SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

இனி ரூ.10க்கு ஆவின் பால் வாங்கலாம்.. தானியங்கி இயந்திரம் அறிமுகம்.. தமிழக அரசு அதிரடி

Aavin MilK Vending Machine: நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் மூலம் தானியங்கி பால் வழங்கும் நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் மூலம் ரூ.10க்கு பால் வாங்கலாம்.

Written By Umabarkavi K
Published: Aug 20, 2026, 11:10 AM IST | Updated: Aug 20, 2026, 11:20 AM IST
Join

Aavin MilK Vending Machine: தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ஆவின் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு கீழ் ஆவின் நிறுவனங்கள செயல்பட்டு வருகிறது. குறைந்த விலையில் மக்களுக்கு ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

ஆரஞ்சு, கிரீன், நீல நிற, இளஞ்சிவுப்பு நிறத்தில் ஆவின் பால் பாக்கெட் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திண்டுக்கல், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் வகையில், இரு மாவட்டங்களில் தானியங்கி பால் இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் தானியங்கி பால் விநியோக இயந்திரம்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகராட்சிக்குட்பட்ட கவிஞர் தியாகராஜ சாலையில் ஆவின் நிறுவனத்தின் சார்பில் அமைந்துள்ள நவீன ஆவின் பாலகத்தில் நெகிழிக்கு மாற்றாக 24 மணி நேரமும் செயல்படக்கூடிய தானியங்கி பால் விநியோக இயந்திரத்தினை (Automatic Milk Vending Machine) மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி  அறிமுகம் செய்து வைத்தார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் நெகிழி (பாலீத்தின்) உபயோகத்தினை குறைக்கவும், சுற்றுச்சூழல் மாசடைவதைத் தடுக்கவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக ஆவின் நிறுவனத்தின் சார்பில், கொடைக்கானல் பகுதியில் அமைந்துள்ள அதிநவீன பாலகத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய தானியங்கி பால் விநியோக இயந்திரமானது (Automatic Milk Vending Machine) ரூ.5.2 இலட்சம் மதிப்பீட்டில் பொது மக்களின் பயன்பாட்டிறக்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

10 ரூபாயில் ஆவின் பால் விற்பனை

இந்த இயந்திரத்தில் 500 மி.லி பால் 30 ரூபாயாகவும், ஒரு லிட்டர் பால் 60 ரூபாயாகவும் பால் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 500 மி.லி பால் வேண்டுமென்றால் ரூபாய் 10 மற்றும் 20 ரூபாய்களையும், ஒரு லிட்டர் வேண்டுமென்றால் ரூபாய் 50 மற்றும் 10 ரூபாய்களையும் செலத்தி பாத்திரத்தில் பாலை சேகரித்துக் கொள்ளலாம். 

மேலும், க்யூஆர் கோடை ஸ்கேன் செய்தும், மொபைல் போன் செயலி மூலம் பணம் செலுத்தும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக 24 மணி நேரமும் பால் விற்பானை செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தானியங்கி இயந்திரம் மூலம் பால் எப்படி வாங்கலாம்?

மேலும், பொதுமக்கள் இந்த இயந்திரத்தினை பயன்படுத்தும் முறையினை பொருத்து மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் தானியங்கி இயந்திரம் நிறுவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வியந்திரத்தின் மூலம் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் எந்நேரமும் பாட்டில்கள் அல்லது பாத்திரங்களைக் கொண்டு நேரடியாகப் பாலினை பெற்றுக்கொள்ள முடியும்.

எனவே, ஆவின் நிறுவனத்தின் சார்பில் நிறுவப்பட்டுள்ள தானியங்கி பால் விற்பானை இயந்திரத்தினை  முழுமையாக பயன்படுத்திக்கொண்டு சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கும் பிளாஸ்டிக் கொடைக்கானல் பகுதியை உருவாகுவதற்கும் அனைவரும் ஒருங்கிணைந்து செயலாற்றிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

நீலகிரியிலும் ஆவின் பால் தானியங்கி இயந்திரம்

நீலகிரி மாவட்டம், உதகை சேரிங்கிராஸ் உழவர் சந்தை அருகில் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் சார்பில், தானியங்கி பால் வழங்கும் நிலையம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த தானியங்கி பால் வழங்கும் நிலையத்தில் பொதுமக்கள் தாங்கள் கொண்டு வரும் பாத்திரத்தில் பாலை வாங்கி செல்லலாம். 

பால் வாங்க வருபவர்கள் ரொக்கமாகவும், முன் தொகை செலுத்தும் அட்டை மூலமாகவும், G-Pay, Phone Pay மின்னணு பரிவர்த்தனை (UPI) என மூன்று வழிகளில் பணம் செலுத்தலாம். இந்த இயந்திரத்தில் குறைந்த பட்சம் ரூ. 10/- முதல் கையில் உள்ள தொகைக்கேற்ப பாலை வாங்கி செல்லாம். 

முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், ஆவின் நிறுவனத்தின் சார்பில், பால், பால் பவுடர், நெய், பால்கோவா, ஐஸ்கிரீம், பிஸ்கட் உள்ளிட்ட அனைத்து ஆவின் பொருட்களை விற்பனை செய்யும் நடமாடும் வாகனமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES