SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

35வது சதம் & 12,000 ரன்கள்: சச்சின், கோலியை தொடர்ந்து 3வது இந்தியராக ரோகித் அபார சாதனை!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 12,000 ரன்களை கடந்த ரோகித் சர்மா, சச்சின் மற்றும் கோலியைத் தொடர்ந்து இந்த மைல்கல்லை எட்டிய 3வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

Written By R Balaji
Published: Sep 30, 2026, 21:24 IST | Updated: Sep 30, 2026, 21:29 IST
Join

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்ட்டில் 12 ஆயிரம் ரன்களை கடந்த 3வது இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 73 ரன்களை எட்டியபோது இந்த மைல்கல்லை அவர் கடந்தார்.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிக்குக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 405 ரன்கள் குவித்தது. இதையடுத்து 406 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர்.

தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக விளையாடிய நிலையில், ரோகித் சர்மா தனது வழக்கமான பாணியில் பவுண்டரி, சிகசர்களை விளாசினார். வெறும் 32 பந்துகளில் அரைசதத்தை எட்டிய அவர், தொடர்ந்து அதிரடியை வெளிப்படுத்தி 72 பந்துகளில் சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 35வது சதத்தையும் ரோகித் சர்மா நிறைவு செய்தார்.

இந்த இன்னிங்ஸில் மேலும் இரண்டு முக்கிய சாதனைகளையும் அவர் படைத்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் 200 சிக்சர்களை கடந்ததுடன், 12 ஆயிரம் ரன்களையும் எட்டினார். இதன் மூலம் சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலிக்கு அடுத்ததாக இந்த சாதனையை படைத்த 3வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

விராட் கோலி 242 இன்னிங்ஸ்களில் 12 ஆயிரம் ரன்களை க்டந்த நிலையில், ரோகித் சர்மா 282 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை எட்டியுள்ளார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் 12 ஆயிரம் ரன்களை வேகமாக கடந்த வீரர்களில் 2வது இடத்தை பிடித்துள்ளார். ரோகித் சர்மாவின் இந்த அதிரடி ஆட்டம் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

ZEENEWS TRENDING STORIES