சிங்ஜி என்பவரின் பெயர்தான் ரஞ்சி டிராபி தொடருக்கு சூட்டப்பட்டது, இவரது மருமகன்தான் துலீப்சிங்ஜி ஆவார்.

துலீப் டிராபி கடந்து வந்த பாதை

ஆரம்ப காலகட்டத்தில் மண்டல வாரியாக விளையாடப்பட்டது. முதலில் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு மற்றும் மத்திய மண்டலம் என விளையாடப்பட்டது. பின்னர் வடகிழக்கு மண்டலம் சேர்க்கப்பட்டது.

2016-17 மற்றும் 2019-20 ஆகிய இரண்டு சீசன்களில் India Blue, India Red, India green என மூன்று அணிகளாக விளையாடப்பட்டது. 2024-25 சீசனில் India A, B, C, D என விளையாடப்பட்டது. ஆனால், நடப்பு 2026-27 சீசனில் மண்டல வாரியாக 6 அணிகள் பங்கேற்றன.

துலீப் டிராபி சாம்பியன்கள்

தெற்கு மண்டலம் அணி இதுவரை 14 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. கடைசியாக 2023ஆம் ஆண்டில் சாம்பியன் பட்டத்தை வென்றது. அதில் 2 முறை கோப்பையை தெற்கு மண்டலம் பகிர்ந்துள்ளது. 11 முறை இறுதிப்போட்டிக்கு தெற்கு மண்டலம் தகுதிபெற்றுள்ளது. 

Big match. Big stage 🔥

​South Zone’s finals pedigree 🆚 East Zone’s hunt for glory 📊⚡

​Who will step up in Chennai and add the prestigious trophy to their tally? 🏆#DuleepTrophy | #EZvSZ pic.twitter.com/jEL2BdsgD4

— BCCI Domestic (@BCCIdomestic) September 4, 2026

கிழக்கு மண்டம் அணி இதுவரை 2 முறை கோப்பையை வென்றிருக்கிறது. கடைசியாக 2012-13 சீசனில்தான் துலீப் டிராபி தொடரை வென்றது. வடக்கு மண்டலம் அணி இதுவரை 17 முறை சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறது. 1990-91 முதல் 1994-95 என தொடர்ந்து 5 சீசன்களாக வடக்கு மண்டலம் அணி கோப்பையை வென்றிருக்கிறது. மேற்கு மண்டலம் அணி துலீப் டிராபியில் 19 முறை கோப்பையை வென்றிருக்கிறது. மத்திய மண்டலம் 7 முறை வென்றிருக்கிறது. இதுவரை துலீப் டிராபி தொடரை வடகிழக்கு அணி கோப்பையை வென்றதில்லை.

அணிகள் வென்ற கோப்பைகளின் எண்ணிக்கை
வடக்கு மண்டலம்17 முறை
தெற்கு மண்டலம்14 முறை
மேற்கு மண்டலம்19 முறை
கிழக்கு மண்டலம்2 முறை
மத்திய மண்டலம் 7 முறை
India Blue 2 முறை
India Red  2 முறை
India A   ஒரே ஒருமுறை
வடக்கு கிழக்குஇதுவரை வென்றல்லை.

துலீப் டிராபி 2026-27

காலிறுதிப் போட்டிகள்

கடந்தாண்டு இறுதிப்போட்டியில் விளையாடிய தெற்கு மண்டலம் மற்றும் மத்திய மண்டலம் அணிகள் இம்முறை நேரடியாக அரையிறுதி தகுதிபெற்றன. முதல் காலிறுதியில் கிழக்கு மண்டலம் - வடகிழக்கு மண்டலம் அணிகள் மோதின, வடகிழக்கு தோல்வியடைந்து வெளியேறியது. 2வது காலிறுதியில் வடக்கு மண்டலம் - மேற்கு மண்டலம் அணிகள் மோதின, மேற்கு மண்டலம் தோல்வியடைந்து வெளியேறியது.

அரையிறுதிப் போட்டிகள்

முதல் அரையிறுதியில் கிழக்கு மண்டலம் அணி, மத்திய மண்டலம் அணியை எதிர்கொண்டது. அதில் நடப்பு சாம்பியன் மத்திய மண்டலம் தோல்வியடைந்து வெளியேறியது. 2வது அரையிறுதியில் வடக்கு மண்டலம் அணி, தெற்கு மண்டலம் அணியுடன் மோதியது, வடக்கு மண்டலம் அணி தோல்வியடைந்தது.

சேப்பாக்கத்தில் இறுதிப்போட்டி

காலிறுதி மற்றும் அரையிறுதி சுற்றுப்போட்டிகள் பெங்களூருவில் உள்ள பிசிசிஐயின் சிறப்பு மையத்தில் போட்டிகள் நடைபெற்றன. இந்நிலையில், தெற்கு மண்டலம் - கிழக்கு மண்டலம் அணிகள் இறுதிப்போட்டியில மோதும் நிலையில், இப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

இரு அணிகளும் கடந்த 1970-71 சீசனின் இறுதிப்போட்டியில் மட்டுமே மோதியிருக்கிறது. 56 ஆண்டுகளுக்கு முன் நடந்த அப்போட்டியில் தெற்கு மண்டலம் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது குறிப்பிடத்தக்கது.

எப்போது இறுதிப்போட்டி?

