SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

Cricket Record : 0 பந்தில் விக்கெட்!விராட் கோலி செய்த அதிசய சாதனை - எப்படி தெரியுமா?

Virat kholi Bowling Record : விராட் கோலி 0 பந்தில் விக்கெட் வீழ்த்தில் கிரிக்கெட் உலகில் ஒரு அதிசய சாதனைக்கு சொந்தக்காரராக உள்ளார். இந்த சாதனை எப்போது நிகழ்த்தினார் என்பது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்...

Written By Karthikeyan Sekar
Published: Aug 07, 2026, 02:27 PM IST | Updated: Aug 07, 2026, 02:38 PM IST
Join

விராட் கோலி என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது அவருடைய அதிரடியான பேட்டிங்கும், மலைக்க வைக்கும் சதங்களும் தான். ஆனால், பந்துவீச்சில் அவர் செய்துள்ள ஒரு விசித்திரமான மற்றும் தனித்துவமான சாதனையை உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களால் கூட இதுவரை முறியடிக்க முடியவில்லை. சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில், ஒரு லீகல் பந்து கூட வீசாமல் விக்கெட் வீழ்த்திய ஒரே வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை விராட் கோலி தன்வசம் வைத்துள்ளார். இந்த சுவாரஸ்யமான 'மேஜிக்' சம்பவம் நடந்தது எப்படி என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

மான்செஸ்டரில் நடந்த மேஜிக்

கடந்த 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி, மான்செஸ்டர் நகரில் இங்கிலாந்துக்கு எதிரான சர்வதேச டி20 போட்டி நடைபெற்றது. ஆட்டத்தின் 8-வது ஓவரை வீசுவதற்காக அன்றைய இந்திய அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி, பகுதிநேர பந்துவீச்சாளரான விராட் கோலியை அழைத்தார். அப்போது இங்கிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கெவின் பீட்டர்சன் களத்தில் இருந்தார். கோலி வீசிய தனது ஓவரின் முதல் பந்தே 'லெக் சைட்' திசையில் ஒய்டாக சென்றது.

தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங்

பந்தை அடிப்பதற்காக பீட்டர்சன் க்ரீஸை விட்டு வெளியே வர, அதை கச்சிதமாகப் பிடித்த கேப்டன் தோனி மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்தார். ஐசிசி (ICC) விதிகளின்படி, ஒரு ஒய்டு பந்து என்பது பந்துவீச்சாளரின் கணக்கில் ஒரு பந்தாக எடுத்துக்கொள்ளப்படாது, ஆனால் அதில் ஸ்டம்பிங், ரன்அவுட் முறையில் விக்கெட் வீழ்த்த முடியும்.

இதன் காரணமாக, கோலி வீசிய அந்தப் பந்து 0 பந்து எனக் கணக்கிடப்பட்டது. ஆனால், பீட்டர்சனின் விக்கெட் கோலியின் கணக்கில் சேர்ந்தது. இதன் மூலம் சர்வதேச டி20 போட்டியில் "0 பந்தில் 1 விக்கெட்" எடுத்த முதல் பவுலர் என்ற அரிய உலக சாதனையை விராட் கோலி படைத்தார்.

முதல் பந்திலேயே விக்கெட்

மேலும், விராட் கோலி தனது சர்வதேச டி20 வாழ்க்கையில் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் கைப்பற்றினார் என்பதும், அது ஒய்டு பந்தில் கிடைத்தது என்பதும் கூடுதல் சிறப்பு. ஒரு பகுதிநேர பந்துவீச்சாளரான விராட் கோலி, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 5 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். கடைசியாக 2023 ஒருநாள் உலகக்கோப்பையில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் விக்கெட் வீழ்த்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

கடந்த 2024 டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்ற பிறகு, விராட் கோலி சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது அவர் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார்
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.

ZEENEWS TRENDING STORIES