• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /விளையாட்டு
  • /SRH செல்லும் ஹர்திக் பாண்டியா? பதிலுக்கு 2 வீரர்கள்.. மும்பை இந்தியன்ஸ் டீல்!

SRH செல்லும் ஹர்திக் பாண்டியா? பதிலுக்கு 2 வீரர்கள்.. மும்பை இந்தியன்ஸ் டீல்!

மும்பை இந்தியன்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் ஹர்திக் பாண்டியாவை தருகிறோம்.. பதிலுக்கு இரண்டு வீரர்களை தாருங்கள் என பேச்சுவார்த்தை நடத்தில் உள்ளனர்.

Written ByR Balaji
Published: Aug 22, 2026, 08:37 AM IST|Updated: Aug 22, 2026, 08:43 AM IST
joinshare
SRH செல்லும் ஹர்திக் பாண்டியா? பதிலுக்கு 2 வீரர்கள்.. மும்பை இந்தியன்ஸ் டீல்!

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Madurantakam By-Election: மரகதம் குமரவேல் முன்னிலை.. தவெக எழுச்சிக்கு பாமக, விசிக வாக்குகள் காரணமா?

Madurantakam By-Election: மரகதம் குமரவேல் முன்னிலை.. தவெக எழுச்சிக்கு பாமக, விசிக வாக்குகள் காரணமா?

2

ISRO வேலைவாய்ப்பு: மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

3

ரேஷன் கார்டு இருக்கா? இந்த வசதி இருப்பதை மறக்காதீங்க.. ONORC மூலம் கிடைக்கும் முக்கிய நன்மை

4

அமெரிக்காவின் திடீர் தடை... இந்திய ஊழியர்களுக்கு இனி கிரீன் கார்டு கிடைக்காதா? Explained

5

NZ ஒருநாள் தொடர்: 2 இந்திய அணிகள்.. புவி, ஷமிக்கு வாய்ப்பு? முழு விவரம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

ஐபிஎல் 2027 சீசனுக்கான வீரர்கள் டீல் பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் ஹர்திக் பாண்டியாவை டிரேட் செய்வது தொடர்பாக பல்வேறு அணிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் ஹர்திக்கிற்கு மாற்றாக இஷான் கிஷன் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி உள்ளிட்ட வீரர்களை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஹர்திக் மீது அதிருப்தி?

ஐபிஎல் 2026 சீசனின் கடைசி லீக் போட்டிக்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் பயிற்சியாளர் கெய்ரன் பொல்லார்ட், கேப்டனாக ஹர்திக் பாண்டியாவின் செயல்பாடு எதிர்பார்த்த அளவுக்கு இல்லை எனக் கூறினார். இதில் அதிருப்தியடைந்த ஹர்திக் பாண்டியா, தன்னை டிரேட் செய்யுமாறு மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்திடம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவரை வேறு அணிக்கு அனுப்பிவிட்டு, அதற்கு பதிலாக தரமான வீரர்களை அணிக்குள் கொண்டுவர மும்பை இந்தியன்ஸ் முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிஎஸ்கேவுடன் நடந்த பேச்சுவார்த்தை

ஹர்திக்கிற்கு மாற்றாக வீரர்களை பெறும் முயற்சியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனும் மும்பை இந்தியன்ஸ் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. சிஎஸ்கே அணியில் உள்ள ஆயுஷ் மாத்ரே மற்றும் ஷிவம் துபே ஆகியோரில் சிலரை மும்பை இந்தியன்ஸ் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், ஷிவம் துபே மற்றும் கலீல் அகமது ஆகியோரை மட்டுமே தர முடியும் என சிஎஸ்கே தரப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதற்கு மும்பை இந்தியன்ஸ் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி சம்மதிக்காததால், சிஎஸ்கே உடனான பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இளம் இந்திய வீரர் மீது மும்பை குறி

ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக டாப் ஆர்டரில் விளையாடக்கூடிய இளம் இந்திய பேட்டரை அணிக்குள் கொண்டுவர வேண்டும் என்பதில் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுடனும் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், மும்பை கேட்கும் வீரர்களை விடுவிக்க இரு அணிகளும் விருப்பம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது.

சன்ரைசர்ஸ் அணியுடம் டீல்

இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்தின் கவனம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பக்கம் திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹர்திக் பாண்டியாவை டிரேட் செய்வதற்கு பதிலாக இஷான் கிஷன் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோரை வழங்குமாறு சன்ரைசர்ஸ் அணியிடம் மும்பை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, இஷான் கிஷனை பெறுவதற்காக ரூ.50 கோடி வரை வழங்கவும் மும்பை முன்வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

SRH முடிவு என்ன?

மும்பை இந்தியன்ஸ் முன்வைத்துள்ள இந்த பரிமாற்றம் குறித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நிர்வாகம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இஷான் கிஷனை விடுவிப்பதற்கு பதிலாக நிதிஷ் குமார் ரெட்டியுடன் மற்றொரு இளம் வீரரை இணைத்து ஹர்திக்கை பெறுவது குறித்தும் சன்ரைசர்ஸ் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கேகேஆர் வீரர்களை கொடுக்க மறுப்பு

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் கேப்டன் பொறுப்பை ஏற்கக்கூடிய வீரர் தேவைப்படுவதாக கருதி, அந்த அணியுடன் ஹர்திக் தொடர்பான பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெறும் என மும்பை இந்தியன்ஸ் எதிர்பார்த்ததாக கூறப்படுகிறது. ஆனால், ரிங்கு சிங் மற்றும் அங்கிரிஷ் ரகுவன்ஷி ஆகியோரை எந்த சூழலிலும் விடுவிக்க முடியாது என கேகேஆர்  திட்டவட்டமாக தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அந்த அணியுடனான பேச்சுவார்த்தையை மும்பை இந்தியன்ஸ் நிறுத்தியதாக கூறப்படுகிறது.

ஏலத்திற்கு செல்வாரா ஹர்திக் பாண்டியா?

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனான பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தால், ஹர்திக் பாண்டியாவை ஏலத்திற்கு அனுப்பும் முடிவை மும்பை இந்தியன்ஸ் எடுக்கலாம் என கூறப்படுகிறது. தற்போது 33 வயதாகும் ஹர்திக், கடந்த சில ஆண்டுகளைப் போல பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட முடியாமல் தடுமாறி வருவது அவரது டிரேட் மதிப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் ஹர்திக் ஏலத்திற்கு வந்தால், அவருக்காக ரூ.20 கோடிக்கு மேல் செலவு செய்ய அணிகள் தயங்கலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. எனினும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையிலான தற்போதைய பேச்சுவார்த்தை எந்த முடிவை எட்டும் என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Rasipalan