• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /விளையாட்டு
  • /MI-யில் இருந்து ஹர்திக் உட்பட 9 வீரர்கள் நீக்கம்? அடுத்த கேப்டன் இவர்தான்? முழு விவரம்

MI-யில் இருந்து ஹர்திக் உட்பட 9 வீரர்கள் நீக்கம்? அடுத்த கேப்டன் இவர்தான்? முழு விவரம்

ஐபிஎல் 2027 தொடருக்கு முன்னதாக ஹர்திக் பாண்டியா உட்பட 9 வீரர்களை விடுவித்து, திலக் வர்மாவை புதிய கேப்டனாக நியமிக்க மும்பை இந்தியன்ஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Written ByR Balaji
Published: Oct 21, 2026, 03:08 PM IST|Updated: Oct 21, 2026, 03:57 PM IST
joinshare
MI-யில் இருந்து ஹர்திக் உட்பட 9 வீரர்கள் நீக்கம்? அடுத்த கேப்டன் இவர்தான்? முழு விவரம்

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
உச்சநீதிமன்றத்தில் வேலை! எந்த டிகிரி இருந்தாலும் ஓகே..ரூ.47,600 சம்பளம்..

உச்சநீதிமன்றத்தில் வேலை! எந்த டிகிரி இருந்தாலும் ஓகே..ரூ.47,600 சம்பளம்..

2

ஊழலை தடுக்க... லஞ்சத்தை ஒழிக்க... முதலமைச்சர் விஜய் எடுத்த முக்கிய ஆக்சன்

3

தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் மிக கனமழை?

4

DA, OPS, ஓய்வூதிய திருத்தம்: வங்கி ஊழியர்களுக்கான கோரிக்கையை பட்டியலிட்ட AIBEA

5

MI-யில் இருந்து ஹர்திக் உட்பட 9 வீரர்கள் நீக்கம்? அடுத்த கேப்டன் இவர்தான்? முழு விவரம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

ஐபிஎல் தொடரில் ஒருகாலத்தில் ஆதிக்கம் செலுத்திய மும்பை இந்தியன்ஸ் அணி, கடந்த சில சீசன்களாக எதிர்பார்த்த வெற்றிகளை பெற முடியாமல் தடுமாறி வருகிறது. குறிப்பாக, 2021 சீசனுக்கு பிறகு புள்ளி பட்டியலில் முதல் 3 இடங்களுக்குள் அந்த அணியால் இடம்பிடிக்க முடியவில்லை. இதனால் அடுத்தடுத்த சீசன்களில் அணியில் செயல்பாட்டை மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தில் மும்பை இந்தியன்ஸ் நிர்வாக இருப்பதாக கூறப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, ஐபிஎல் 2027 தொடருக்கு முன்னதாக அணியில் பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கேப்டன் ஹர்திக் பாண்டியாவை அந்த பொறுப்பில் இருந்து நீக்குவது குறித்தும், அவரை வேறு அணிக்கு டிரேடிங் செய்வது அல்லது ஏலத்திற்கு விடுவது குறித்தும் ஆலோசனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதுதவிர, அணியின் எதிர்கால திட்டங்களுக்கு பொருந்தாத சில வீரர்களையும் விடுவிக்க மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மும்பை அணியில் இருந்து வெளியேற வாய்ப்புள்ள 9 வீரர்கள்

ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட 9 வீரர்களை அணியில் இருந்து விடுவிப்பது குறித்து மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. அந்த பட்டியலில் தீபக் சஹார், ட்ரெண்ட் போல்ட், ராஜ் பாவா, ராபின் மின்ஸ், குவின்டன் டி காக், டேனிஸ் மல்வார், அன்னோலேகர் மற்றும் ரகு சர்மா ஆகியோரும் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வந்தால், அணியில் காலியாகும் இடங்களை நிரப்புவதுடன், பலவீனமாக இருக்கும் துறைகளையும் வலுப்படுத்த வேண்டியிருக்கும். எனவே, வீரர்களை தேர்வு செய்வதில் மும்பை அணி கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய சூழல் உருவாகும்.

5 முக்கிய இடங்களுக்கு புதிய வீரர்கள் தேவை

வீரர்கள் வெளியேற்றப்பட்டால், மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்த சீசனுக்கான வீரர்கள் தேர்வில் சில முக்கியமான தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டியிருக்கும். குறிப்பாக, தொடக்க வீரர்கள் மற்றும் பந்துவீச்சு துறையில் கூடுதல் பலத்தை ஏற்அடுத்த வேண்டிய நிலை உள்ளது.

விக்கெட் கீப்பிங் செய்யக்கூடிய தொடக்க ஆட்டக்காரர், அதிரடியாக விளையாடும் மற்றொரு ஓபனர், டெத் ஓவர்களில் சிறப்பாக பந்துவீசக்கூடிய வீரர், முழுநேர சுழற்பந்து வீச்சாளர் மற்றும் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் என மொத்தம் 5 இடங்களுக்கு வீரர்களை தேர்வு செய்ய வேண்டிய இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, டிரேடிங் மற்றும் ஏலத்தின் மூலம் பொருத்தமான வீரர்களை கொண்டுவர மும்பை அணி திட்டமிடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹர்திக் பாண்டியா டிரேடிங்.. மும்பையின் எதிர்பார்ப்பு என்ன?

ஹர்திக் பாண்டியாவை வேறு அணிக்கு மாற்றுவது தொடர்பான பேச்சுவார்த்தைகளின் மும்பை இந்தியன்ஸ் நிர்வாக கவனமாக செயல்படுவதாக கூறப்படுகிறது. ஹர்திக்கிற்கு பதிலாக ஒரு வீரரை மட்டும் பெறுவதற்கு பதிலாக, இரண்டு வீரர்களை பெற வேண்டும் என்பதில் மும்பை நிர்வாகம் உறுதியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் இருந்து யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் மற்றொரு வீரரை பெறுவது குறித்து மும்பை அணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும், வீரர்களின் பரிமாற்றம் தொடர்பாக இரு அணிகளுக்கும் இடையே ஒருமித்த முடிவு எட்டப்படவில்லை என தெரிகிறது.

இதற்கிடையில், SRH அணியுடனும் ஹர்திக் பாண்டியாவின் டிரேடிங் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஹர்திக்கிற்குய் பதிலாக ஜஸ்பிரித் பும்ராவை வழங்கினால், இஷான் கிஷன் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகிய இருவரையும் கொடுக்க தயாராக இருப்பதாக ஹைதராபாத் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த முன்மொழிவுக்கு மும்பை இந்தியன்ஸ் சம்மதிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மறுபுறம் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் ஹர்திக்கை வாங்குவதற்கான முயற்சிகளில் இருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஹர்திக்கை அணியில் சேர்க்க ஆர்வம் காட்டியதாகவும் அதற்கு பதிலாக ரிங்கு சிங் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோரை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் அந்த அணியும் பின்வாங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய சூழலில், யாஷ்ஸ்வி ஜெய்ஸ்வாலை வழங்கிவிட்டு ஹர்திக்கை பெறுவது குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடர்ந்து பேசி வருவதாக கூறப்படுகிறது. ஆனால், மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் இரண்டு வீரர்களை எதிர்பார்ப்பதால், இந்த டிரேடிங் ஒப்பந்தம் இறுதியாகும் நிலையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

மும்பை இந்தியன்ஸின் அடுத்த கேப்டன் யார்?

ஹர்திக் பாண்டியா கேப்டன் பொறுப்பில் இருந்து விலகும் பட்சத்தில், அடுத்த கேப்டனை தேர்வு செய்வது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு முக்கியமான பணியாக இருக்கும். இந்த தேர்வு தொடர்பான பொறுப்பை ரோஹித் சர்மாவிடம் நிர்வாகம் ஒப்படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து, இளம் வீரர் திலக் வர்மாவை அடுத்த கேப்டனாக நியமிக்க ரோஹித் சர்மா பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது. அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இளம் வீரரிடம் தலைமை பொறுப்பை ஒப்படைக்க மும்பை நிர்வாகம் ஆலோசித்து வருவதாக தெரிகிறது.

இருப்பினும், ஹர்திக் பாண்டியாவின் டிரேடிங் தொடர்பான முடிவு இறுதியான பிறகே புதிய கேப்டன் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் 2027 தொடருக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இத்தகைய மாற்றங்கள் நிகழுமா என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்கு பிறகே தெரியவரும்.
 

Add Zee News as a Preferred Source
TAGS:
IPL