SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

தொடரை வென்ற இந்திய ஓடிஐ அணி... நியூசிலாந்து மண்ணில் விடைபெற்றனர் RO-KO

நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் 5வது ஓடிஐ போட்டியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, தொடரையும் 3-1 என்ற கணக்கில் வென்றது.

Written By Sudharsan G
Published: Nov 15, 2026, 15:34 IST | Updated: Nov 15, 2026, 16:51 IST
Image Credit: IND vs NZ 5th ODI | Image Source : X
Join

India vs New Zealand ODI Series: நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் 5வது ஓடிஐ போட்டியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, தொடரையும் 3-1 என்ற கணக்கில் வென்றது.

ஏற்கெனவே, நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20ஐ தொடரை இந்திய அணி 3-2 என்ற கணக்கில் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

மவுண்ட் மவுங்கானுய் நகரில் இன்று நடந்த 5வது ஓடிஐ போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய நேரப்படி 7.30 மணிக்கு போட்டி தொடங்கியது. கடந்த போட்டியை போன்று இன்றும் இந்திய அணியின் டாப் ஆர்டர் கடுமையாக சொதப்பியது.

ரோஹித் சர்மா 7, விராட் கோலி 5, ருதுராஜ் 18, ஷ்ரேயாஸ் ஐயர் 22 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். மிடில் ஆர்டரில் அக்சர் படேல் 46 மற்றும் இஷான் கிஷன் 46 ரன்களை அடித்து ஆறுதல் அளித்தனர். நமன் திர் 22 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.

ஆகிப் நபி 5, யாஷ் தாக்கூர் டக்அவுட்டாகினர். கடைசியில் முகமது சிராஜ் 14, அர்ஷ்தீப் சிங் 14 ரன்களை எடுத்தனர். இவர்கள் அடித்த ரன்களே இந்திய அணியை காப்பாற்றியிருக்கிறது எனலாம்.

இந்திய அணி 42.1 ஓவர்களில்  209 ரன்களை எடுத்து ஆல்-அவுட்டானது. நியூசிலாந்து பந்துவீச்சில் ஜேக்கப் டபி மற்றும் கேப்டன் சான்ட்னர் தலா 3 விக்கெட்டை வீழ்த்தினர். மேத்யூ விஷர் 2 விக்கெட்டையும், பிளைர் டிக்னர் மற்றும் பிரேஸ்வெல் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

210 ரன்கள் என்ற இலக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு டாப் ஆர்டர் சற்று சொதப்பியது. டிம் சைபர்ட் 14, வில் யங் 22, நிக் கெல்லி 24 ரன்களை எடுத்தனர். பில் ஆலன் 1, பிரேஸ்வெல் 19, பாக்ஸ்கிராவுட் 31 ரன்களை எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

64 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்திருந்த நியூசிலாந்து 32வது ஓவரில் 119 ரன்களுக்கு 6 விக்கெட்டை இழந்தது. சான்ட்னர் ஓரளவு போராடினார். இருப்பினும் அதுவும் கைக்கொடுக்கவில்லை. 35வது ஓவரில்தான் ஸ்பின்னரையே ஷ்ரேயாஸ் ஐயர் கொண்டுவந்தார்.

48.1 ஓவரில் நியூசிலாந்து அணி 187 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இதனால், 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று, தொடரை கைப்பற்றியது. அர்ஷ்தீப் 3 விக்கெட்டையும், முகமது சிராஜ் மற்றும் அக்சர் படேல் தலா 2 விக்கெட்டையும், ஆகிப் நபி, யாஷ் தாக்கூர், நமன் திர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

அர்ஷ்தீப் சிங் ஆட்ட நாயகன் விருதை வென்றார். தொடரில் மூன்று இன்னிங்ஸ்களில் 9 விக்கெட்டை வீழ்த்திய குர்னூர் பிரர் தொடர் நாயகன் விருதை வென்றார். 2019ஆம் ஆண்டுக்கு பிறகு நியூசிலாந்து மண்ணில் இந்திய அணி ஓடிஐ தொடரை கைப்பற்றியிருக்கிறது.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

ZEENEWS TRENDING STORIES