• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /விளையாட்டு
  • /ஓய்வு பெற்றார் லியோனல் மெஸ்ஸி... உருக்கமாக எழுதிய கடிதம்... கண்ணீர் கடலில் ரசிகர்கள்

ஓய்வு பெற்றார் லியோனல் மெஸ்ஸி... உருக்கமாக எழுதிய கடிதம்... கண்ணீர் கடலில் ரசிகர்கள்

Lionel Messi Retirement : நட்சத்திர கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார். மேலும் ரசிகர்களுக்கு அவர் எழுதியிருக்கும் பிரியாவிடை மடல் பலருக்கும் கண்ணீரை வரவழைத்துள்ளது.

Written BySudharsan G
Published: Aug 31, 2026, 22:20 IST|Updated: Aug 31, 2026, 22:36 IST
joinshare
ஓய்வு பெற்றார் லியோனல் மெஸ்ஸி... உருக்கமாக எழுதிய கடிதம்... கண்ணீர் கடலில் ரசிகர்கள்
Image Credit: Lionel Messi Retirement Announcement | Image Source : X

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
தவெக எம்எல்ஏ வீட்டைச் சுற்றி வளைத்த சிறப்புப் படை: கள்ளக்குறிச்சியில் உச்சக்கட்ட பரபரப்பு!

தவெக எம்எல்ஏ வீட்டைச் சுற்றி வளைத்த சிறப்புப் படை: கள்ளக்குறிச்சியில் உச்சக்கட்ட பரபரப்பு!

2

Explainer: LPG விலை முதல் கிரெடிட் கார்ட், ஆயுள் சான்றிதழ் வரை.... டிசம்பர் 1 முதல் முக்கிய மாற்றங்கள்

3

பவுலர் ஸ்டம்பை குறிவைத்து வீசலாம்.. பேட்டர் இல்லாமலேயே விக்கெட்! என்ன இந்த Free Ball Rule?

4

நவம்பர் 26.. அரசியல் சாசனத்தை எரித்த பெரியார்.. காரணம் என்ன? நாட்டையே உலுக்கிய வரலாறு

5

TVK Education Awards: தவெக கல்வி விருது விழாவில் CM விஜய் உரையின் 10 முக்கிய அம்சங்கள்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Lionel Messi Retirement : அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதை ரசிகர்கள் எதிர்பார்த்ததுதான் என்றாலும் தற்போதைய திடீர் அறிவிப்பு கால்பந்து உலகையே அதிரவைத்திருக்கிறது.

39 வயதான மெஸ்ஸி தனது ஓய்வு அறிவிப்பை இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் அறிவித்துள்ளார். பிபா உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு பின் தனது ஓய்வு குறித்து அதிகம் யோசித்ததாகவும், அதன் பிறகே தேசிய அணியில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும் முடிவை எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முடிவு மிகவும் வலி நிறைந்தது என மெஸ்ஸி குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த அத்தியாயம் முடிவுக்கு வர வேண்டிய காலகட்டம் வந்துவிட்டதாகவும் மெஸ்ஸி உருக்கமாக தெரிவித்துள்ளார்.

மெஸ்ஸியின் உருக்கமான கடிதம்

அர்ஜென்டினா ரசிகர்களை நோக்கி மெஸ்ஸி எழுதிய அப்பதிவில், "இறுதிப்போட்டிக்கு பிறகு இத்தனை நாட்கள் கடந்த நிலையில் இதை பற்றி அதிகம் யோசித்த பின்னர், நான் தேசிய அணியில் இருந்து ஓய்வுபெறுகிறேன் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்த விரும்புகிறேன். இது என் ஆன்மாவை காயப்படுத்திய ஒரு முடிவாகும், இப்போதும் வலிக்கிறது.

ஆனால் இதுவே சரியான நேரம் என நினைக்கிறேன். சமீபத்திய ஆண்டுகளில் அனைத்திலும் வெற்றிபெற்ற காலகட்டத்தில் மட்டுமல்ல, எனது முழு பயணத்திலும் நான் எப்போதும் எனது முழு உழைப்பையும் கொடுத்தேன் என்பதை உங்களிடம் உறுதிப்பட கூறுகிறேன்.

 

 

 

 

View this post on Instagram

 

 

 

 

 

 

 

 

 

 

 

A post shared by Leo Messi (@leomessi)

அத்தியாயங்கள் முடிவுக்கு வருகின்றன...