காலிறுதி மற்றும் அரையிறுதி போட்டிகள் தலா 4 நாட்கள் நடைபெறும். இறுதிப்போட்டி வரும் செப்டம்பர் 6ஆம் தேதி தொடங்கி, 5 நாட்கள் நடைபெற இருக்கிறது. காலை 9.30 மணி தொடங்கி மாலை 5 மணிவரை போட்டி நடைபெறும். வியாழக்கிழமை (செப்டம்பர் 10) வரை இப்போட்டி நடைபெறும்.

Come and witness the exhilarating #DuleepTrophy Final action live at the M A Chidambaram Stadium 🏟️ 🙌 https://t.co/39aGmxau7z

— BCCI Domestic (@BCCIdomestic) September 3, 2026

இலவச அனுமதி

சென்னை சேப்பாக்கத்தில் இப்போட்டியை காண ரசிகர்களிடம் எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படாது என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. இதனால் 5 நாட்களும் இலவசமாக போட்டியை கண்டுகளிக்கலாம். C, D, E Lower அரங்குகளில் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள். தினமும் காலை 9 மணிக்கு மைதானத்தின் கதவுகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்போட்டியை ஜியோ ஹாட்ஸ்டார் தளத்திலும் நேரலையில் காணலாம். Star Sports Network தொலைக்காட்சி சேனல்களிலும் நேரலையில் போட்டியை காணலாம்.

ஸ்டார் வீரர்கள் விளையாடுவார்களா...?

இதில் கிழக்கு மண்டலம் அணியில் இஷான் கிஷன், வைபவ் சூர்யவன்ஷி, திலக் வர்மா ஆகியோர் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக செப்டம்பர் 13ஆம் தேதி தொடங்கும் டி20ஐ தொடரில் விளையாட இருக்கிறார்கள். தற்போது வரை இவர் துலீப் டிராபியில் விளையாடுவார்கள் என கூறப்படுகிறது. ஆனால், கடைசி நேரத்தில் பிசிசிஐ அவர்களை விளையாட வேண்டாம் என்று கூட சொல்லலாம்.

படிக்கல், சிராஜ் வருகை

அதேநேரத்தில் தெற்கு மண்டலம் அணிக்கு தேவ்தத் படிக்கல் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். தெற்கு மண்டல அணிக்கு சிறப்பாக பந்துவீசி வந்த வித்வத் கவேரப்பா காயத்தில் சிக்கியிருப்பதால் சிராஜின் வருகை தெற்கு மண்டல அணிக்கு வலுசேர்த்துள்ளது.

பிற ஸ்டார் வீரர்கள்

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடர் நாயகன் விருதை வென்ற படிக்கலும் வந்திருப்பது தெற்கு மண்டல அணியை பலப்படுத்தி உள்ளது. ஹைதராபாத் அணியைச் சேர்ந்த சி.வி. மிலிந்தும் தெற்கு மண்டல ஸ்குவாடில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந்த போட்டிகளில் இரு அணிகளின் பிளேயிங் XI

தெற்கு மண்டலம்: ரிக்கி புய், ஷேக் ரஷீத், கொடிமேலா ஹிமதேஜா, திலக் வர்மா (கேப்டன்), ரவிச்சந்திரன் ஸ்மரன், நாராயண் ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), தனய் தியாகராஜன், ஷ்ரேயாஸ் கோபால், கவுரி சைதேஜா, வித்வத் கவேரப்பா, எம்.டி.நிதீஷ்

கிழக்கு மண்டலம்: அபிமன்யு ஈஸ்வரன், வைபவ் சூர்யவன்ஷி (துணை கேப்டன்), குமார் குஷாக்ரா, சுதிப் குமார் கராமி, இஷான் கிஷன்(கேப்டன், விக்கெட் கீப்பர்), விராட் சிங், எம்டி குனைன் குரைஷி, அனுகுல் ராய், அபிஜித் கே சர்கார், முகமது ஷமி, முகேஷ் குமார்.

இரு அணிகளின் ஸ்குவாட்

தெற்கு மண்டலம்: திலக் வர்மா, ரிக்கி புய், ஷேக் ரஷீத், தேவ்தத் படிக்கல், சாய் தேஜா, விஜய், அபினவ் தேஜ்ரானா, கே ஹிமதேஜா, தியாகராஜன், ஸ்மரன் ரவிசந்திரன், ஷ்ரேயாஸ் கோபால், விவ்தத் கவேரப்பா (காயம்), எம்.டி.நிதீஷ்  என்.ஜெகதீசன், அமன் கான், சிராஜ், கே.வி. மிலிந்த். (இதில் யார் விடுவிக்கப்பட்டனர் என்பது இன்னும் தெரிவிக்கப்படவில்லை)

கிழக்கு மண்டலம்: இஷான் கிஷன், வைபவ் சூரியவன்ஷி, டெனிஷ் தாஸ், அபிமன்யு ஈஸ்வரன், சுதிப் குமார் கராமி, ஷாபாஸ் அகமது, சூரஜ் சிந்து குமார் மொஹெங்கல், முகமது குமார், குமார் குஷாக்ரா, ஷிகர் மோகன், அனுகுல் ராய், விராட் சிங், சுப்ரான்ஷு சேனாபதி, மற்றும் அபிஜித் சர்க்கார்.

Add Zee News as a Preferred Source
TAGS:
Explainer