SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

IPL 2027: சிராஜுக்கு குறி வைத்த KKR.. ரிங்கு சிங்கை கொடுத்து வாங்க திட்டமா?

ஐபிஎல் 2027-ல் முகமது சிராஜை பெறுவதற்காக ரிங்கு சிங்கை டிரேட் செய்ய கேகேஆர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Reported By R Balaji Written By R Balaji
Published: Aug 12, 2026, 16:52 IST | Updated: Aug 12, 2026, 16:56 IST
Image Credit: Image Source: X
Join

ஐபிஎல் 2027 சீசனுக்கான 'டிரேட் விண்டோ' தொடங்குவதற்கு முன்பாகவே அணிகளுக்கு இடையே நட்சத்திர வீரர்களை மாற்றி கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் சூடுபிடிக்க தொடங்கி உள்ளன. ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ் போன்ற முன்னணி வீரர்களின் பெயர்கள் விவாதத்தில் உள்ள நிலையில், தற்போது முகமது சிராஜ் மற்றும் ரிங்கு சிங் இடையிலான டிரேடிங் ஒப்பந்தம் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் டைட்டன்ஸின் திட்டம் என்ன?

குஜராத் டைட்டன்ஸ் அணியின் பேட்டிங் வரிசையில் சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்ஷன் ஆகிய தொடக்க ஆட்டக்காரர்களையே அணி பெருமளவில் நம்பியுள்ளது. இவர்கள் இருவரும் ஆட்டமிழந்தால், அணியின் மிடில் ஆர்டர் மற்றும் பினிஷிங் வரிசை தடுமாறுகிறது. ராகுல் தேவத்தியாவால் தொடர்ச்சியாக பினிஷர் பாத்திரத்தை சிறப்பாக செய்ய முடியாததால், 5 வது இடத்திற்கு ஒரு அதிரடி பினிஷரை வாங்க குஜராத் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இதன் காரணமாகவே, முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜை விடுவித்து, அதற்குப் பதிலாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரிங்கு சிங்கை டிரேட் செய்ய குஜராத் அணி விருப்பம் தெரிவித்துள்ளது.

கேகேஆர் ஏன் சிராஜை விரும்புகிறது?

கேகேஆர் அணியில் இளம் பேட்டர் அங்கிரிஸ் ரகுவன்ஷியின் வருகை மிடில் ஆர்டரை பலப்படுத்தியுள்ளது. அதேநேரத்தில், இந்திய வேகப்பந்து வீச்சுக்கு வலு சேர்க்கும் வகையில் முகமது சிராஜை வாங்குவது அணிக்கு பயனுள்ளதாக இருக்கும் என கேகேஆர் கருதுகிறது. இதனால் ரிங்கு சிங்கை கொடுத்து சிராஜை பெற கேகேஆர் உடன்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

ஹர்திக் பாண்டியாவை தூக்க KKR வியூகம்

கேகேஆர் அணி மும்பை இந்தியன்ஸின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை வாங்குவதிலும் தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக தங்கள் அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா ஆகியோரை மும்பை அணிக்கு அனுப்ப KKR சம்மதித்துள்ளது.

ஹர்ஷித் ராணா வெளியேறுவதால் ஏற்படும் வேகப்பந்து வீச்சு இடைவெளியை, குஜராத் அணியில் இருந்து பெறப்படும் முகமது சிராஜ் மூலம் நிரப்ப KKR திட்டமிட்டுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் - KKR இடையிலான டீல்

முன்னதாக ஹர்திக் பாண்டியாவை டிரேட் செய்ய சிஎஸ்கே, ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுடன் மும்பை இந்தியன்ஸ் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், அந்த பேச்சுவார்த்தைகள் கைக்கூடாததால், தற்போது KKR உடன் ஒப்பந்தத்தை இறுதி செய்யும் கட்டத்திற்கு வந்துள்ளது.

KKR தரப்பில் இருந்து வருண் சக்ரவர்த்தி மற்றும் ஹர்ஷித் ராணாவை மாற்றிக் கொள்ள மும்பை நிர்வாகம் சம்மதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், ஹர்திக் பாண்டியாவிற்கான டிரேடிங் கட்டணமாக சுமார் ரூ. 50 கோடி வரை கோர மும்பை இந்தியன்ஸ் திட்டமிட்டுள்ளது.

டிரேட் விதி

ஐபிஎல் விதிகளின்படி, டிரேடிங் ஒப்பந்தம் முழுமையடைய வீரரின் சம்மதம் மற்றும் இரு அணிகளின் நிர்வாக கையெழுத்து கட்டாயமாகும். வீரர்களுக்கு பதிலாக வீரர்களை மாற்றுவது மட்டுமின்றி, ஒரு வீரருக்காக கூடுதல் தொகையை கொடுத்து வாங்கும் முறையும் இதில் அனுமதிக்கப்படும்.
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

ZEENEWS TRENDING STORIES