இந்த ஜெர்ஸிக்காக நான் எப்போதும் போராடினேன், எனது முழு உழைப்பையும் செலுத்தினேன். கால்பந்தின் மூலம் உங்களுக்கு மகிழ்ச்சி வரும், அர்ஜென்டினாவைச் சேர்ந்தவர் என்பதில் உங்களைப் பெருமை கொள்ளச் செய்யவும் நான் உழைத்தேன்.

இன்னும் சிறிது காலமே உள்ளது. அத்தியாயங்கள் முடிவுக்கு வருகின்றன. இது எனக்கு மிகவும் வேதனையளிக்கும் ஒன்று. தேசிய அணியில் ஒரு அங்கமாக இருப்பதை நேசித்தேன், நேசிக்கிறேன், எப்போதும் நேசிப்பேன்.

என்னிடம் இருந்த அனைத்தையும் கொடுத்தேன். கொடுப்பதற்கு என்னிடம் இனி எதுவும் இல்லை. மேலும் தேசிய அணியில் விளையாட தகுதியான மிகவும் திறமையான இளம் வீரர்கள் பலர் உருவாகி வருகிறார்கள்.

கடவுளுக்கு நன்றி...

இந்த 20 ஆண்டுகளாக நீங்கள் அளித்த அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி. களத்தில் இருந்து உங்கள் குரலைக் கேட்பதை நான் இழக்கப் போகிறேன். இனி நான் உங்களின் ஒருவனாக இருப்பேன். நல்ல நேரங்களிலும், துயரமான நேரங்களிலும் வெளியில் இருந்து எப்போதும் ஆதரவளித்து உற்சாகப்படுத்துவேன். இன்னும் அதிகமாக...

இந்த அழகான, அதேவேளையில் மிகவும் கடினமான பயணத்தில் எப்போதும் என்னுடன் உறுதுணையாக இருந்த எனது குடும்பத்தினருக்கு நன்றி. இந்த பயணத்தைப் பகிர்ந்துகொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்த ஒவ்வொரு பயிற்சியாளருக்கும், சக வீரருக்கும், அதிகாரிகளுக்கும் நன்றி. என்னென்றும் நிலைத்திருக்கும் மறக்க முடியாத நினைவுகளையும் தருணங்களையும் நான் என்னுடன் எடுத்துச் செல்கிறேன்.

சக வீரர்களுடன் சேர்ந்து நாங்கள் கனவு கண்ட தருணங்களை உங்களுக்கு வழங்கிய மன அமைதியுடனும் பெருமையுடனும் நான் விடைபெறுகிறேன். இவை அனைத்தையும் உங்களுடன் அனுபவித்து ஒரு அற்புதமான அனுபவம் நான் உங்களை நேசிக்கிறேன்... என்னை அர்ஜென்டினா குடிமகனாக பிறக்க வைத்ததற்கு கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்" என குறிப்பிட்டுள்ளர்.

தந்தையின் மறைவுக்கு பின்...

மேலும் இறுதியில் இவை அனைத்தும் பிபா உலகக் கோப்பை இறுதிப்போட்டி தோல்விக்கு பின் இரண்டு நாள்கள் கழித்து ஜூலை 21ஆம் தேதி எழுதியவை. அதேநேரத்தில் எனது தந்தைக்கு நிகழ்ந்த சம்பவத்தை தொடர்ந்து இந்த முடிவில் நான் இன்னும் உறுதியானேன் என குறிப்பிட்டுள்ளார். மெஸ்ஸியின் தந்தை சமீபத்தில் காலமானார் என்பது நினைவுக்கூரத்தக்கது.

மெஸ்ஸி தலைமையில் அர்ஜென்டினா வென்றவை...

மெஸ்ஸியின் தலைமையில் அர்ஜென்டினா அணி பல சர்வதேச கோப்பைகளை வென்றிருக்கிறது. இவரது தலைமையில் 2021 கோபா அமெரிக்கா பட்டம், 2022 பிபா உலகக் கோப்பை என தொடர் வெற்றிகளை குவித்திருக்கிறது. இவரது உதவியால் 2024 கோபா அமெரிக்கா பட்டத்தையும் அர்ஜென்டினா வென்று சாதனை படைத்தது.

