SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

IPL 2027 மினி ஏலம்: ”சிஎஸ்கே இந்த 4 வீரர்களை குறிவைக்க வேண்டும்” - ரவிச்சந்திரன் அஸ்வின்!

Chennai Super Kings Latest News: சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தான் தக்கவைத்த மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியலை நேற்று வெளியிட்ட நிலையில், ஐபிஎல் மினி ஏலம் குறித்து சிஎஸ்கே அணி எந்தெந்த வீரர்களுக்கு குறி வைக்க வேண்டும் என்பது குறித்து முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சில முக்கிய ஆலோசனைகளை வழங்கி உள்ளார். குறிப்பாக அவர் மூன்று வீரர்களை குறிப்பிட்டுள்ளார். அவர்கள் யார் யார்? என்பதை இங்கே பார்க்கலாம்.

Written By R Balaji
Published: Nov 18, 2026, 07:28 IST | Updated: Nov 18, 2026, 07:32 IST
Join

ஐபிஎல் தொடரின் அடுத்த சீசனுக்கான வீரர்கள் தக்கவைப்பு மற்றும் விடுவிப்பு பட்டியலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று (நவம்பர் 17) வெளியிட்டது. இந்த நிலையில், சிஎஸ்கே அணியின் தேர்வு குறித்து தனது பார்வையை ரவிச்சந்திரன் அஸ்வின் பகிர்ந்துள்ளார். அவர் சிஎஸ்கே அணியின் ரிடென்ஷன் பெரும்பாலும் எதிர்பார்த்தபடியே அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், மினி ஏலத்தில் எந்த வீரரை குறி வைக்க வேண்டும் என்பது குறித்து அஸ்வின் பேசி உள்ளார்.

”இந்த 4 வீரர்களை சிஎஸ்கே குறிவைக்க வேண்டும்” - ரவிச்சந்திரன் அஸ்வின்

இது குறித்து பேசிய அஸ்வின், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரிடென்ஷன் நடவடிக்கைகள் பெரும்பாலும் நாம் எதிர்பார்த்தை போலவே அமைந்துள்ளன. மினி ஏலத்தில் இந்த முறை அவர்கள் சிம்ரன் ஹெட்மயரை வாங்க முயற்சி செய்ய வேண்டும். லிவிங்ஸ்டன், பிரெவிஸ் ஆகியோர் சிறப்பாக விளையாடாத பட்சத்தில் ஹெட்மயர் நல்ல மாற்றாக இருப்பார்.

பந்துவீச்சை பொறுத்தவரை, 2023 சீசனில் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய வீரர்களை மீண்டும் அழைத்து வர முயற்சிக்கலாம். தீபக் சஹர், துஷார் தேஷ்பாண்டே, பதிரானா ஆகியோரை வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதேபோல், அவேஷ் கானையும் சிஎஸ்கே குறிவைக்கக்கூடும் என தெரிவித்தார்.

கார்த்திக் சர்மாவை விடுவித்திருக்கலாம்.

தொடர்ந்து பேசிய அவர், சிஎஸ்கே நிர்வாகம் கார்த்திக் சர்மாவை விடுவித்திருக்கலாம். அதன் மூலம் அவர்களுக்கு கூடுதலாக ரூ. 14 கோடி கிடைத்திருக்கும். அதை ஏலத்தில் செலவு செய்து ஒரு சிறந்த வீரரை வாங்க உதவியாக இருந்திருக்கும். அதுதான் எனக்கு இருக்கும் ஒரே வருத்தம் என கூறினார்.

சிஎஸ்கே இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்

வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர்களை தேர்வு செய்வதில் சிஎஸ்கே கவனமாக இருக்க வேண்டும். சேப்பாக்கம் மைதானத்தில் அவர்களால் எந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட முடியும் என்பதையும் பார்க்க வேண்டும். சுழற்பந்துவீச்சை பொறுத்தவரை, தமிழ்நாட்டை சேர்ந்த திறமையான வீரர் ஒருவரை அடையாளம் கண்டு வாய்ப்பு வழங்க வேண்டும். இந்த முறை சிஎஸ்கே அணி நிச்சயம் கம்பேக் கொடுக்கும் என்று நம்புகிறேன். தோனி ஆலோசகராக இருக்கும் நிலையில், சிஎஸ்கே அணியை அவ்வளவு எளிதாக எடைபோட்டுவிட முடியாது.” இவ்வாறு அஸ்வின் தெரிவித்தார்.

சிஎஸ்கே தக்கவைத்த வீரர்கள்: அகேல் ஹொசின், அன்ஷுல் கம்போஜ், ஆயுஷ் மாத்ரே, டெவால்ட் ப்ரீவிஸ், குர்ஜப்னீத் சிங், ஜாக் எட்வர்ட்ஸ், ஜேமி ஓவர்டன், கார்த்திக் சர்மா, லியாம் லிவிங்ஸ்டோன், முகேஷ் சவுத்ரி, நூர் அகமது, ராகுல் சாஹர், ராமகிருஷ்ண கோஷ், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், சர்பராஸ் கான், சிவம் துபே, ஷ்ரேயாஸ் கோபால், உர்வில் படேல்.

சிஎஸ்கே விடுவித்த வீரர்கள்: ஆகாஷ் மத்வால், அமன் கான், டியான் ஃபாரெஸ்டர், குல்தீப் யாதவ், மக்னீல் நோரோன்ஹா, மத்தேயு ஷார்ட்,  மாட் ஹென்றி, எம்எஸ் தோனி (ஓய்வு பெற்றவர்), பிரசாந்த் வீர், ஸ்பென்சர் ஜான்சன், Zak Foulkes, கலீல் அகமது, நாதன் எல்லிஸ். 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

ZEENEWS TRENDING STORIES