மினி ஏலத்திற்கு வரும் இந்த 3 வீரர்கள்... யாருக்கு கோடிகள் கொட்டப்போகுது?
IPL 2027 Mini Auction : தற்போது ஐபிஎல் அணிகளில் விளையாடி வரும் இந்த மூன்று வீரர்கள் 2027 மினி ஏலத்திற்கு வர அதிக வாய்ப்புகள் உள்ளன. அவர்கள் யார் யார் என இங்கு விரிவாக காணலாம்.
IPL 2027 Mini Auction : இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் நிகழ்வாக ஐபிஎல் 2027 மினி ஏலம் இருக்கிறது. இதுதான் ஐபிஎல் சுழற்சியில் கடைசி மினி ஏலம், இதற்கு பின் 2028 சீசனில் மெகா ஏலம்தான்.
மெகா ஏலம் என்றால் சில வீரர்களை மட்டுமே தக்கவைக்க முடியும். மொத்தமாக பல வீரர்களை விடுவிக்க வேண்டும். அதுவே மினி ஏலம் என்றால் பெரும்பாலான வீரர்கள் தக்கவைக்கப்படுவார்கள். சில வீரர்கள் மட்டுமே விடுவிக்கப்படுவார்கள்.
மினி ஏலத்தில் அதிக டிமாண்ட்
இதனால், மினி ஏலத்தில் நல்ல வீரர்களுக்கு பெரியளவில் டிமாண்ட் இருக்கும். எனவே ஏலத்திற்கு வரும் முக்கிய வீரர்களுக்கு கோடிகள் கொட்டும். எனவேதான், பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள், அதிக தொகையை பெற நேரடியாக மினி ஏலத்தில் தங்களின் பெயரை பதிவு செய்து வந்தனர்.
இதற்கு கடந்த 2025 மெகா ஏலத்தில் ஐபிஎல் நிர்வாகம் வெளிநாட்டு வீரர்களுக்கு பெரிய கட்டுப்பாட்டை கொண்டுவந்தது. அதாவது, மெகா ஏலத்தில் பெயரை பதிவு செய்தால் மட்டுமே மினி ஏலத்திலும் பெயரை பதிவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டது.
மினி ஏலத்திற்கு வரும் 3 வீரர்கள்
இதனால், பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்ட வீரர்களால் மினி ஏலத்தில் தங்களின் பெயரை கொடுக்க முடியாது. ஐபிஎல் 2028 மெகா ஏலத்தில் பென் ஸ்டோக்ஸ் பதிவு செய்தால் மட்டுமே அடுத்து அவரால் ஐபிஎல் தொடரில் விளையாட முடியும்.
இவை ஒருபுறம் இருக்க, தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் இந்த மூன்று வீரர்கள் 2027 மினி ஏலத்திற்கு வர அதிக வாய்ப்புள்ளது. அந்த வீரர்கள் யார் யார் என்பதை இங்கு காணலாம்.
டிரென்ட் போல்ட்
- நியூசிலாந்து வீரரான டிரென்ட் போல்ட் (37) முன்னர் போல் இல்லை. பந்து ஸ்விங் செய்ய சூழல் இல்லை என்றால் இவரால் பெரிய தாக்கத்தை உருவாக்க முடியவில்லை.
- எனவே இவரை கழட்டிவிட மும்பை அணி முடிவெடுத்துள்ளது. இடது கை வேகப்பந்துவீச்சாளரான இவரை ரூ.12.50 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
பிரைடன் கார்ஸ்
- இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளரான பிரைடன் கார்ஸை 2025 மெகா ஏலத்தில் ரூ. 1 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எடுத்தது. ஆனால், இவர் இன்னும் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. இரண்டு சீசனிலும் காயம் காரணமாக இவரால் விளையாட முடியவில்லை.
- சன்ரைசர்ஸ் அணிக்கு நல்ல வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர் தேவை என்பதால் இவரை விடுவிக்க அதிக வாய்ப்புள்ளது. இவருக்கு பதில் கஸ் அட்கின்சனை எஸ்ஆர்ஹெச் எடுக்க வாய்ப்புள்ளது.
டி நடராஜன்
- டெல்லி அணியில் இடது கை வேகப்பந்துவீச்சாளரான நடராஜன் கழட்டிவிடப்பட அதிக வாய்ப்புள்ளது. அந்த அணியில் ஏற்கெனவே இடது கை வேகப்பந்துவீச்சாளராக மிட்செல் மார்ஷ் உள்ளார்.
- அவர் இந்த முறை ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என்பது தெரியவில்லை என்றாலும், நடராஜன் பெரிய தாக்கத்தை செலுத்துவதில்லை என்பதால் அவரை விடுவிக்கவே அதிக வாய்ப்புள்ளது. டெல்லி அவரை ரூ.10.75 கோடிக்கு எடுத்தது.