“கேப்டன் பதவி தருகிறோம்”.. சஞ்சு சாம்சனிடம் டீல் பேசிய ஐபிஎல் அணி! அவரின் முடிவு என்ன?
சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணியிடம் கேப்டன் பதவி கேட்டு வரும் நிலையில், அவரிடம் வேறு ஒரு அணி “கேப்டன் பதவி தருகிறோம், எங்கள் அணிக்கு வந்து விடுங்கள்” என டீல் பேசி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2027 ஐபிஎல் தொடருக்கான டிரேட் டீலிங் இப்போதில் இருந்தே தொடங்கிவிட்டது. ஹர்திக் பாண்டியா, சாய் கிஷோர், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட வீரர்களின் பெயர்கள் டிரேடிங்கில் அடிபடுவது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹர்திக் பாண்டியாவுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தீவிரமாக முயற்சித்து வருகிறது. இன்னும் சரியான ஒரு டீல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கிடைக்காததால், இன்னும் ஹர்திக் பாண்டியா டீல் முடிவுக்கு வராமல் உள்ளது.
சஞ்சு சாம்சனிடம் டீல் பேசிய மும்பை அணி
இந்த நிலையில், சஞ்சு சாம்சனிடம் கேப்டன் பதவி தருகிறோம், எங்கள் அணிக்கு வந்து விடுங்கள் என ஒரு அணி டீல் பேசி உள்ளது. அதாவது, மும்பை இந்தியன்ஸ் அணியால் இதுவரை தரமான வீரர்களை வாங்க முடியாத நிலையில், ஐபிஎல் அணியிடம் தொடர்பு கொண்டு பேசுவதை விட்டுவிட்டு, தற்போது நேரடியாக வீரர்களை தொடர்பு கொண்டு பேச தொடங்கி உள்ளது.
அந்த வகையில்தான், சஞ்சு சாம்சனை மும்பை இந்தியன்ஸ் அணி நேரடியாக தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது. அவரிடம், உங்களுக்கு கேப்டன் பதவி தருகிறோம் என்றும் உங்களை ரூ. 20 கோடிக்கு வாங்கி கொள்கிறோம் என்றும் மும்பை நிர்வாகம் தெரிவித்துள்ளதாம்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சஞ்சு சாம்சன் ஏன் தேவை?
மும்பை இந்தியன்ஸ் அணியின் நீண்ட கால கேப்டனாக இருந்து 5 கோப்பைகளை பெற்றுக்கொடுத்த ரோகித் சர்மா தற்போது ஓய்வு பெறும் தருவாயில் உள்ளார். இதனை கணக்கில் கொண்டே 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் முதல் தலைமை பொறுப்பு ஹர்திக் பாண்டியாவிடம் கொடுக்கப்பட்டது. ஆனால் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்திற்கு திருப்தி அளிப்பதாக இருக்கவில்லை. அதேசமயம் ஹர்திக் பாண்டியாவுக்கு அடிக்கடி காயமும் ஏற்படுகிறது. இதன் காரணமாக அவரை கழற்டிவிட்டு, வேறு ஒரு தரமான வீரரை எதிர்பார்க்கிறது.
அதேசமயம் டாப் ஆர்டரில் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனும் தேவைப்படுவதால், சஞ்சு சாம்சனை தொடர்பு கொண்டு ஆஃபர் கொடுத்துள்ளனர். ஆனால் இந்த டீலுக்கு சஞ்சு சாம்சனின் பதில் என்ன என்பது தெரியவில்லை.
சிஎஸ்கே அணியிடம் கேப்டன் பதவி கேட்கும் சஞ்சு சாம்சன்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசியாக 2023 ஆம் ஆண்டு தோனி தலைமையில் ஐபிஎல் கோப்பையை வென்றது. இதையடுத்து கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் பொறுப்பேற்ற நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக பிளே ஆஃப் சுற்றுக்கு கூட வர முடியாமல் சிஎஸ்கே அணி தடுமாறி வருகிறது. இந்த சூழலில்தான், கேப்டன் பதவியை தன்னிடம் கொடுக்குமாறு சஞ்சு சாம்சன் கேட்டு வருகிறார். ஆனால் சிஎஸ்கே அணி நிர்வாகம் இதற்கு இன்னும் ஒத்துக்கொள்ளாமல் இது குறித்த முடிவை தள்ளிப்போட்டு வருகிறது.
அதேசமயம் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன்சி குறித்து விமர்சனங்கள் உள்ளதால், சஞ்சு சாம்சனுக்கு கேப்டன் பதவியை கொடுக்கலாம் என ரசிகர்களும் அவருக்கு சப்போர்ட் செய்து வருகின்றனர்.
மேலும், தெரிந்த வரை சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில்தான் இருப்பார். இருப்பினும் சிஎஸ்கே அணி நிர்வாகத்தின் முடிவை பொறுத்து அவரது எண்ணம் மாறவும் வாய்ப்புள்ளது. அப்போது அவர் மும்பை இந்தியன்ஸ் டீல் குறித்து யோசிக்கலாம். எனவே முடிவு சிஎஸ்கே அணியின் கையிலேயே உள்ளது.