SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

சாமியார் ஆசிரமத்திற்கு ரூ.5 கோடி வாங்கினாரா விராட் கோலி...? உண்மை என்ன?

2023ஆம் ஆண்டில் முதல்முறையாக பிரேமானந்த் மகாராஜ் ஆசிரமத்திற்கு செல்வதற்கு விராட் கோலி ரூ.5 கோடி பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்து விராட் கோலி தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

Written By Sudharsan G
Published: Oct 07, 2026, 03:19 PM IST | Updated: Oct 07, 2026, 03:29 PM IST
Join

Premanand Maharaj - Virat Kohli Controversy: பிரபல சாமியார் பிரேமானந்த் மகாராஜ் உத்தர பிரதேசத்தின் பிருந்தாவனத்தில் ஆசிரமம் நடத்தி வருகிறார். இவரது ஆசிரமத்திற்கு பக்தர்களுடன் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் உள்ளிட்டோர் வருகை தருவார்கள்.

அதில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மற்றும் அவரது மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மாவும் பிரேமானந்த் மகாராஜின் ஆசிரமத்திற்கு அடிக்கடி வருகை தருவது உண்டு.

மேலும் படிக்க | இந்திய டெஸ்ட் அணிக்குள் வரும் 23 வயது புயல்? அடுத்த புஜாரா ரெடி.. கம்பீர் அதிரடி முடிவு!

தொடரும் சர்ச்சைகள்

அந்த வகையில், பிரேமானந்த் மகாராஜை சந்திப்பதற்காக விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஆகியோர் 5 கோடி ரூபாயை பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், அதற்கு விராட் கோலி தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.

பிரேமானந்த் மகாராஜின் சீடரான ரஸிக் துலாரி மர்மமான முறையில் உயிரிழந்தைத் தொடர்ந்து, அவரது ஆசிரமம் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இவர் கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி அன்று ஆசிரமத்தில் 4வது மாடியில் இருந்து தவறி விழுந்து மர்மமான முறையில் உயிரிழந்தாக கூறப்படுகிறது.

ஒது ஒருபுறம் இருக்க, விராட் கோலி இந்த ஆசிரமத்திற்கு கடந்த 2023ஆம் ஆண்டில் முதல்முறையாக வருகை தருவதற்கு ராஜஸ்தானைச் சேர்ந்த தனியார் நிறுவனம் மற்றும் கட்டுமானத் துறையுடன் தொடர்புடைய ஒரு குழு ரூ.5 கோடி வரை செலவு செய்ததாக ஸ்ரீ கிருஷ்ண ஜன்மபூமி சங்கர்ஷ் நியாஸ் அமைப்பின் தலைவராக கூறப்படும் ஃபலாஹாரி மகராஜ் தினேஷ் சர்மா குற்றஞ்சாட்டியிருப்பதும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆசிரமத்திற்கு புகழையும் செல்வாக்கையும் அதிகரிப்பதற்காக விராட் கோலி அங்கு அழைத்துவரப்பட்டதாகவும், இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாதத்திற்கு அவர் கடிதம் எழுதியதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார்.

விராட் கோலி தரப்பின் விளக்கம்

ஃபலாஹாரி மகராஜ் தினேஷ் சர்மா என்பவரின் இந்த குற்றச்சாட்டுக்கு விராட் கோலி தரப்பில் அவரது செய்தித் தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார். விராட் கோலி மற்றும் அனுஷ்கா மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் முற்றிலும் தவறானவை, ஆதாரமற்றவை மற்றும் உண்மைக்கு புறம்பானவை என்றும் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

மேலும் படிக்க | அதிருப்தியில் அபிஷேக் சர்மா.. SRHல் இருந்து MI செல்கிறாரா? ரூ. 30 கோடிக்கு டிரேட்?

பிரேமானந்த மகராஜை விராட் கோலி சந்திப்பதற்கு எந்தவிதமான பணப் பரிவர்த்தனையும் காரணம் இல்லை என்றும், அவரது தனிப்பட்ட நம்பிக்கையும் மரியாதையுமே அதற்குக் காரணம் என்றும் விராட் கோலி தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

*விராட் கோலி செய்தித்தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கை (Image Source: X/@CricCrazyJohns)

"விராட் கோலி, பிரேமானந்த மகராஜ் மீது கொண்டுள்ள ஆழ்ந்த நம்பிக்கை மற்றும் மரியாதையின் காரணமாக மட்டுமே அவரை சந்தித்து வருகிறார்" என விராட் கோலி தரப்பு விளக்கம் அளித்தது. இதுபோன்ற குற்றச்சாட்டுகளை வெளியிடுவதற்கு முன்னர் ஊடகங்கள் உரிய முறையில் உண்மைத்தன்மையை சரிபார்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

விராட் கோலி - அனுஷ்காவின் வருகைகள்

கடந்த 2023ஆம் ஆண்டில் ஜனவரி 4ஆம் தேதி பிருந்தாவனத்தில் உள்ள பிரேமானந்த மகாராஜை அவரது ஆசிரமத்தில் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா முதல்முறையாக சந்தித்து ஆசி பெற்றனர். அதன்பின் இருவரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் பிரேமானந்த மகாராஜை சந்தித்து வந்துள்ளனர்.

ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் போதும், லண்டனில் இருந்து இந்தியாவுக்கு வருகை தரும்போதும் அவர்கள் ஆசிரமத்திற்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அவர்கள் ஆசிரமத்திற்கு  வரும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பலமுறை வைரலாகி உள்ளன.

கடைசியாக வந்தது எப்போது?

கடைசியாக, இருவரும் கடந்த ஜூலை 22ஆம் தேதி பிரேமானந்த் மகாராஜை அவரது ஆசிரமத்தில் சந்தித்து ஆசி பெற்றனர். அப்போது பிருந்தாவனத்தில் மழை பெய்துகொண்டிருந்த நிலையிலும், காலில் செருப்பு இல்லாமல் விராட் கோலி நடந்து சென்று மகாராஜிடம் ஆசி பெற்றதும் கவனம் பெற்றது.

ஆதாரம் ஏதும் வெளியாகவில்லை

விராட் கோலி 2023ஆம் ஆண்டில் முதல்முறையாக ஆசிரமத்திற்கு விசிட் அடித்ததற்கு 5 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாக வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு இதுவரை பொதுவெளியில் உறுதிப்படுத்தப்பட்ட பணப்பரிவர்த்தனை ஆவணம் அல்லது ஆதாரம் எதுவும் வெளியாகவில்லை.

மேலும் படிக்க | இந்திய அணியின் மோசமான டெத் பௌலிங்... கில் - கம்பீர் செய்ய வேண்டியது என்ன? Explained

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

ZEENEWS TRENDING STORIES