India vs Sri Lanka 1st Test : கிரிக்கெட் ரசிகர்களுக்கு அடுத்த ஒரு மாதத்தில் 19 நாள்களுக்கு டெஸ்ட் விருந்து காத்திருக்கிறது. அதாவது இன்று முதல் செப்டம்பர் 13ஆம் தேதிவரை மட்டும் 7 டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளன.
ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலியா - வங்கதேசம் டெஸ்ட் தொடர், இலங்கையில் இலங்கை - இந்தியா டெஸ்ட் தொடர், இங்கிலாந்தில் இங்கிலாந்து - பாகிஸ்தான் டெஸ்ட் தொடர் என அடுத்தடுத்து போட்டிகள் நடைபெற இருக்கின்றன. ஆஸ்திரேலியாவிலும் இலங்கையிலும் தலா 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் இங்கிலாந்தில் 3 டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகின்றன.
இந்நிலையில், இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடரைக் காண இந்திய ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற இந்திய அணி இந்த இரண்டு போட்டிகளையும் வெல்வது மிக மிக முக்கியம்.
| முதல் டெஸ்ட் | ஆகஸ்ட் 15 - ஆகஸ்ட் 19 | காலே சர்வதேச மைதானம் |
| 2வது டெஸ்ட் | ஆகஸ்ட் 23 - ஆகஸ்ட் 27 | கொழும்பு SSC கிரிக்கெட் மைதானம் |
| தொலைக்காட்சி (நேரலை) | Sony Sports Network | |
| ஓடிடி (நேரலை) | Sony Liv | |
| போட்டி நேரம் | காலை 10 மணி (இந்திய நேரம்) |
சுப்மான் கில் (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரேல் (விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மானவ் சுதர், சரண்ஷ் ஜெயின், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பிரர், ஆகிப் நபி, சர்பராஸ் கான்.
தனஞ்சய டி சில்வா (கேப்டன்), கமிந்து மெண்டிஸ் (துணை கேப்டன்), லஹிரு உதான, நிஷான் மதுஷ்கா, தினேஷ் சந்திமால், பசிந்து சூரியபண்டார, சோலை தினுஷா, நிரோஷன் டிக்வெல்லா, ரமேஷ் மெண்டிஸ், பிரபாத் ஜெயசூரிய, கேஷர நுவந்த, மிலன் ரத்நாயக்க, அசித்த பெர்னாண்டோ, லஹிரு குமார, விஷ்வ பெர்னாண்டோ, டில்ஷான் மதுஷங்க.
இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் - கேஎல் ராகுல் ஜோடி ஓபனிங்கில் களமிறங்கும். நம்பர் 3இல் காயத்தால் விலகிய சாய் சுதர்சனுக்கு பதில் தேவ்தத் படிக்கல் களமிறங்குவது உறுதி. கேப்டன் சுப்மான் கில் நம்பர் 4 இடத்தில் களமிறங்குவார். விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் விளையாடுவார்.
இந்திய அணியை பொறுத்தவரை மூன்று சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்க வாய்ப்புள்ளது. ரவீந்திர ஜடேஜா, மானவ் சுதார், குல்தீப் யாதவ் என மூன்று சுழற்பந்துவீச்சாளர்களுடன் இந்தியா களமிறங்கலாம்.
Maiden Test Call-ups are special
And so are the tales of patience and perseverance around them
Hear it from Saransh Jain & Auqib Nabi - By @mihirlee_58
WATCH #TeamIndia | #SLvINDhttps://t.co/M6Fx2AIeyn— BCCI (@BCCI) August 13, 2026
நம்பர் 6 இடத்தில் ஒரு குழப்பம் ஏற்படும். பேட்டரான சர்பராஸ் கானா அல்லது கூடுதல் விக்கெட் கீப்பரான துருவ் ஜூரேலா அல்லது ஆல்-ரவுண்டரும் அறிமுக வீரரான சரண்ஷ் ஜெயினா. இதில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது கம்பீர் - கில் ஆகியோரின் முடிவுதான்.
துருவ் ஜூரேல் நடந்து முடிந்த இந்தியா ஏ - இலங்கை ஏ தொடரில் சிறப்பாக விளையாடியிருந்தார், அதேநேரத்தில் சர்பராஸ் கான் சுழற்பந்துவீச்சாளர்களை அட்டாக் செய்யக் கூடியவர்கள். இவர்களுக்கே அதிக வாய்ப்பு இருக்கும்.
வேகப்பந்துவீச்சில் முகமது சிராஜ் உடன் யார் களமிறங்குவார் என்பதிலும் குழப்பம் நிலவுகிறது. அனுபவ வீரர் பிரசித் கிருஷ்ணாவுக்கு அதிக வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை பிரசித் கிருஷ்ணாவுக்கு பதில் குர்னூர் பிரர் விளையாட வாய்ப்பிருக்கிறது. ஆகிப் நபிக்கு தற்சமயம் வாய்ப்பில்லை.
யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல் (துணை கேப்டன்), தேவ்தத் படிக்கல், சுப்மான் கில் (கேப்டன்), ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரேல்/சர்பராஸ் கான், ரவீந்திர ஜடேஜா, மானவ் சுதார், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா/குர்னூர் பிரர்.