SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

மும்பை அணியின் தலைமை பயிற்சியாளர் பொல்லார்ட்... JSK அணிக்கு ஆப்பு...?

ஐபிஎல் 2027 சீசனை முன்னிட்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கான தலைமை பயிற்சியாளராக கைரன் பொல்லார்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

Written By Sudharsan G
Published: Oct 24, 2026, 10:41 AM IST | Updated: Oct 24, 2026, 10:46 AM IST
Join

IPL 2027, Kieron Pollard MI Head Coach: ஐபிஎல் 2027 சீசனை முன்னிட்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கான தலைமை பயிற்சியாளராக கைரன் பொல்லார்ட் நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை பயிற்சியாளராக இருந்த மஹேலா ஜெயவர்தனே பொறுப்பில் இருந்து கடந்த வாரம் விலகியிருந்தார்.

16 ஆண்டுகால தொடர் பயணம்

இதை தொடர்ந்து பேட்டிங் பயிற்சியாளராக இருந்த கைரன் பொல்லார்ட் தற்போது தலைமை பயிற்சியாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார் எனலாம். 2010ஆம் ஆண்டில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணியுடன் தொடர்ச்சியாக பயணித்து வருபவர் கைரன் பொல்லார்ட். ஐபிஎல் தொடரில் மட்டுமின்றி SA20, MLC, ILT20 உள்ளிட்ட தொடர்களிலும் MI அணியுடன்தான் இருந்தார்.

ஜேஎஸ்கே அணிக்கு ஆப்பு

2022ஆம் ஆண்டில் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்ற கைரன் பொல்லார்ட் அப்போது இருந்து மும்பை இந்தியன்ஸ் அணியில் பயிற்சியாளர் குழுவில் இடம்பெற்று வந்தார். இருப்பினும் மற்ற லீக் தொடர்களில் தொடர்ச்சியாக விளையாடி வந்தார்.

நடப்பு ஆண்டில் SA20 ஏலத்தில் பதிவு செய்திருந்த கைரன் பொல்லார்டை, MI அணியின் பரமவைரியான ஜோபெர்க் சூப்பர் கிங்ஸ் அணி எடுத்திருந்தது. தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து பொல்லார்ட் SA20 தொடரில் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது.

ஜேஎஸ்கே அணி அவரை ஏலத்தில் எடுத்தும் தொடர்ச்சியாக பொல்லார்ட் அமைதி காத்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

ZEENEWS TRENDING STORIES