• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /விளையாட்டு
  • /IPL 2027: கையில் ரூ. 28 கோடி.. CSK டார்கெட் செய்யும் 8 வீரர்கள்? யார் யார் பாருங்க!

IPL 2027: கையில் ரூ. 28 கோடி.. CSK டார்கெட் செய்யும் 8 வீரர்கள்? யார் யார் பாருங்க!

CSK 2027 IPL Mini Auction Target Player: ஐபிஎல் 2027 மினி ஏலத்திற்கு முன்னதாக 11 வீரர்களை விடுவித்து ரூ.28.05 கோடி கையிருப்புடன் களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தீபக் சஹார், துஷார் தேஷ்பாண்டே, நேஹல் வதேரா மற்றும் முஸ்தபிசுர் ரஹ்மான் உள்ளிட்ட 8 முக்கிய வீரர்களை குறிவைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Written ByR Balaji
Published: Nov 18, 2026, 14:32 IST|Updated: Nov 18, 2026, 14:37 IST
joinshare
IPL 2027: கையில் ரூ. 28 கோடி.. CSK டார்கெட் செய்யும் 8 வீரர்கள்? யார் யார் பாருங்க!

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

2

Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

3

இதுவும் பாலியல் துன்புறுத்தலே... கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் - பொதுவெளியில் பெண் நீதிபதி பகீர்

4

Gold Price: அதிரடியாக குறையும் தங்கம் விலை.. மோடி மேஜிக் தான் காரணமா?

5

“குழந்தை பெத்துக்காேங்க..” இஸ்லாமியர்கள் அதிகரிப்பால் ட்ரம்ப் ஆதரவாளர் கொடுத்த ஐடியா..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

2027 ஐபிஎல் மினி ஏலத்தை முன்னிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது வீரர்கள் பட்டியலில் பல்வேறு மாற்றங்களை செய்துள்ளது. மொத்தம் 11 வீரர்களை விடுவித்துள்ள சிஎஸ்கே, ஏலத்தில் புதிய வீரர்களை வாங்குவதற்கான தொகையையும் கையில் வைத்துள்ளது. குறிப்பாக சிஎஸ்கே நிர்வாகம், பந்துவீச்சு துறையை வலுப்படுத்தும் நோக்கில் சில முக்கிய வீரர்களை குறிவைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரசாந்த் வீரை விடுவித்ததன் மூலம் சிஎஸ்கேவுக்கு ரூ. 14.20 கோடி கிடைத்துள்ளது. அதேபோல் ராகுல் சாஹரை விடுவித்ததன் மூலம் ரூ. 5.20 கோடியும் கிடைத்தது. இதுதவிர ஜாக் போல்க்ஸ், டியோன் போரெஸ்டர் ஆகியோர் மூலம் ரூ. 75 லட்சம், குல்டிப் யாதவ், ஆகாஷ் மத்வால் ஆகியோர் மூலம் தலா ரூ. 30 லட்சமும் கிடைத்துள்ளது. மேலும், மேட் ஹென்றி (ரூ. 2 கோடி), மேத்யூ ஷார்ட் (ரூ. 1.50 கோடி), அமன் கான் (ரூ. 40 ல்ட்சம்), நோரன்ஹா (ரூ. 30 லட்சம்) என மொத்தம் 11 வீரர்களை விடுவித்ததன் மூலம் சுமார் 28.05 கோடி தொகையுடன் சிஎஸ்கே மினி ஏலத்தில் பங்கேற்க உள்ளது.

மினி ஏலத்தில் சிஎஸ்கே குறிவைக்க வாய்ப்புள்ள வீரர்கள்

கையில் ஓரளவுக்கான தொகை இருப்பதால், அணியின் தேவைக்கு ஏற்ப அனுபவம் வாய்ந்த வீரர்களையும் திறமையான இளம் வீரர்களையும் சிஎஸ்கே வாங்க முயற்சிக்கும் என தெரிகிறது. குறிப்பாக, மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட தீபக் சஹாரை ஏலத்தில் வாங்குவதற்கு வாய்ப்புள்ளது. அவரை அதிகபட்சமாக ரூ.6 கோடிக்குள் வாங்க சிஎஸ்கே முயற்சி செய்யலாம் என கூறப்படுகிறது.

