SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

CSK கெஞ்சியும் விளையாட மறுத்த தோனி.. என்ன பிரச்சனை? வெளியான பகீர் தகவல்கள்!

கடந்த ஐபிஎல் சீசனில் தோனியிடம் சிஎஸ்கே நிர்வாகம் கெஞ்சி கேட்டும் அவர் விளையாட ஒத்துக்கொள்ளவில்லையாம், மறுத்துவிட்டாராம். இதற்கான காரணம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அது குறித்து இங்கு பார்க்கலாம்.

Written By R Balaji
Published: Aug 21, 2026, 11:47 AM IST | Updated: Aug 21, 2026, 11:53 AM IST
Join

மகேந்திர சிங் தோனி கடந்த இரண்டு மூன்று சீசன்களாகவே ஓய்வை அறிவிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. குறிப்பாக அவரது உடல்நிலை, வயது காரணமாக 2026 ஐபிஎல்லுடன் கண்டிப்பாக ஓய்வு பெறுவார் என பலராலும் பேசப்பட்டது. அதனால், ரசிகர்களுக்காக அந்த சீசனின் அனைத்து போட்டிகளிலும் இல்லாவிட்டாலும் சென்னையில் நடக்கும் போட்டிகளிலாவது விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடர் தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக அவரது காலில் காயம் ஏற்பட்டதன் காரணமாக தொடரின் முதல் இரண்டு வார போட்டிகளில் இருந்து விலகுகிறார் என சிஎஸ்கே அணி நிர்வாகத்தால் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது.

சிஎஸ்கே நிர்வாகம் கெஞ்சியும் விளையாடாத தோனி

ஆனால் தோனி இரண்டு வாரங்களுக்கு பின்னர் போட்டிகளில் பங்கேற்கவில்லை. அவர் இன்னும் காயத்தில் இருந்து முழுமையாக குனமடையவில்லை, அவர் பேட்டிங் செய்ய தயாராக இருந்தாலும் அவரால் ஓடி ரன்கள் எடுக்க முடியவில்லை என கூறப்பட்டது. இந்த நிலையில், சிஎஸ்கே நிர்வாகம் தோனியிடம் கெஞ்சியும் தோனி விளையாட ஒப்புக்கொள்ளவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக விளையாட சென்றபோது, தோனி முழு உடல் தகுதியுடன் இருந்தாராம். அவர் அணியின் பிளேயிங் 11 திட்டத்தின் இருந்தாராம். ஆனால் கடைசி நேரத்தில் தோனி விளையாட மறுத்துவிட்டாராம். என்னால் ஆட முடியாது என தோனி ஒதுங்கி கொண்டாராம்.

தோனி சொன்ன காரணம்

இது தொடர்பாக சிஎஸ்கே நிர்வாகம் ”ஏன் விளையாட மாட்டேன் என சொல்கிறீர்கள்” என கேட்டபோது, ”அணியின் வெற்றி கூட்டணியானது அப்படியே தொடரட்டும். எனக்காக அணியில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டாம்” என கூறிவிட்டாராம். இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்திற்கும் எம்.எஸ். தோனிக்கும் இடையே ஏற்பட்டுள்ள விரிசலுக்கான பின்னணி காரணங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

தோனிக்கு தெரியாமல் எடுக்கப்பட்ட முடிவுகள்

ஐபிஎல் 2026 டிரேடிங் விண்டோவின் போது, ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரண் ஆகியோரை விடுவித்துவிட்டு சஞ்சு சாம்சனை அணிக்குள் கொண்டுவர நிர்வாகம் திட்டமிட்டது. இந்த விவகாரம் தோனியின் கவனத்திற்கு சென்றால் ஜடேஜாவை விடுவிக்க ஒப்புக்கொள்ள மாட்டார் என்பதால், அவரிடம் எந்தவித ஆலோசனையும் நடத்தாமலேயே அணி நிர்வாகம் இந்த அதிரடி மாற்றங்களை செய்ததாக கூறப்படுகிறது.

போட்டிகளை புறக்கணித்த தோனி

அணியின் முக்கிய முடிவுகளில் தன்னை உதாசீனப்படுத்தியதால் கடும் அதிருப்தியடைந்த தோனி, கடந்த ஐபிஎல் தொடரில் ஒரு ஆட்டத்தில் கூட களமிறங்காமல் முழுமையாக புறக்கணித்தார். அத்துடன், தற்போது அணியின் ஆலோசகர் பொறுப்பை ஏற்குமாறு நிர்வாகம் தொடர்ந்து அழைப்பு விடுத்தும், அவர் அதில் இணைய விருப்பமில்லாமல் தொடர்ந்து விலகியே இருக்கிறார்.

தோனியுடன் உள்ள மனக்கசப்பை சரி செய்து, அவரை எப்படியாவது ஆலோசகர் பொறுப்பில் அமர வைத்துவிட வேண்டும் என்பதில் சிஎஸ்கே நிர்வாகம் உறுதியாக உள்ளது. இந்த சமரசப் பேச்சுவார்த்தைகளில் கவனம் செலுத்துவதால் தான், அணியின் புதிய தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்யும் பணி தற்போது தாமதமாகி வருகிறது.

தோனியை சமாதானம் செய்ய முயற்சி

தோனியை சமாதானப்படுத்தும் விதமாக, தற்போதைய டிரேடிங் விவகாரங்கள் அனைத்திலும் அவரது கருத்துக்கே நிர்வாகம் முழு முன்னுரிமை அளித்து வருகிறது:

ஹர்திக் பாண்டியா விவகாரம்

தோனியின் தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் ஹர்திக் பாண்டியாவை டிரேடிங் செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், மும்பை அணி இளம் வீரர் ஆயுஷ் மத்ரேவை கேட்டதால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.

வாஷிங்டன் சுந்தர் முயற்சி

இதனைத் தொடர்ந்து, தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரை அணிக்குள் கொண்டுவர குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் சிஎஸ்கே தற்போது பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளது.
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

ZEENEWS TRENDING STORIES