SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

CSK தலைமை பயிற்சியாளராக தோனி? ஆனா ஒரு கண்டிஷன்! முழு விவரம்

மகேந்திர சிங் தோனி சிஎஸ்கே-வின் தலைமை பயிற்சியாளர் பதவியை ஏற்க தயார் என்று தெரிவித்துள்ளார். ஆனால் ஒரு கண்டிஷனை வைத்துள்ளார். அதற்கு ஒப்புக்கொண்டால் நானே பயிற்சியாளராக வருகிறேன் என கூறி உள்ளாராம்.

Written By R Balaji
Published: Aug 28, 2026, 10:39 IST | Updated: Aug 28, 2026, 10:43 IST
Join

ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகப்பெரிய அணியாக திகழ்ந்து வருகிறது. 18 ஆண்டுகளில் 5 முறை கோப்பையை வென்று அசத்தி உள்ளது. இந்த அணியை நட்சத்திர வீரரான தோனி வழிநடத்தி வந்தார். பயிற்சியாளராக ஸ்டீபன் பிளேமிங் இருந்து வந்தார். இந்த சூழலில், கடைசியாக 2023 ஆம் ஆண்டில் தோனியின் தலைமையில் சிஎஸ்கே கோப்பையை வென்றது. அதன்பின்னர் மூன்று ஆண்டுகளாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் கடுமையாக சொதப்பி வருகிறது.

இதனால் 2027 ஐபிஎல்லில் ஒரு நல்ல கம்பேக்கை கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் தற்போது அணியை மீண்டும் கட்டமைக்க தொடங்கி இருக்கின்றனர். அதன் முதல் படியாக தலைமை பயிற்சியாளராக இருந்த ஸ்டீபன் பிளேமிங்கை நீக்கி உள்ளனர். தற்போது ஒரு புது பயிற்சியாளரை தேடி வருகின்றனர். இதற்காக ராகுல் டிராவிட் உள்ளிட்ட பலரிடம் பேசி வந்தனர்.

ராகுல் டிராவிட், ”நான் பயிற்சியாளராக வருகிறேன். ஆனால் தோனியின் தலையீடு இருக்க கூடாது. எந்த முடிவாக இருந்தாலும் நான்தான் எடுப்பேன்” என கூறி உள்ளார். இவரின் இந்த கண்டிஷ்ன் சிஎஸ்கே-விற்கு ஒத்துவராத நிலையில், அவரிடம் அப்[படியே அந்த பேச்சை நிறுத்தி உள்ளனர். இந்த நிலையில், தோனியே தலைமை பயிற்சியாளராக வர ஒத்துக்கொண்டதாகவும் ஆனால் அவருக்கு ஒரு நிபந்தனை வித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது, தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்டால், ஆண்டின் ஆறு மாதங்களுக்கும் மேலாக அணியுடன் தொடர்ந்து பணியாற்ற வேண்டிய சூழல் உருவாகும் என தோனி தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது. இதனால், வழக்கமான சம்பளத்தை விட அதிகமாக வேண்டும் என கேட்டுள்ளாராம். குறிப்பாக அணியின் ஷேரில் குறிப்பிட்ட சதவீதத்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சிஎஸ்கே அணியில் 25 சதவீத பங்குகளை தோனி கேட்டதாகவும், இந்த கோரிக்கை நிர்வாகத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக தனது கோரிக்கையை 10 சதவீதமாக குறைத்துக்கொள்ள தோனி தயாராக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால், சிஎஸ்கே நிர்வாகம் அதிகபட்சமாக 5.5 சதவீத பங்குகளை மட்டுமே வழங்க முடியும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சலுகையை ஏற்க தோனி மறுத்துவிட்டதாகவும், குறைந்தபட்சம் 10 சதவீத பங்கு வழங்கப்பட்டால் மட்டுமே பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுக்கொள்வது குறித்து பரிசீலிப்பேன் என அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஒருவேளை தோனியுடனான பேச்சுவார்த்தை தோல்வி அடையும் பட்சத்தில், ஐபிஎல் 2027 சீசனுக்கு மைக்கேல் ஹசியை பொறுப்பு தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கும் மாற்றுத் திட்டத்தையும் சிஎஸ்கே நிர்வாகம் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

ZEENEWS TRENDING STORIES