• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /விளையாட்டு
  • /ஹோட்டல் ஊழியரிடம் பாலியல் அத்துமீறல்... ஆசிய போட்டியில் இந்திய வீரர் வெளியேற்றம் - நடந்தது என்ன?

ஹோட்டல் ஊழியரிடம் பாலியல் அத்துமீறல்... ஆசிய போட்டியில் இந்திய வீரர் வெளியேற்றம் - நடந்தது என்ன?

இந்திய பாரா நீச்சல் வீரர் முகமது ஷாம்ஸ் ஆலம் ஷேக் என்பவர் மீது பாலியல் முறைகேடு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதை தொடர்ந்து அவர் ஆசிய விளையாட்டுத் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டார். மேலும் ஜப்பானில் இருந்து தற்போது அவர் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

Written BySudharsan G
Published: Oct 22, 2026, 01:05 PM IST|Updated: Oct 22, 2026, 01:17 PM IST
joinshare
ஹோட்டல் ஊழியரிடம் பாலியல் அத்துமீறல்... ஆசிய போட்டியில் இந்திய வீரர் வெளியேற்றம் - நடந்தது என்ன?
Image Credit: Mohammed Shams Alam Sheikh | Image Source : Facebook

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
டிராப் ஆனதா வாடிவாசல்? உண்மையை உடைத்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு!

டிராப் ஆனதா வாடிவாசல்? உண்மையை உடைத்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு!

2

’சாப்பாட்டுக்காக பிச்சை எடுத்தேன்..’ உருக்கமாக பேசிய பிரபல பாடகர்! தெருக்களில் உலாவி வீடியோ

3

செஞ்சி: சிறுமி காணாமல் போன முன்பு நடந்தது என்ன? கடைசி வீடியோ இதுதான்!

4

அரசன் படப்பிடிப்பில் மாற்றம்? சிம்புவுக்கு ஓய்வு... வெற்றிமாறனின் அடுத்த பிளான் இதுதான்!

5

ஹோட்டல் ஊழியரிடம் பாலியல் அத்துமீறல்... ஆசிய போட்டியில் இந்திய வீரர் வெளியேற்றம் - நடந்தது என்ன?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய பாரா விளையாட்டுத் தொடர் ஜப்பான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்திய நீச்சல் வீரர் முகமது ஷாம்ஸ் ஆலம் ஷேக் என்பவர் மீது பாலியல் முறைகேடு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதை தொடர்ந்து அவர் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

ஆடவர் 100 மீட்டர் பட்டர்ஃபிளை (S5) பிரிவிலும், 50 மீட்டர் பிரெஸ்ட் ஸ்ட்ரோக் (SB4) பிரிவிலும் ஷேக், உலகின் முன்னாள் நம்பர் 1 நீச்சல் வீரராக திகழ்ந்தவர். இந்திய தூதரக அதிகாரிகளின் முன்னிலையில் ஜப்பான் போலீசார் அவரை காவலில் எடுத்து நீண்டநேரம் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் படிக்க |  MI-யில் இருந்து ஹர்திக் உட்பட 9 வீரர்கள் நீக்கம்? அடுத்த கேப்டன் இவர்தான்? முழு விவரம்

நடந்தது என்ன?

இந்திய வீரர், வீராங்கனைகள் அனைவரும் Four Points by Sheraton Hotel என்ற சொகுசு விடுதியில் தங்கி உள்ளனர். அந்த விடுதியில் பராமரிப்புப் பணியை மேற்கொள்ளும் நேபாள வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணை முறையற்ற விதத்தில் சீண்டினார் என்றும் தவறான முறையில் பிடித்து இழுக்க முயன்றதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் பாதிக்கப்பட்ட பெண் சத்தம் போட்டு, அங்கிருந்து எப்படியோ தப்பித்துச் சென்றுள்ளார். உடனடியாக விடுதியின் மேலாளரிடம் சென்று புகார் தெரிவித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து உள்ளூர் காவல்துறையின் தலையீட்டின் பேரில் அவர் ஆசிய விளையாட்டுத் தொடரில் போட்டிகளில் பங்கேற்பதற்கு முன்னரே உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.

இது இரண்டாவது நபர்

ஜப்பானில் இந்திய குழுவினர் மீது மேற்கொள்ளப்படும் இரண்டாவது ஒழுங்கு நடவடிக்கை இதுவாகும். முன்னதாக, ஆசிய விளையாட்டுத் தொடரின்போது இந்திய ஹாக்கி கூட்டமைப்பில் பணிபுரியும் அதிகாரி ஒருவர், முறைகேடு குற்றச்சாட்டின் பேரி திருப்பி அனுப்பப்பட்டார்.

தர்மசங்கடமான இந்த நிகழ்வை தொடர்ந்து, இந்திய அணியின் பிரதிநிதிகள் ஹோட்டல் நிர்வாகத்திடம் மன்னிப்புக் கோரினர். அதேபோல், ஷேக்கிற்கு வாழ்நாள் தடை விதிக்கவும் வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க | தோனி கொடுத்த டிப்ஸ்... பந்துவீச்சில் உதவியது எப்படி? - சாய் கிஷோர் பகிர்ந்த சீக்ரெட்

இந்திய பாராலிம்பிக் கமிட்டி எடுத்த முடிவு

இந்திய விளையாடடுத் துறையில் வீரர்களின் ஒழுக்கம், பாதுகாப்பு மற்றும் பொறுப்பான நடத்தை தொடர்பான விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. பாலியல் முறைகேடுகள் மற்றும் பிறரின் கண்ணியத்தைப் பாதிக்கும் செயல்களுக்கு எதிராகத் தீவிரமாக நிலைப்பாட்டை இந்தியா பாராலிம்பிக் கமிட்டி எடுத்துள்ளது.

விளையாட்டு வீரர்கள் மட்டுமின்றி சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கும் இந்தியக் குழுவின் ஒவ்வொரு உறுப்பினரும் உயர்ந்த ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும், விளையாட்டுத் திறனுக்குரிய நற்பண்புகளையும் கடைப்பிடிக்க வேண்டும் என்று கமிட்டி வலியுறுத்தி உள்ளது.

ஷேக் தற்போது ஜப்பானில இருந்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். அவர் விளையாடுவதற்கு வாழ்நாள் தடை விதிக்க பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் அவர் நடத்தையின் மீது விசாரணை நடத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் முடிவடைந்த பின்னர் விதிமுறைகளின்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய பாராலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | சிஎஸ்கே குறிவைக்கும் இளம் வீரர்.. போட்டிபோடும் SRH, KKR! முழு விவரம்

Add Zee News as a Preferred Source
TAGS:
Asian Games