• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /இந்தியா
  • /ரூ.7 கோடி கேட்டு.. லாரன்ஸ் பிஷ்னோய் பெயரில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொலை மிரட்டல்! போலீஸ் விசாரணை

ரூ.7 கோடி கேட்டு.. லாரன்ஸ் பிஷ்னோய் பெயரில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொலை மிரட்டல்! போலீஸ் விசாரணை

Arvind Kejriwal Threat: ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு, லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பெயரில் ரூ.7 கோடி வசூல் கோரி கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் மற்றும் தொலைபேசி மூலம் வந்த இந்த மிரட்டலில், கேஜ்ரிவாலும் அவரது மகளும் குறிவைக்கப்பட்டுள்ளனர். தொடக்கக்கட்ட விசாரணையில் மிரட்டல் போலியானதாக இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில், போலீசார் முழுமையான விசாரணை நடத்தி வருகின்றனர்.

Written ByShiva Murugesan
Published: Nov 12, 2026, 05:29 PM IST|Updated: Nov 12, 2026, 05:31 PM IST
joinshare
ரூ.7 கோடி கேட்டு.. லாரன்ஸ் பிஷ்னோய் பெயரில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொலை மிரட்டல்! போலீஸ் விசாரணை
Image Credit: File (AAP) | Kejriwal Receives Death Threat in Lawrence Bishnoi Gang's Name

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

டிஜிட்டல் ஊடகத்துறையில் அனுபவம் வாய்ந்த செய்தி நிபுணர் மற்றும் இதழாளர். தரவு அடிப்படையிலான செய்திகள் (Data-driven news), எஸ்சிஓ (SEO) உத்திகள் மற்றும் டிஜிட்டல் வளர்ச்சி மேலாண்மையில் (Digital Growth Management) நிபுணத்துவம் பெற்றவர். தற்போது முன்னணி ஊடக நிறுவனத்தில் செய்தி மேலாண்மை மற்றும் டிஜிட்டல் தளங்களை வழிநடத்தி வருகிறார்.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
Explained : தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் வரப்போகுதா? மழை பொய்த்தால் இதுதான் நிலை..

Explained : தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் வரப்போகுதா? மழை பொய்த்தால் இதுதான் நிலை..

2

CM விஜய்யின் சிறப்பு வட்டி தள்ளுபடி... வீடு, மனை ஒதுக்கீடுதாரர்களுக்கு ஜாக்பாட்

3

செஞ்சியில் மீண்டும் அதிர்ச்சி! 7 வயது சிறுமியை கடத்த முயற்சி.. தப்பித்தது எப்படி? இருவர் கைது

4

என்விடியா CEO விவகாரத்தில் கிளம்பும் பூதம்: இரண்டாவது கள்ள உறவு, மகன்-மகளின் சம்பளம்... பறிபோகும் பதவி?

5

ரூ.7 கோடி கேட்டு.. லாரன்ஸ் பிஷ்னோய் பெயரில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொலை மிரட்டல்! போலீஸ் விசாரணை

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

டெல்லி முன்னாள் முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக பணம் வழங்காவிட்டால் அவரையும் அவரது குடும்பத்தினரையும் குறிவைப்போம் என்றும், முதலில் அவரது மகளை கொலை செய்வோம் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு வந்த மிரட்டல் என்ன?

ஆம் ஆத்மி கட்சியின் திலக் நகர் தொகுதி எம்.எல்.ஏ ஜர்னெயில் சிங் அளித்த புகாரின்படி, 2026 நவம்பர் 6 ஆம் தேதி மாலை அவரது தனிப்பட்ட மொபைல் எண்ணிற்கு அடையாளம் தெரியாத நபரிடமிருந்து அழைப்பும் வாட்ஸ்அப் செய்தியும் வந்துள்ளது.

அந்த நபர் தன்னை "லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவன்" என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, அரவிந்த் கேஜ்ரிவால் ரூ.7 கோடி பணம் வழங்க வேண்டும் என்றும், இல்லையெனில் அவரையும் அவரது மகளையும் கொலை செய்வோம் என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது.

டெல்லி போலீசார் வழக்கு பதிவு

இந்தப் புகாரின் அடிப்படையில் மொஹாலி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் கீழ் மிரட்டிப் பணம் பறித்தல் (பிரிவு 308(4)), குற்றவியல் மிரட்டல் (பிரிவுகள் 351(2), 351(3), 351(4)), திட்டமிட்ட குற்றச் செயல் (பிரிவு 111(2)) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 66D ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க - Explained : நடிகர் டைகர் ஷ்ராஃப் மீது துப்பாக்கிச்சூடு! வீடியோ வெளியிட்ட கேங்ஸ்டர்-நடந்தது என்ன?

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு வந்த மிரட்டல் போலியானதா?

