SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

நவம்பர் 24 பிரம்மாண்ட சூப்பர்மூன் : எந்த நேரத்தில், எப்படி, எப்போது பார்ப்பது..?

நவம்பர் 24ஆம் தேதியான நாளை, வானில் அரிய சூப்பர் மூன் தோன்ற இருக்கிறது. இது குறித்த முழு தகவலையும், எந்த நேரத்தில் அந்த சூப்பர் மூனை பார்க்கலம் என்பது குறித்தும் இங்கு தெரிந்து கொள்வோம்.

Written By Yuvashree M
Published: Nov 23, 2026, 11:50 IST | Updated: Nov 23, 2026, 12:00 IST
Image Credit: Beaversupermoon | Source X Page
Join

நம்மில் பலருக்கு வானத்தை அன்னாந்து பார்த்து கொஞ்ச நேரம் அந்த நிலாவையும், நட்சத்திரங்களையும் உற்று பார்க்கும் பழக்கம் இருக்கும். அதிலும், பௌர்ணமி தினங்களில் அந்த முழு நிலவை பார்த்தாலே மனம் பரபரத்து, சொல்ல முடியாத ஆனந்தத்தில் மூழ்கி விடும். அவர்களுக்கு ஒரு குட் நியூஸ் வந்துள்ளது. நவம்பர் 24ஆம் தேதியான நாளை சூப்பர் மூன் வானத்தில் தெரிய இருக்கிறது.

சூப்பர் மூன் என்றால் என்ன..?

சூப்பர் மூன் என்பது, நிலவு தனது நீள்வட்ட சுற்றுப்பாதையில் பூமிக்கு மிக அருகில் வரூம் போது, முழு நிலவாக தோன்றும் நிலையாகும். இதனால், நிலவு வழக்கத்தை விட சற்று பெரிதாகவும், அதிக பிரகாசமாகவும் தெரியும். இதற்கு அறிவியல் பெயர், பெரிஜி முழு நிலவு என்பதுதான். சூப்பர் மூன் என்பது, பொதுமக்கள் பயன்படுத்தும், பொதுவான மற்றும் பிரபலமான பெயராகும்.

இது ஏற்பட காரணம் என்னவென்றால், நிலவு, பூமியை சுற்றும் பாதை முழு வட்டமாக இல்லாமல் நீள்வட்டமாக இருப்பதால், பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான தூரம் மாறுபடுகிறது.

மேலும் படிக்க | கேரளாவில் பறவைக் காய்ச்சல் எதிரொலி: தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு

சாதாரண முழு நிலவை விட, சூப்பர் மூன் சுமார் 8% பெரியதாகவும், 16% அதிக பிரகாசமாகவும் இருக்கும். வருடத்தின் மிக சிறிய முழு நிலவுடன் (மைக்ரோமூன்) ஒப்பிடும் போது, இது 14% வரை பெரிதாகவும், 30 சதவீதம் வரை அதிக பிரகாசமாகவும் தெரியும்.

பொதுவாக தோன்றும் முழு நிலவை விட, இந்த சூப்பர்மூன் 14 சதவீதம் பெரியதாகவும், 30 சதவீதம் அதிக் பிரகாசத்துடனும் தெரியும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்திய நேரப்படி, நவம்பர் 24ஆம் தேதி, இரவு 8.23 மணிக்கு, இந்த முழு நிலவு உச்சநிலையை அடையும் என கூறப்படுகிறது.

இந்த நவம்பர் மாதத்தில் வரும் முழு நிலவுக்கு ‘பீவர் மூன்’ (Beaver Moon) என பெயரிடப்பட்டுள்ளது. குளிர்காலத்துக்கு முன்பு, நீர்நாய்கள் (Beavers) எனப்படும் விலங்குகள் சுறுசுறுப்பாக செயல்படும். இந்த காலத்தில் இந்த முழு நிலவானது தோன்றுவதால் இதற்கு பீவர் சூப்பர்மூன் எனும் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

எப்படி பார்ப்பது..?

இந்த சூப்பர் மூனை பார்க்க நமக்கு தொலைநோக்கி எதுவும் தேவை கிடையாது. வானம், மேகமூட்டமின்றி தெளிவாக இருந்தாலே போதும். இதனை தெளிவாகவே காணலாம். இந்த சூப்பர் மூனை காண, மாணவர்களும் பொதுமக்களும் ஆர்வத்துடன் இருக்கின்றனர். நவம்பர் 24ஆம் தேதியான நாளை, இந்த சூப்பர் மூன்-ஐ, இரவு 8.23 மணிக்கு மேல் காணலாம் என கூறப்படுகிறது.

எந்தெந்த நாடுகள் பார்க்க முடியும்..?

பீவர் சூப்பர் மூன்-ஐ, இந்தந்த நாடுகள்தான் பார்க்க முடியும் எனும் அவசியம் இல்லை. எந்த நாட்டிலும், வானம் தெளிவாக இருக்கும் போது இரவு நேரத்தில் இதை காண முடியும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

அடுத்த சூப்பர் மூன் எப்போ..?

நவம்பர் 24ஆம் தேதி தோன்றும் சூப்பர் மூன்-ஐ தொடர்ந்து, வரும் டிசம்பர் 24ஆம் தேதியும் பெரிய சூப்பர் மூன் தோன்ற இருபப்தக பிர்லா கோளரங்க வானியல் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க | பேரூராட்சி ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு! கட்டாய இடமாற்றம் குறித்த புதிய விதிமுறைகள் Explained

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

ZEENEWS TRENDING STORIES