உயரப்போகும் பால் விலை? லிட்டருக்கு ரூ.5 உயர்வா? ஆவின் நிர்வாகம் எடுத்த முடிவு!
Aavin Milk Price Hike: ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்த அரசுக்கு ஆவின் நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது. இதனால், ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.5 உயருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
Aavin Milk Price Hike: தமிழக அரசின் கூட்டுறவுத்துறையின் கீழ் ஆவின் நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. ஆவின் நிர்வாகம் குறைந்த விலையில் பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. குறைந்த விலையில் பால் விற்பனை இருப்பதால், மக்களுக்கு பெரிதும் உதவி வருகிறது. அண்மையில் தான், பால் பொருட்களின் விலையை ஆவின் நிர்வாகம் உயர்த்தியது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், இந்த விலை உயர்வை ஆவின் நிர்வாகம் கொண்டு வந்தது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆவின் பால் விலை உயர்த்த கோரிக்கை
இதனை தொடர்ந்து, தற்போது பால் விலையை உயர்த்த ஆவின் நிர்வாகம் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், ஆவின் பால் விலை உயருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பால் விலையை லிட்டருக்கு ஐந்து ரூபாய் உயர்த்த, அரசுக்கு ஆவின் நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பால் குறைந்த விலையில் விற்கப்படுவதால், விவசாயிகள், ஆவின் நிர்வாகம், பாலகங்களை நடத்துவோர் சிரமத்திற்கு உள்ளாகுகின்றனர். தற்போது, பால் கொள்முதல் விலையை அரசு உயர்த்திவிட்டது. அத்துடன், ஆவின் நிர்வாகம் மற்றும் பாலகங்களின் நலனை கருத்தில் கொண்டு, பால் விலையை உயர்த்த வேண்டும் என என அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக ஆவின் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.
மேலும் படிக்க: டாஸ்மாக் கடை அருகே பார் அமைப்பதில் முக்கிய மாற்றம்! புதிய விதிகள் வெளியீடு
இதனால், லிட்டருக்கு ஐந்து ரூபாய் உயர்த்த ஆவின் நிர்வாகம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அரசு ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில், ஆவின் பால் உயரும். இந்த பரிந்துரையை தமிழக அரசு ஏற்றுக் கொண்டால், அடுத்த சில நாள்களில் ஆவின் நிறுவன பால் விலை உயர்த்தப்படும் என்று கூறப்படுகிறது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவிக்கின்றனர்.
ஆவின் பால் விலை விவரம்
| பால் வகை | விலை பட்டியல் |
| நீல பாக்கெட் பால் (அரை லிட்டர்) | ரூ.20 |
| பச்சை மற்றும் ஊதா நிற பாக்கொட் பால் (அரை லிட்டர்) | ரூ.24 |
| ஆரஞ்சு நிற பால் பாக்கெட் (அரை லிட்டர்) | ரூ.30 |
அன்புமணி கண்டனம்
இதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்த அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசை ஆவின் நிறுவனம் கேட்டுக் கொண்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. ஆவின் நிறுவனத்தின் இழப்பைக் குறைக்க வேண்டும்; இலாபத்தில் இயக்க வேண்டும் என்பதற்காக, பிற வழிகளை ஆராயாமல் விலையை உயர்த்த வேண்டும் என்ற பரிந்துரை ஏழை மக்களின் நலனுக்கு எதிரானது.
மேலும் படிக்க: தீபாவளி பலகாரம் தயாரிப்போர், பொதுமக்கள் கவனத்திற்கு! அரசின் கடும் எச்சரிக்கை
தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது ஆவின் பால் விலை மிகவும் குறைவாக இருப்பதால், அது ஏழை& நடுத்தர மக்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக உள்ளது. ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தப் பட்டால், அது அதிகபட்சமாக 12.50% உயர்வாக இருக்கும். அதை சாதாரண மக்களால் தாங்க முடியாது. அதிலும் குறிப்பாக அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அனைத்து பொருள்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், ஆவின் பாலின் விலையும் உயர்த்தப்பட்டால், அது மக்களைக் கடுமையாக பாதிக்கும்.
கடந்த ஆண்டில் ஆவின் நிறுவனத்தின் மாநில அலகு ரூ. 120 கோடி இழப்பை சந்தித்துள்ளது. அதே நேரத்தில் மொத்தமுள்ள 27 மாமாவட்ட அலகுகளில் 7 அலகுகள் ரூ.23 கோடி இழப்பை எதிர்கொண்டுள்ள நிலையில், மீதமுள்ள 20 மாவட்ட அலகுகள் 53.20 கோடி இலாபம் ஈட்டியுள்ளன. பால் என்பது இன்னும் பல மடங்கு முக்கியமான அடிப்படைத் தேவை ஆகும். அதைக் கருத்தில் கொண்டு ஆவின் நிறுவனத்திற்கும் தமிழக அரசு மானியம் வழங்க வேண்டும். பால் விலையை உயர்த்த வேண்டும் என்ற ஆவின் நிறுவன பரிந்துரையை ஏற்கக் கூடாது" என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: தீவிரமாகும் முரசு புயல்! எப்போது கரையை கடக்கும்? கனமழை வெளுக்கும்.. வெதர்மேன் அலர்ட்