சில ஊடக அறிக்கைகளின்படி, ஆரம்பகட்ட விசாரணையில் இந்த மிரட்டல் உண்மையான "லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலிடமிருந்து வரவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் சுனில் குமார் தலைமையிலான குழுவினர் அழைப்பு விவரங்கள் மற்றும் ஐபி முகவரிகளை ஆய்வு செய்ததில், இந்த மிரட்டல் ஹரியானாவின் ரோஹ்தக் பகுதியிலிருந்து ஒருவரால் போலியாக விடுக்கப்பட்டிருக்கலாம் என ஐஏஎன்எஸ் (IANS) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால் காவல்துறை தரப்பிலிருந்து இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை. ஏற்கனவே கெஜ்ரிவாலுக்கு இசட் (Z) பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த மிரட்டலுக்குப் பின்னால் உண்மையில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து போலீஸ் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

லாரன்ஸ் பிஷ்னோய் யார்?

லாரன்ஸ் பிஷ்னோய் இந்தியாவின் மிகவும் பிரபலமான மற்றும் சர்ச்சைக்குரிய கும்பல் தலைவர்களில் ஒருவராக கருதப்படுகிறார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அவர், பல்வேறு கொலை, வசூல், மிரட்டல் மற்றும் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என விசாரணை அமைப்புகள் கூறுகின்றன.

சிறையில் இருந்தபோதும் அவரது கும்பல் இந்தியாவின் பல மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் செயல்படுவதாக பாதுகாப்பு அமைப்புகள் பலமுறை தெரிவித்துள்ளன. குறிப்பாக வணிகர்கள், திரைப்பட பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு மிரட்டல் விடுத்த சம்பவங்களால் அவரது பெயர் அடிக்கடி செய்திகளில் இடம்பிடித்து வருகிறது.

லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் மிரட்டல் பட்டியல்

சல்மான் கான்

பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு பலமுறை மிரட்டல் செய்திகள் மற்றும் கடிதங்கள் அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

கிப்பி கிரேவால்

பஞ்சாபி பாடகர் மற்றும் நடிகரான கிப்பி கிரேவாலின் கனடா இல்லம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் பிஷ்னோய் கும்பலின் பெயர் பேசப்பட்டது.

ஏ.பி. தில்லோன்

பிரபல பஞ்சாபி பாடகர் ஏ.பி. தில்லோனின் சொத்துகளை குறிவைத்து மிரட்டல் விடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

சித்தூ மூஸ்வாலா வழக்கு

பஞ்சாபி பாடகர் சித்தூ மூஸ்வாலா கொலை வழக்கில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் பெயர் முக்கியமாக விசாரணையில் இடம்பெற்றது.

கர்னி சேனா தலைவர்

ராஜஸ்தானில் ராஷ்ட்ரிய ராஜ்புத் கர்னி சேனா தலைவர் சுக்தேவ் சிங் கோகமேடி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திலும் இக்கும்பலுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது

பாபா சித்திக்

மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான பாபா சித்திக் கொல்லப்பட்ட வழக்கிலும் இக்கும்பலின் பெயர் அடிபட்டது.

தொழிலதிபர்கள் மற்றும் வர்த்தகர்கள்

வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வணிகர்களிடம் பணம் பறிப்பு மற்றும் மிரட்டல் தொடர்பான வழக்குகளில் இந்த கும்பலின் பெயர் அடிக்கடி வெளிவந்துள்ளது.

அரசியல் சர்ச்சையும் கேஜ்ரிவாலின் குற்றச்சாட்டுகளும்

லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை மையமாகக் கொண்டு மத்திய அரசு மற்றும் பாஜக மீது அரவிந்த் கேஜ்ரிவால் பலமுறை விமர்சனக் கருத்துகளை முன்வைத்துள்ளார். நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கு பாதிக்கப்படுவதாகவும், பிரபல கும்பல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை தேவை என்றும் அவர் வலியுறுத்தி வந்தார்.

சமீபத்தில் நடிகர் டைகர் ஷெராஃப் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாகவும் மத்திய அரசை அவர் சாடியிருந்தார். குறிப்பாக, அக்டோபர் 19-ம் தேதி தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டிருந்த கெஜ்ரிவால், சட்டம்-ஒழுங்கைக் கட்டுப்படுத்த முடியாதவர்கள் நாட்டின் மிகப்பெரிய கேங்ஸ்டருக்குப் பாதுகாப்பு அளிப்பதாகவும், அவர் சிறையிலிருந்தபடியே உலகம் முழுவதும் குற்றங்களைச் செய்ய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கடுமையாக விமர்சித்திருந்தார்.

போலீஸ் விசாரணையின் தற்போதைய நிலை

தற்போது கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில், இந்த மிரட்டல் உண்மையில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலிடமிருந்து வந்ததா அல்லது அவர்களின் பெயரை தவறாக பயன்படுத்தி யாராவது பணம் பறிக்க முயன்றார்களா என்பது இன்னும் உறுதியாகவில்லை. போலீசாரின் முழுமையான விசாரணைக்குப் பிறகே உண்மை நிலை வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க - தூக்கத்திலேயே உயிரிழந்த 33 வயது பிரபல நடிகர்! சோகத்தில் திரையுலகம்..

Add Zee News as a Preferred Source
TAGS:
Aam Aadmi Party