சிஎஸ்கே-விடம் 2 கோரிக்கைகளை முன் வைத்த சஞ்சு சாம்சன்.. அடம் பிடிக்கும் ருதுராஜ்!
CSK Latest News: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து சஞ்சு சாம்சன் வெளியேறுகிறார் என்ற தகவல் வெளியான நிலையில், தற்போது அவர் சிஎஸ்கே-விற்கு இரண்டு கோரிக்கைகளை முன் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அது குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.
2027 ஐபிஎல் தொடருக்கான டிரேட் பேச்சுவார்த்தை தற்போதில் இருந்தே சூடுபிடித்துள்ளது. ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான வீரர்களின் பெயர் அடிபடுவதால் ஐபிஎல் டிரேட் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த சூழலில், சிஎஸ்கே அணியில் இருந்து சஞ்சு சாம்சன் டிரேட் மூலமாக வெளியேற இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
2025 ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் சஞ்சு சாம்சன் அங்கிருந்து வெளியேற விரும்பினார். அதன் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆர்ஆர் அணியுடன் பேசி ரூ. 18 கோடிக்கு வாங்கியது. இதையடுத்து 2026 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடினார். அவர் 2 சதம் மற்றும் ஒரு அரைசதம் உட்பட 14 இன்னிங்ஸ்களில் 477 ரன்களை குவித்து அசத்தினார்.
கேப்டன் பதவி கேட்கும் சஞ்சு சாம்சன்
முதலில் அந்த அணிக்கு வந்தபோது சஞ்சு சாம்சன் கேப்டன் கோரிக்கையை முன் வைக்கவில்லை. கடந்த ஐபிஎல்லிலும் சிஎஸ்கே அணி சொதப்பிய பின்னரே அவர்களிடம் கோப்டன் குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளராம். ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ருதுராஜ் கெய்க்வாட்டையே கேப்டனாக தொடர விரும்புவதாக தெரிகிறது. சஞ்சு சாம்சனை கேப்டனாக நியமிப்பது குறித்து சிஎஸ்கே பெரிதாக சிந்திக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் சஞ்சு சாம்சன் அதிருப்தியில் இருக்கிறாராம்.
சிஎஸ்கே-விடம் சஞ்சு சாம்சன் கோரிக்கை
இந்த சூழலில்தான், மும்பை இந்தியன்ஸ் அணி சஞ்சு சாம்சனை வாங்க முனைப்பு காட்டி வருகிறதாம். இதற்காக அவரின் நெருக்கமான நண்பரான ஜுபின் பருசாவிடம் பேசி வருகிறதாம். இந்த நிலையில், சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் 2 கோரிக்கைகளை முன் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இரண்டு கோரிக்கைகள்
1. ஐபிஎல் 2027 சீசனில் கேப்டன்ஸியை கொடுக்கவில்லை என்றால், என்னால் சிஎஸ்கே அணியில் தொடர முடியாது. கேப்டன் பதவி தந்தால் சிஎஸ்கே-வில் இருக்கிறேன் என கூறி உள்ளாராம்.
2. கேப்டன் பதவி மட்டுமல்லாமல், பேட்டிங் வரிசை, பந்துவீச்சு வரிசையை தீர்மானிக்கும் பொறுப்பை என்னிடம் கொடுக்க வேண்டும் என அவர் சிஎஸ்கே நிர்வாகத்திடம் கோரிக்கையாக முன் வைத்துள்ளாராம்.
மேலும், 2026 சீசனில் நான் கேப்டனாக இருந்திருந்தால், சிறப்பாக வழிநடத்தி அணியை பிளே ஆஃப் சுற்றுக்கு கொண்டு சென்றிருப்பேன். ஆனால் கடந்த சீசனில் செய்த தவறுகளை கூட சுட்டிக்கட்ட எனக்கு உரிமை வழங்கப்படவில்லை. அதனால் கேப்டன் பதவி கொடுத்தால் நான் அணியில் தொடர்ந்து விளையாடுவேன். இல்லையென்றால் என்னை டிரேட் மூலம் அல்லது ஏலத்திற்கு விட்டுவிடுங்கள் என கறாராக கூறி உள்ளாராம்.
ருதுராஜ் கெய்க்வாட்டும் அடம்
மறுபுறம் ருதுராஜ் கெய்க்வாட்டும் தனக்கு கேப்டன் பதவி வேண்டும். நிச்சயமாக 2027 ஐபிஎல்லில் அணியை பிளே ஆஃப் சுற்றுக்கு கொண்டு செல்வேன் என அணி நிர்வாகத்திடம் கூறி உள்ளாராம்.