SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ஐபிஎல் 2027 மினி ஏலம்: CSK, MI விடுவிக்க வாய்ப்புள்ள வீரர்கள்!

ஐபிஎல் 2027 மினி ஏலத்திற்கு முன்னதாக சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட அணிகள் விடுவிக்க வாய்ப்புள்ள வீரர்கள் குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணிப்புகளை வெளியிட்டுள்ளார்.

Written By R Balaji
Published: Nov 08, 2026, 06:30 PM IST | Updated: Nov 08, 2026, 06:33 PM IST
Join

ஐபிஎல் 2027 தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 16ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அணிகள் தங்களது வீரர்கள் பட்டியலில் மாற்றங்களை செய்ய தயாராகி வருகின்றன. இதற்கிடையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா, ஏலத்திற்கு முன்பாக எந்தெந்த அணிகள் முக்கிய வீரர்களை விடுவிக்க வாய்ப்புள்ளது என்பது குறித்த தனது கணிப்புகளை வெளியிட்டுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை, ஏலத்தில் கூடுதல் தொகையுடன் களமிறங்கும் வகையில் ஐந்து வீரர்களை விடுவிக்கலாம் என சோப்ரா தெரிவித்துள்ளார். பிரசாந்த் வீர், மேட் ஷார்ட், மேட் ஹென்றி, ஜாக் ஃபோல்க்ஸ் மற்றும் ராகுல் சாகர் ஆகியோர் அவரது பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். மறுபுறம், நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் ரொமாரியோ ஷெப்பர்டை விடுவிக்க வாய்ப்புள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், ஆர்சிபி அணி எந்த வீரரையும் விடுவிக்காமல் தொடரலாம் என்றும் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

கேகேஆர், ராஜஸ்தான் அணிகளில் மாற்றங்கள்?

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட மதீஷ பத்திரண மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் விடுவிக்கப்படலாம் என ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆல்ரவுண்டர் சாம் கர்ரன் வெளியேற வாய்ப்புள்ளதாகவும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் நபி விடுவிக்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ரிஷப் பண்ட்டை அணியிலிருந்து விடுவித்துள்ள லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில், வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் எதிர்காலம் குறித்தும் சோப்ரா பேசியுள்ளார். வதந்திகளின் அடிப்படையில் ஷமி விடுவிக்கப்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதேபோல், பஞ்சாப் கிங்ஸ் அணி டிரேடிங் மூலம் ஹார்திக் பாண்டியாவை அணியில் சேர்த்தால், மார்கஸ் ஸ்டாய்னிஸை விடுவிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து எந்த வீரரையும் அவர் தனது கணிப்பில் குறிப்பிடவில்லை.

ஹார்திக் பாண்டியாவை விடுவிக்குமா மும்பை இந்தியன்ஸ்?

மும்பை இந்தியன்ஸ் அணியில் டிரென்ட் போல்ட் மற்றும் ஹார்திக் பாண்டியா ஆகியோர் விடுவிக்கப்படலாம் என ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். குறிப்பாக, ஹார்திக் பாண்டியா அணியிலிருந்து வெளியேறினாலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் செயல்பாட்டில் பெரிய பாதிப்பு ஏற்படாது என்பது அவரது கருத்தாக உள்ளது.

மும்பை அணியின் பேட்டிங் வரிசையில் போதுமான வீரர்கள் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், ரோஹித் சர்மாவுடன் ரியான் ரிக்கல்டன் அல்லது குயின்டன் டி காக் தொடக்க வீரர்களாக களமிறங்கலாம் என தெரிவித்துள்ளார். மேலும், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் மற்றும் நமன் தீர் ஆகியோர் நடுவரிசையில் வலுவான தேர்வுகளாக இருப்பதாகவும் கூறியுள்ளார். வில் ஜாக்ஸையும் அணியில் பயன்படுத்த முடியும் என்பதால், ஹார்திக் பாண்டியா இல்லாத சூழலை மும்பை சமாளிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

மீண்டும் சாம்பியன் பட்டத்தை வெல்லுமா மும்பை?

மும்பை இந்தியன்ஸ் அணி கடைசியாக 2020ஆம் ஆண்டு ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றது. அதன் பிறகு அந்த அணியால் கோப்பையை கைப்பற்ற முடியவில்லை. கடந்த மூன்று சீசன்களில் ஒருமுறை மட்டுமே பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இந்த நிலையில், ஐபிஎல் 2027 தொடருக்கு முன்னதாக அணியில் மாற்றங்களை மேற்கொண்டு மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்ப மும்பை இந்தியன்ஸ் முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வீரர்களை விடுவிப்பது குறித்த ஆகாஷ் சோப்ராவின் கணிப்புகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில், இறுதி வீரர்கள் பட்டியல் மற்றும் அணிகளின் முடிவுகள் ஏலத்திற்கு முன்பாகவே தெரியவரும்.
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

ZEENEWS TRENDING STORIES