SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ரிஷப் பண்ட்டுக்கு கேப்டன் பதவி? “நோ சொல்லுங்க.. வேண்டவே வேண்டாம்!”.. எச்சரிக்கை!

Rishabh Pant DC Captaincy Offer: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இருந்த ரிஷப் பண்ட்டை டெல்லி கேப்டல்ஸ் அணி மீண்டும் வாங்கியது. இந்த நிலையில், அவருக்கு கேப்டன் பதவி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Written By R Balaji
Published: Aug 22, 2026, 11:26 AM IST | Updated: Aug 22, 2026, 11:29 AM IST
Join

ஐபிஎல்லில் மிகவும் முக்கியமான வீரர்களின் ஒருவர் ரிஷப் பண்ட். இவர் 2024 ஐபிஎல் தொடருக்கு பின்னர் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இருந்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு சென்றார். இதுவரை யாரும் செல்லாத விலைக்கு அதாவது ரூ 27 கோடிக்கு வாங்கப்பட்டார். லக்னோ அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். ஆனால் அவர் எதிர்பார்த்த அளவுக்கு செயல்படவில்லை. கேப்டன் பொறுப்பிலும் சரி, பேட்டிங்கிலும் சரி இரண்டிலுமே அவர் கடுமையாக சொதப்பினார். 2025 ஐபிஎல் முடிவில் அவர் 269 ரன்களை மட்டுமே எடுத்தார்.

லக்னோ அணியில் சொதப்பிய ரிஷப் பண்ட்

இதையடுத்து அவர் 2026 ஐபிஎல் தொடரில் கம்பேக் கொடுப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த தொடரிலும் அவர் சொதப்பினார். பேட்டிங்கில் கடந்த சீசனை விட சற்று கூடுதலாக மொத்தமாக 312 ரன்களை எடுத்தார். அதேபோல் அவரது தலைமையில் விளையாடிய லக்னோ அணியும் 10 போட்டிகளில் 4ல் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் புள்ளிப்பட்டியலில் 10 வது இடத்தை பிடித்தது. இது அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுக்கு திருப்தி அளிக்கவில்லை. இதனால் ரிஷப் பண்ட்டை ஒரு பிளேயராக மட்டும் விளையாட கூறினாராம்.

ரூ. 27 கோடி டூ ரூ. 15 கோடி - மீண்டும் டெல்லி அணி

ஆனால் ரிஷப் பண்ட் அணியை விட்டே வெளியேறும் முடிவில் இருந்திருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி பார்த்தும் பண்ட் ஒத்துக்கொள்ளவில்லை. லக்னோ அணியில் விளையாட தனக்கு விருப்பமில்லை என கூறிவிட்டாராம். இந்த சூழலில்தான், டெல்லி கேப்டல்ஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்தி ரிஷப் பண்ட் ரூ. 15 கோடிக்கு கொடுத்துவிட்டு குல்தீப் யாதவ்வை லக்னோ அணி டீல் பேசி முடித்தது. இது ரிஷப் பண்ட் ரசிகர்கள் மத்தியில் பண்ட் மீண்டும் டெல்லி அணிக்கு வந்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ரிஷப் பண்ட்டுக்கு கேப்டன் ஆஃபர்?

இந்த நிலையில், ரிஷப் பண்ட்டுக்கு டெல்லி கேபிடல்ஸ் அணி கேப்டன் பதவியை கொடுக்க முன் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்றாலும், அவரது ரசிகர்கள் இது குறித்து சமூக வலைத்தளங்களில் விவாதிக்க தொடங்கிவிட்டனர். சிலர் அவருக்கு ஆதரவாக பேசினாலும் சிலர் கேப்டன் பதவி அவருக்கு வேண்டாம், அவர் ஒரு வீரராக விளையாடி ரன்களை குவிக்க வேண்டும், அதில் அவர் கவனம் செலுத்த வேண்டும், தேவையில்லாத அழுத்தம் அவருக்கு வேண்டாம் என கூறி வருகின்றனர்.

ரிஷப் பண்ட் கேப்டன் பதவியை ஏற்க கூடாது

இந்த சூழலில், முன்னாள் இந்திய வீரர் வாசீம் ஜாபர், டெல்லி கேப்டல்ஸ் அணி கேப்டன் பதவியை கொடுத்தால் அதனை ரிஷப் பண்ட் நிராகரிக்க வேண்டும் என கூறி உள்ளார். இது குறித்து பேசிய அவர், DC அணி ரிஷப் பண்ட்டிற்கு கேப்டன் பதவியை கொடுத்தாலும் அதனை அவர் மறுக்க வேண்டும். கே.எல். ராகுல் எப்படி தனது கேப்டன் பதவியை துறந்து ஒரு வீரராக தனது பேட்டிங்கை ரசித்து ஆடுகிறாரோ, அதேபோல் ரிஷப் பண்ட்டும் ஆட வேண்டும்.

கேப்டனாக செயல்படும்போது அணியின் உரிமையாளர், ரசிகர்கள் என அனைத்து தரப்பில் இருந்து அழுத்தம் இருக்கும். ஏற்கனவே அவர் விக்கெட் கீப்பிங், பேட்டிங் என 2 ரோல் செய்து வருகிறார். அதனால் அவர் கேப்டன் பதவியை ஏற்கக்கூடாது என வாசீம் ஜாபர் கூறினார். 
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

ZEENEWS TRENDING STORIES