SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ரோகித்தை ஓரங்கட்ட திட்டமா? தேர்வுக்குழுவுக்கே செக் வைத்த 'ஹிட்மேன்'.. அதிருப்தியில் பிசிசிஐ!

2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் ரோகித் சர்மா விளையாடுவது குறித்த தேர்வுக்குழுவில் சர்ச்சை நிலவி வருகிறது. இந்த சூழலில், தேர்வுக்குழு முடிவிற்கே பந்தை திருப்பி அனுப்பி உள்ளார் ரோகித் சர்மா.

Reported By R Balaji Written By R Balaji
Published: Aug 09, 2026, 00:40 IST | Updated: Aug 09, 2026, 00:44 IST
Image Credit: Image Source: X
Join

தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள 2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு இன்னும் ஓராண்டே எஞ்சியுள்ள நிலையில், இந்திய அணியை கட்டமைக்கும் பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன. டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகிய முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா, தனது முழு கவனத்தையும் 2027 ஒருநாள் உலகக் கோப்பை மீதே வைத்துள்ளார்.

ரோஹித்துக்கு நோ... கம்பீர் - அகர்கர் போட்ட ஸ்கெட்ச்

ஆனால், இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பளிக்க வேண்டும் என்ற நோக்கில் பயிற்சியாளர் கெளதம் கம்பீரும், தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கரும் அவரை அணியிலிருந்து ஓரங்கட்ட திட்டமிட்டிருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்களில் செய்திகள் உலா வருகின்றன.

”நீக்கினால் நீங்களே நீக்குங்கள்” - ரோகித் அதிரடி பதில்

இந்த சூழலில், ரோகித்தை நேரடியாக தேர்வுக்குழு தொடர்புகொண்டதாகவும், 2027 உலகக் கோப்பைக்கான திட்டத்தில் அவர் இல்லை என்றும், அவராகவே ஓய்வை அறிவிப்பது சிறப்பாக இருக்கும் என்றும் கூறியதாக தெரிகிறது. இதற்குப் பதிலளித்த ரோகித் சர்மா, "என்னால் தானாக ஓய்வு பெற முடியாது,விருப்பமில்லை என்றால் என்னை நீங்களே நீக்கிக்கொள்ளுங்கள்" என துணிச்சலாக கூறிவிட்டதாக கூறப்படுகிறது.

அகர்கருக்கு ஆப்பு? பிசிசிஐ-யின் அடுத்தகட்ட நகர்வு

எனினும், பிசிசிஐ நிர்வாகம் மூத்த வீரர்களை கையாளும் கம்பீர் மற்றும் அகர்கரின் பாணியில் அதிருப்தியில் உள்ளது. வரும் செப்டம்பருடன் முடியவுள்ள அகர்கரின் பதவிக்காலத்தை நீட்டிக்காமல், புதிய தேர்வுக்குழுத் தலைவராக விவிஎஸ் லக்ஷ்மனை நியமிக்க பிசிசிஐ ஆலோசித்து வருகிறதாம். மேலும், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பின்னடைவு ஏற்பட்டால், கம்பீரின் பதவிக்கும் ஆபத்து வரலாம் எனக் கூறப்படுகிறது.

சதம் அடித்து பதிலடி கொடுத்த 'ஹிட்மேன்’

வயதைக் காரணம் காட்டி விமர்சிப்பவர்களுக்கு தனது பேட்டிங் மூலம் ரோகித் பதில் அளித்து வருகிறார். சமீபத்திய இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் கடைசிப் போட்டியில் 138 ரன்கள் விளாசி தன் ஃபார்மை நிருபித்தார். வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான தென்னாப்பிரிக்க ஆடுகளங்களில், அனுபவமில்லாத இளம் பேட்டிங் வரிசையை மட்டும் நம்பியிருப்பது இந்திய அணிக்கு பெரிய சவாலாக அமையும்.

2027 உலகக் கோப்பையில் ரோஹித் ஆடுவாரா?

ரோகித் வெறும் தொடக்க வீரர் மட்டுமல்ல, ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடிய திறமை அவரிடம் உள்ளது. பிசிசிஐ-யின் தலையீடும், தேர்வுக்குழுவில் ஏற்படவுள்ள மாற்றங்களும் சாதகமாக அமையும் பட்சத்தில், 2027 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா இந்திய அணியை வழிநடத்துவதையோ அல்லது முதன்மை ஆட்டக்காரராக களமிறங்குவதையோ நாம் நிச்சயமாக பார்க்கலாம்.
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

ZEENEWS TRENDING STORIES