அதேபோல், சுழற்பந்து வீச்சுடன் பேட்டிங்கிலும் பங்களிக்கக்கூடிய நேஹல் வதேரா மீதும் சிஎஸ்கே கவனம் செலுத்தலாம் என கூறப்படுகிறது. ஐபிஎல் தொடரில் இதுவரை 44 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 23.76 சராசரியிலும் 140 ஸ்ட்ரைக் ரேட்டிலும் 784 ரன்கள் எடுத்துள்ளார். இதில் நான்கு அரை சதங்களும் அடங்கும். மேலும், அவரது பந்துவீச்சு எகானமி 7.76 ஆக உள்ளது. பேட்டிங் மற்றும் சுழற்பந்து வீச்சு என இரண்டிலும் உதவக்கூடிய வீரர் என்பதால், வதேராவை வாங்குவதற்கு சிஎஸ்கே ரூ.7 கோடி வரை செலவிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரை, துஷார் தேஷ்பாண்டேவை மீண்டும் அணிக்கு கொண்டுவர சிஎஸ்கே முயற்சி செய்யலாம் என தெரிகிறது. ஏற்கெனவே சிஎஸ்கே அணிக்காக விளையாடியபோது தனது திறமையை நிரூபித்துள்ள அவர், ஏலத்தில் ரூ.5 கோடி வரை செல்ல வாய்ப்புள்ளது.

நிதிஷ் ராணாவுக்கு குறி?

மிடில் ஆர்டரில் கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் நிதிஷ் ராணாவையும் சிஎஸ்கே பரிசீலிக்கலாம். அவரை வாங்குவதற்கு ரூ.5 கோடி வரை செலவிட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாட்டு வீரர்களில் யாருக்கு டார்கெட்?

வெளிநாட்டு வீரர்களை பொறுத்தவரை முஸ்தபிசுர் ரஹ்மான் மற்றும் ஜிம்பாப்வே வேகப்பந்து வீச்சாளர் பிளெஸ்ஸிங் முசரபானி ஆகியோரையும் சிஎஸ்கே குறிவைக்கலாம். இருவரையும் அடிப்படை விலையிலேயே வாங்குவதற்கு முயற்சி செய்யலாம். ஒருவேளை போட்டி அதிகரித்தால், முஸ்தபிசுர் ரஹ்மானுக்காக ரூ.5 கோடி வரை செலவிடவும் சிஎஸ்கே தயாராக இருக்கலாம்.

பந்துவீச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்குமா சிஎஸ்கே?

சிஎஸ்கே அணியின் தற்போதைய நிலையை பார்க்கும்போது, பேட்டிங் வரிசையைவிட பந்துவீச்சு பிரிவை வலுப்படுத்துவதற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படலாம். வேகப்பந்து வீச்சாளர்கள், சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களை வாங்குவதில் அணி நிர்வாகம் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.28.05 கோடி இருப்பதால், தேவையான வீரர்களை தேர்வு செய்து ஏலத்தில் போட்டியிடுவதற்கு சிஎஸ்கேவுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது.

டிரேடிங் விதிகளில் மாற்றம்!

இதற்கிடையே, ஐபிஎல் அணிகளுக்கிடையிலான வீரர்கள் பரிமாற்றம் தொடர்பான விதிகளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, நவம்பர் 17ஆம் தேதியுடன் டிரேடிங் ஒப்பந்தங்களுக்கான காலக்கெடு முடிவடையும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது மினி ஏலம் தொடங்குவதற்கு ஒரு வாரம் முன்பு வரையிலும் அணிகள் டிரேடிங் தொடர்பான பேச்சுவார்த்தைகளை தொடரலாம் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், மினி ஏலம் நிறைவடைந்த பின்னரும் வீரர்கள் பரிமாற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், ஏலத்திற்கு முன்பும் அதற்குப் பிறகும் அணிகளுக்கு இடையிலான டிரேடிங் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற வாய்ப்புள்ளது. பிப்ரவரி இறுதி வரையிலும் வீரர்கள் பரிமாற்றம் தொடர்பான நடவடிக்கைகள் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Chennai Super Kings