• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /விளையாட்டு
  • /PBKS, DC, KKR தக்கவைக்கும் வீரர்கள்... ஐபிஎல் 2027 பிளான் இதுதான்

PBKS, DC, KKR தக்கவைக்கும் வீரர்கள்... ஐபிஎல் 2027 பிளான் இதுதான்

IPL 2027 Mini Auction : ஐபிஎல் 2027 மினி ஏலத்திற்கு முன் பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் தக்கவைக்கும் வீரர்கள் யார் யார் என்பதை இங்கு விரிவாக காணலாம்.

Written BySudharsan G
Published: Aug 09, 2026, 01:03 AM IST|Updated: Aug 09, 2026, 01:56 AM IST
joinshare
PBKS, DC, KKR தக்கவைக்கும் வீரர்கள்... ஐபிஎல் 2027 பிளான் இதுதான்

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
57 மெட்ரோக்கள் மூடல்; அனைத்து ரயில்களும் ரத்து; பிரதமரை சாடும் CJP - டெல்லி நிலவரம் என்ன?

57 மெட்ரோக்கள் மூடல்; அனைத்து ரயில்களும் ரத்து; பிரதமரை சாடும் CJP - டெல்லி நிலவரம் என்ன?

2

நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு... யார் இந்த தென்னாப்பிரிக்கத் தமிழ்ப் பெண்?

3

பிரதமர் மோடி சென்னை வருகை: SPG குழுவின் கட்டுப்பாட்டில் சென்ற விமான நிலையம்

4

புறம்போக்கு நில வீடுகளுக்கு மின் இணைப்பு - தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பு

5

அக்., 15 வரை தொடரும் மழை: இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

IPL 2027 Mini Auction : ஐபிஎல் 2027 மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெற இருக்கிறது. மினி ஏலம் என்பதே கடந்த வருடம் சொதப்பிய சில வீரர்களையும், காம்பினேஷனுக்கு செட்டாகாத வீரர்களை விடுவித்து ஏலத்திற்கு வரும் புதிய வீரர்களை எடுப்பதாகும்.

பெரும்பாலும் கடந்த முறை சிறப்பாக விளையாடி பிளே ஆப் சென்ற அணிகள் அதிக வீரர்களை விடுவிக்க மாட்டார்கள். அதேபோல், கடைசி இடத்தை பிடித்த அணிகள் பல அதிரடி முடிவுகளை எடுக்கும்.

இந்த 3 அணிகள்

ஆனால் புள்ளிப்பட்டியலில் ஜஸ்ட் மிஸ்ஸில் பிளே ஆப் வாய்ப்பு தவறவிட்ட அணிகள்தான் பல முக்கிய மற்றும் கடினமான முடிவுகளை எடுக்கும். அந்த வகையில், புள்ளிப்பட்டியலில் 5வது, 6வது, 7வது இடத்தை பிடித்த முறையே பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் ஐபிஎல் மினி ஏலத்தில் யார் யாரை தக்கவைக்கும் என்பதை இங்கு காணலாம்.

பஞ்சாப் கிங்ஸ்

  • கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் தொடர்வார். கடந்த இரண்டு ஆண்டுகளாக தவறவிட்ட ஐபிஎல் கோப்பையை இந்த முறை வெல்ல திட்டமிடுவார்.
  • ஓபனிங்கில் பிரப்சிம்ரன் சிங், பிரியான்ஷ் ஆர்யா ஆகியோர் நீடிப்பார்கள்.
  • நேஹல் வதேரா, ஷஷாங்க் சிங், முஷீர் கான், சூர்யான்ஷ் ஷெக்டே, விஷ்ணு வினோத் ஆகிய இந்திய பேட்டர்கள் தக்கவைக்கப்படுவார்கள்.
  • யுஸ்வேந்திர சஹால், அர்ஷ்தீப் சிங், ஹர்பிரீத் பிரர், வைஷாக் விஜயகுமார், யாஷ் தாக்கூர், பிரவீன் தூபே உள்ளிட்ட இந்திய பந்துவீச்சாளர்களும் தக்கவைக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
  • மார்கோ யான்சன், அஸ்மத்துலா ஓமர்சாய், சேவியர் பார்ட்லட், மிட்செல் ஓவன், கூப்பர் கானொலி, பென் டவார்ஷூயிஸ் உள்ளிட்டோர் தக்கவைக்கப்படுவார்கள்.

டெல்லி கேப்பிடல்ஸ்

  • அக்சர் பட்டேல் கேப்டனாக தொடர்வாரா என்பது உறுதியாகவில்லை. ஆனால், அக்சர் பட்டேல் ஒரு ஆல்-ரவுண்டராக தக்கவைக்கப்பட வாய்ப்புள்ளது.
  • ரிஷப் பண்ட் மீண்டும் அணிக்குள் வந்துள்ளார். குல்தீப் யாதவ் லக்னோ அணிக்கு டிரேட் செய்யப்பட்டார்.
  • கேஎல் ராகுல், பிருத்வி ஷா, நிதிஷ் ராணா, சாஹில் பரக், கருண் நாயர் ஆகிய டாப் ஆர்டர் இந்திய வீரர்கள் அணியில் தொடர்வார்கள்.
  • அஷுடோஷ் சர்மா, மாதவ் திவாரியா, அஜய் மண்டல், விப்ராஜ் நிகம், ஆகிப் நபி, திரிப்புருனா விஜய், முகேஷ் குமார் ஆகியோர் தக்கவைக்கப்படலாம்.
  • வெளிநாட்டு வீரர்களை பொருத்தவரை மிட்செல் ஸ்டார்க், லுங்கி இங்கிடி, கைல் ஜேமீசன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், பதும் நிசங்கா, டேவிட் மில்லர் ஆகியோர் தக்கவைக்கப்படலாம்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

  • அஜிங்கயா ரஹானே ஓய்வுபெற்றுவிட்டார். துணை கேப்டனாக இருந்த ரிங்கு சிங் தலைமை பொறுப்பை ஏற்கலாம்.
  • அங்கிரிஷ் ரகுவன்ஷி, ரமன்தீப் சிங், சர்தக் ரஞ்சன், அனுகுல் ராய், தக்ஷ் கம்ரா, தேஜஸ்வி சிங், லுவ்னித் சிசோடியா உள்ளிட்ட இந்திய பேட்டர்கள் தக்கவைக்கப்படுவார்கள்.
  • ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, சௌரவ் தூபே, கார்த்திக் தியாகி, வைபவ் அரோரா ஆகிய இந்திய பந்துவீச்சாளர்கள் தக்கவைக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
  • பின் ஆலன், டிம் சைஃபர்ட், சுனில் நரைன், ரோவ்மான் பாவெல், ரச்சின் ரவீந்திரா, பிளஸ்ஸிங் முசர்பானி, பதிரானா ஆகிய வெளிநாட்டு வீரர்கள் தக்கவைக்கப்படலாம்.
  • கேம்ரூன் கிரீன் டிரேட் பேச்சுவார்த்தையில் உள்ளார்.
Add Zee News as a Preferred Source
TAGS:
IPL