இந்திய அணியின் வெற்றியை பறித்த... இளம் வீரர் சோனல் தினுஷ - யார் இந்த வில்லன்?
வெறும் 4 விக்கெட்டை வீழ்த்தினால் வெற்றி என இந்திய அணி கொண்டாட்டத்தில் இருந்த நிலையில், இன்று முழுவதும் பேட்டிங் செய்து இந்திய அணிக்கு பெரிய வில்லனாக மாறிவிட்டார் சோனல் தினுஷ. யார் இவர்...?
இந்திய அணியின் இலங்கை சுற்றுப்பயணம் இன்றுடன் நிறைவடைகிறது. முதல் டெஸ்டை வென்று 1-0 என முன்னிலை பெற்ற இந்திய அணி, கொழும்புவில் நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டியிலும் முதல் 4 நாள்களுக்கு ஆதிக்கம் செலுத்தியது.
ஆனால் இன்றைய (ஆக. 27) 5வது நாள் ஆட்டத்தில் இலங்கை அணி சிறப்பாக விளையாடி போட்டியை டிரா நோக்கி இழுத்துச் சென்றது. அதிலும் குறிப்பாக, பாலோ-ஆன் பெற்று 2வது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி நேற்றைய நாள் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 16 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றது.
மனதை வென்ற சோனல் தினுஷ
தற்போது 2வது டெஸ்ட் போட்டியே டிராவில் முடிந்திருக்கிறது. இதற்கு ஒற்றை காரணம், சோனல் தினுஷ எனும் இலங்கையின் இளம் வீரர்தான். முதல் போட்டியிலேயே சிறப்பாக விளையாடி கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அவர், இன்று திடகாத்திரமாக விளையாடி ஒட்டுமொத்த கிரிக்கெட் விரும்பிகளின் மனதையும் வென்றுவிட்டார்.
சோனல் தினுஷ குவித்த ரன்கள்
5வது நாள் ஆடுகளத்தில் இந்தியாவின் பலம்வாய்ந்த சுழற்பந்துவீச்சு தாக்குதலை தனது சிறப்பான ஸ்வீப் ஷாட்டால் எதிர்கொண்டு பதிலடி கொடுத்திருக்கிறார். முதல் போட்டியில் 100 & 84 ரன்களை குவித்த அவர், 2வது போட்டியில் 103 & 133* ரன்களை அடித்திருந்தார்.
அதாவது சோனல் தினுஷ இந்தியாவுக்கு எதிரான இந்த 4 இன்னிங்ஸில் 3 சதம், 1 சதத்தை அடித்து, பந்துவீச்சாளர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்துள்ளார். ஒரு நாட் அவுட். இத்தொடரில் மட்டும் 420 ரன்களை அடித்துள்ளார், சோனல் தினுஷ. இத்தொடரில் அவரது சராசரி 140 ஆகும்.
பௌலர்களை படுத்திய சோனல் தினுஷ
இடதுகை பேட்டரான இவர் வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு இரண்டுக்கு எதிராகவும் சிறந்த ஷாட்களை வைத்திருக்கிறார் என்பதால் ரன்களை எடுப்பதில் அவருக்கு சிரமமில்லை. திடமான ஆட்டத்தால் விக்கெட்டையும் அவ்வளவு எளிதாக பௌலர்களுக்கு அவர் கொடுக்கவில்லை.
5 டெஸ்டில் சோனல் தினுஷ
25 வயது இளம் வீரரான சோனல் தினுஷ கடந்த 2025ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் ஆண்டில் வங்கதேசத்திற்கு எதிராக அறிமுகமானார். தொடர்ந்து மேற்கு இந்திய தீவுகள் மற்றும் இந்தியா உடனான தொடர்களில் விளையாடி உள்ளார். அதாவது 5 டெஸ்ட் போட்டிகளில் அதாவது 9 இன்னிங்ஸில் 606 ரன்களை அடித்திருக்கும் சோனல் தினுஷவின் பேட்டிங் சராசரி 86.57 ஆகும்.
தற்போது நம்பர் 6 வீரராக களமிறங்கும் சோனல் தினுஷ நிச்சயம் இலங்கை அணியின் முக்கிய எதிர்கால நட்சத்திரமாக திகழ்கிறார். இன்னும் ஓடிஐ, டி20ஐ போட்டிகளில் சோனல் தினுஷ அறிமுகமாகவில்லை. முதல் தர போட்டிகளிலும் இவர் ஜொலித்திருக்கிறார்.
இந்தியாவின் வில்லன் ஏன்..?
69 போட்டிகளில் சோனல் தினுஷ 12 சதம், 20 அரைசதம் உள்பட 3,882 ரன்களை அடித்துள்ளார். இன்று இந்திய அணியிடம் இருந்து ஒரு டெஸ்ட் வெற்றியை மட்டும் சோனல் தினுஷ பறிக்கவில்லை. ஒருவேளை, இந்திய அணி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை குறைந்த புள்ளிகள் வித்தியாசதத்தில் தவறவிடும்பட்சத்தில், இந்திய அணியின் சாம்பியன்ஷிப்பை பறித்தவராக சோனல் தினுஷ இருப்பார் என்பது மறுக்க முடியாது.
எனினும் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.