125 சர்வதேச கோல்கள்

மெஸ்ஸி இதுவரை 207 சர்வதேச கால்பந்து போட்டிகளில் விளையாடி 125 கோல்களையும், 68 அசிஸ்ட்களையும், 193 கோல் பங்களிப்புகளையும் கொடுத்து சாதனை புரிந்திருக்கிறார். அதேபோல் பிபா உலகக் கோப்பை தொடர்களில் மொத்தமாக 34 போட்டிகளில் விளையாடி 21 கோல்களை அடித்துள்ளார். கோபா அமெரிக்கா தொடரில் 14, உலகக் கோப்பை குவாலிபயர்ஸில் 35, சர்வதேச அளவிலான நட்புறவு போட்டிகளில் 53 கோல்களை அடித்துள்ளார்.

2005ஆம் ஆண்டு முதல் கடந்த 21 ஆண்டுகளாக சர்வதேச போட்டிகளில் மெஸ்ஸி விளையாடி வருகிறார். 2005ஆம் ஆண்டில் 20 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை, 2008இல் ஒலிம்பிக் தங்கப்பதக்கம் உள்ளிட்டவற்றையும் வென்றிருக்கிறார்.

கிளப் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார்

மெஸ்ஸி தற்சமயம் தனது சர்வதேச போட்டிகளில் இருந்துதான் ஓய்வுபெற்றுள்ளர். கிளப் போட்டிகளில் ரசிகர்கள் அவரது விளையாட்டை தொடர்ந்து பார்க்கலாம். 2003-2004 சீசனில் பார்சிலோனா C அணியிலும், 2004-2005 சீசனில் பார்சிலோனா B அணியிலும் விளையாடியிருந்தார். இது ஸ்பெயின் நாட்டின் கிளப் அணியாகும்.

விளையாடிய கிளப் அணிகள்

2004ஆம் ஆண்டில் இருந்து 2021ஆம் ஆண்டுவரை FC பார்சிலோனா அணிக்காக 520 போட்டிகளில் பங்கேற்று 474 கோல்களை அடித்துள்ளார். அவரது கால்பந்து வாழ்வில் மறக்க முடியாத அத்தியாயங்கள் இவை.

அதன்பின் மிகுந்த வலியுடன் பார்சிலோனாவில் இருந்து பிரிந்து 2021இல் பிரான்ஸ் நாட்டின் PSG அணியில் இணைந்தார். அங்கு 2023ஆம் ஆண்டுவரை விளையாடி 58 போட்டிகளில் 22 கோல்களை வென்றார். 2023ஆம் ஆண்டில் இருந்து அமெரிக்காவின் Inter Miami அணிக்காக விளையாடி வருகிறார். தற்போதும் அந்த அணியில் தொடர்கிறார்.

கிளப் போட்டிகளில் வென்ற கோப்பைகள்

கிளப் போட்டிகளில் மட்டும் அனைத்து அணிகளுக்கும் சேர்த்து மெஸ்ஸி 40 முறை கிளப் சாம்பியன்ஷிப்களை வென்றிருக்கிறார். அதில் பார்சிலோனா அணிக்காக மட்டும் 35 கோப்பைகளை அடித்துள்ளார்.

La Liga 10 முறை, சாம்பியன்ஸ் லீக் 4 முறை, Copa del Rey 7 முறை, Supercopa de Espana 8 முறை, UEFA Super Cup 3 முறை, பிபா கிளப் உலகக் கோப்பை 3 முறை என பார்சிலோனா அணிக்கு கோப்பைகளை குவித்துள்ளார். அதேபோல், மற்ற 2 அணிகளுக்கும் கோப்பையை வென்று கொடுத்திருக்கிறார்.

Ballon d'Or நாயகன்

அதேபோல் ஒவ்வொரு ஆண்டும் நிறைவடைந்த சீசனில் மிகச்சிறப்பாக விளையாடிய கால்பந்து வீரர்களுக்கு வழங்கப்படும் விருதின் பெயர்தான் Ballon d'Or. அதை 8 முறை வென்று, இந்த விருதை அதிக முறை வென்றவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 2வது இடத்தில் இருக்கும் ரொனால்டோ கூட 5 முறை மட்டுமே Ballon d'Or வென்றுள்ளார்.

Add Zee News as a Preferred Source
TAGS:
Football